பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஸ்பரிஸத்தைப் போக்குவதனால் நுகர்ச்சி போக்கப்படுகின்றது. நுகர்ச்சியைப் போக்குவதனால் வேட்கை போக்கப்படுகின்றது. வேட்கையைப் போக்குவதனால் பற்று போக்கப்படுகின்றது. பற்றைப்போக்குவதனால் கருமத்தொகுதி போக்கப்படுகின்றது. கருமத் தொகுதியை போக்குவதனால் தோற்றம் போக்கப்படுகின்றது. தோற்றத்தை போக்குவதனால் பிறப்பு போக்கப்படுகின்றது. பிறப்பைப் போக்குவதனால் மூப்பும், மரணமும், வலியும் அழுகையும், துன்பமும், கவலையும், ஏக்கமும் போக்கப்படுகின்றன. துக்கமென்கிற இராச்சியத்திற் கெல்லாம் இதுதான் நிவர்த்தி.

அவிஜ்ஜ நிரோதா ஸங்கார
ஸங்காரா ” விஜ்ஞானா
விஜ்ஞானா " நாமரூபா
நாமரூபா ” ஸலாயதனா
ஸலாயதமனா " பஸ்ஸோ
பஸ்ஸோ ” வேதனா
வேதனா ” தன்ஹா
தன்ஹா ” உபாதானா
உபாதானா ” பவோ
பவோ ” ஜாட்தி
ஜாட்தி ” ஜெயா மரணா;
ஸோகா, பரிதேவா; துக்கா, தோம்னாஸா; உபாயஸா, சாம்பாந்தே.

ஓ! சகோதிரர்களே! பேதைமெய், செய்கை, உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை , பற்று, கருமத்தொகுதி, தோற்றம், பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு முதலிய வினைப்பயன் என்று சொல்லப்படுகிற இப்பன்னிரண்டு நிதானங்களுக்குள் ஒரு நிதானத்திற்கும், மற்றொரு நிதானத்திற்கும் உள்ள காரண காரிய பாகுபாடுகளை அறிந்துக்கொண்டால் இரண்டாம் மூன்றாம் தூய்மெயான சத்தியங்களாகிய துக்கோற்பத்தி, துக்கநிவாரணங்களைப்பற்றி யாவும் தெரியவரும்.

ஓ! சகோதிரர்களே! ஜீவர்கள் யாவரும் பஞ்சஸ்கந்தங்களின் சேர்க்கையால் உண்டாகி வருகின்றனர். இந்தஸ்கந்தங்களாகிய ரூபம், வேதனை, ஸஞ்ஞா, ஸங்காரா, விஜ்ஞானம், (உருவு, நுகர்ச்சி, குறி, பாவனை, அறிவு) யாவும் நிலையில்லாதவை. ரூபமானது நுரையைப்போல் தோன்றி மறையும். வேதனை நீர்க்குமிழியைப் போன்றது. ஸஞ்ஞா கானலை ஒத்தது. ஸங்காரா வாழைப்போல் வெட்டவெட்ட தோன்றியும் நிலையில்லாதது. விஞ்ஞானமோ ஜாலத் தோற்றம் போன்றது.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் மரணமடையும்போது அவனைச்சேர்ந்த பஞ்சஸ்கந்தங்களும் அவைகளது பழைய சேர்க்கையினின்று பிரிக்கப்படுகின்றன.

ஸ்கந்தங்கள் இவ்விதமாக பிரிக்கப்பட்டிருக்கும் ஸ்திதியிலே அவன் வாழ்ந்திருந்தகாலத்தில் செய்துவந்த (குஸலா அகுஸலா) நற்கருமம் துற்கருமங்களாகிய கருமங்கள் யாவும் விஜ்ஞானஸ்கந்தத்தில் விதைபோல் கட்டுப்பட்டிருந்து அந்த விஜ்ஞானஸ்கந்தத்தை தமக்குத் தகுந்த பிறப்பில் ஏனைய நான்குவித ஸ்கந்தங்களோடு சேர்ந்து மறுபிறப்பை உண்டு செய்கின்றன. இவ்வகைத்தான கரு சேர்க்கையே மறுபிறப்பின் மூலம் ஒரு தீபத்திலிருந்து பல தீபங்கள் எவ்விதமாய் ஏற்றப்படுமோ அவ்வாறே ஒரு பிறப்பிலிருந்து பல பிறப்புக்கள் ஏற்படும். ஆகையால் சகோதிரர்களே! இப்பிறப்பினின்று தப்பி நிப்பாணம் அடைவதற்கு வழி மத்திய பாதையாம். அஃதே அரிய அஷ்டாங்கமார்க்கம். அதாவது சம்யக்திருஷ்டி, சம்யக் ஸங்கல்ப, சம்யக் வசன, சம்யக்கர்மந்தா, சம்யக் அஜீவா, சம்யக் வாயமோ சம்யக் ஸ்மிருதி, சம்யக் சமாதி (இதுதான் நற்காட்சி, நல் அமைதி ) என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! இவ்வரிய அஷ்டாங்க மார்க்கத்தின்படி ஒழுகிவரும் சகோதிரர்கள் செய்யவேண்டிய யோகங்கள் 40 வகைப்படும்.

அதாவது:- 40-வித சமதாபாவனா :