பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஒருவன் பாதரட்சை ஏறி சற்று சோர்வடைவானாகில் ஊன்றிக்கொண்டு முன்செய்த தியானத்தை செய்ய ஆரம்பிப்பான். சகோதிரன் ஒருவன் வசதியானவிடத்தில் மனம் கட்டுப்பட்டபோதிலும் தன் இல்லத்திற்கு வந்து அதே தியானத்தை செய்ய வேண்டும். அவ்வகை வராவிடின் மற்றொருதரம் அதே வசதியான இடத்திற்குச் சென்று அக்களிமண் வட்டத்தைப்பார்த்து பதவி கசீனாவென உறுதியாக்கியபின் தன் இல்லத்திற்கு வரல் வேண்டும். இவ்விதமாக விடாமுயற்சியாய் யோகஞ்செய்பவனுக்கு உலகப்பொருட்களின் பேரில் அவா உதிக்கா. அவா எங்கு உதிக்கவில்லையோ அப்போதே அவன் முதல் தியானமாம் பதவிஞானமடைந்து அங்கு அவனுக்கு ஆனந்தமும், சந்தோஷமும் தோன்றும்.

ஓ! சகோதிரர்களே! மேற்கூறியபடி எந்தெந்த பொருட்களின் பேரில் அவா உதிக்கின்றதோ அந்தந்த பாகத்திற்குத் தகுந்த தியானம் செய்து அந்தந்த அவாக்களை அறுத்தல் வேண்டும். பிருதிவியின்பேரில் எப்படி தியானித்தோமோ அதேபோல் ஜலம், வாயு, அக்கினி, வர்ணங்கள் இவைகளின் பேரிலும் அந்தந்த சந்தர்ப்பங்களில் தியானித்து அந்தந்த பற்றுக்களை அறச்செய்யவேண்டும்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் சக்கு விஞ்ஞானா அல்லது கண் சித்தத்தால் ரூபங்களைப் பார்க்கின்றான். ரூபத்தைப்பார்க்க செய்கிற கருவிக்கு கண் என்று பெயர். விஷயமானது ஞானேந்திரியத்துடன் சேர்ந்து கண் சித்தத்தால் மனத்துடன் பார்க்கின்றான். சகோதிரன் ஒருவன் ஒரு தேகத்தைக் கண்டு அவா எழும்புங்கால் அவ்வவாவை எழவிடாது செய்யவேண்டிய யோகங்கள் 10 வகைப்படும். அவையே 10 அசுப பாவனாக்கள்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் காமத்தை அதிகரிக்கச்செய்யும் தேகத்தில் குறிகளையேனும், காமத்தை எழுப்பும் அழகையேனும் ஒரு தேகத்தின் கைகளின் அழகையேனும், காலின் அழகையேனும் கண்டும் மற்றும் நடித்தல், நகைத்தல், சம்பாஷித்தல் இவைகளாலும் உதிக்கும் அவாவினின்று விலகி ஓ இந்த தேகமானது விழுந்தவுடன் பிணமாக அப்பிணத்தை எப்படி அறுவறுக்கின்றோமோ அதுபோல் தேகம் உயிருடனிருக்கும் போதும் அறுவறுக்கத்தக்க தேகத்தை உடைகளால் அலங்கரித்து வாசனைகளை சேர்த்துவருவதால் அறுவறுப்புத்தோன்றவில்லை. உண்மெயில் இத்தேகமானது முந்நூறுக்கு மேற்பட்ட எலும்புக்குவியலை உடைத்தாயதும், நூற்றெண்பது கீல்களால் சேர்க்கப்பட்ட கட்டிடமாகவும், நரம்புகளால் கட்டுண்டு தசைகளால் உள் மூடப்பட்டும், பல துவாரங்களையுடைய ஈரத்தோலால் மேல் மூடப்பட்டும், அத்துவாரங்களினின்று இடைவிடாது ஊற்றுபோல்கசிந்து ஒழுகிக்கொண்டிருக்கின்றன. இத்தேகமோ பூச்சுகளுக்கு ஆகாரமும், பிணிக்குப் பீடமும், சகல வித துக்கங்களுக்கு காரணமுமாயிருக்கின்றது. இத்தேகமானது நவத்துவாரங்களை உடைத்தாய் பழுத்தகட்டியினின்று அழுக்குகளை தள்ளப்படுவதுபோல் அழுக்குகளை துவாரங்கள் மூலமாய் வெளிக்குத் தள்ளிக்கொண்டே இருக்கின்றது. இத்தேகத்தின் தசையின் துவாரங்களிலிருந்து வியர்வை பெருக ஈக்களையும், கிருமிகளையும் அண்டச்செய்கின்றது. இத்தேகத்தை தினகாலம் சுத்தஞ்செய்யாமலும், பற்களை சுத்தஞ்செய்யாமலும் இருப்பானாயின் தேகத்தின் கதி என்ன. இத்தேகத்தையும், பற்களையும் சுத்திசெய்து உடுப்புகளாலும், வாசனைகளாலும், பூக்களாலும், அலங்கரிக்கப்பட்டபோது "நான்" "என்னுடைய என பெருமெய் பாராட்டுகிறோம். மெய்யாகவே ஜீவர்கள் இவ்வறுவறுக்கத்தக்க தேகத்தினது உள் அந்தரங்க அசுத்தங்களைக் காணாமலே பெறுமெய்கொண்டாடி புருஷர்கள் ஸ்திரீகளையும், ஸ்திரீகள் புருஷர்களையும் இச்சிப்பவர்களாக இருக்கின்றனர். உண்மெயில் அவ்வகையால் அவாக்கொள்ள சற்றேனும் ஏது கிடையா இதற்கு உதாரணமாக தேகத்தினின்று உரோமங்களையேனும், நகங்களையேனும் வெட்டி எடுத்துவிட்டபின் அந்தரோமங்களின் பேரிலேனும் நகங்களின் பேரிலேனும் இச்சைவைக்க முடியுமா? தேகத்தில்