பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 371

சம்பந்தப்பட்டிருந்தபோது அவைகளை பாதுகாத்தலும், நீங்கியபோது அறுவறுப்பதும், தேகத்தினின்று வெளியான நிணம், சளி, சீழ், இரத்தம், மலம், மூத்திரம் இவைகளைப் பார்க்க சகிக்கமுடியுமோ? முடியாது. என தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடனிருந்து தியானித்துவருவான். இதேபிரகாரம் மயானத்திற்குச் சென்று அங்கு கிடைக்கும் 10-வித அசுபங்களைக்கண்டு தேகத்தை வெறுத்து வருவான். இவ்வகையாக வெறுத்து வெறுத்து தேகத்தின்பேரில் உண்டான அவாக்களை அறுத்தறுத்து எறிந்து வருவான். இவைகள் யாவும் ஒரு சகோதிரன் 10-வித அசுய யோகத்தால் பலனடைந்தபின் அநூஸடி யோகங்களில் பழகிவருவான்.

தம்மா நூஸடி : துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரணமார்க்கமாம் நான்குவித வாய்மெகளையும்; நற்காட்சி, நல்லூக்கம், நல் வாய்மெய் நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடை பிடி நல் அமைதியாம் அரிய அஷ்டாங்கமார்க்கத்தைப்பற்றியும், ஆழ்ந்து தியானிப்பதே தம்மா நூஸடியோகமென்னப்படும்.

சீலாநூஸடி : அதாவது: சீலங்களைப்பற்றி பஞ்சசீலம். கொலை, களவு, பொய், கள், காமம், அஷ்டசீலம். கொலை, களவு, பொய், கள், காமம், அகால போஜனம் இனியவாசனை, கூத்து, மலர், அலங்காரம், மேளம், பாட்டு, வேடிக்கை, வாசனைத் தைலம் இவைகளை தவிர்த்தல்.

தசசீலம் : கொலை, களவு, பொய், கள், காமம், அகாலபோஜனம், இனியவாசனை, கூத்து, மலர், அலங்காரம், மேளம், பாட்டு, வேடிக்கை வாசனைத் தைலம் இவைகளைத் தவிர்த்தல், உயரமானதும், சுகத்தைத்தரும் மெத்தையும் மிக்க எளிய நிலைமையிலிருத்தல் இவைகளைப்பற்றி தியானித்தலே சீலா நூஸடி யோகமென்னப்படும்.

சங்காநூஸடி : அதாவது அறவணவடிகளையும், அவர்கள் சமணர்களாய் உள்ளபோது அநுஷ்டித்துவந்த 96 சீலங்களையும், பிக்க்ஷுநிலை வாய்த்தபோது அநுஷ்டித்துவந்த 277-சீலங்களையும் அவர்கள் போதிஸத்வர்களாய் உள்ளபோது அநுஷ்டித்துவந்த தஸபாரம் இவைகளைப்பற்றி தியானித்தலே சங்கா நூஸடி யோகமென்னப்படும்.

சாக அநூஸடி - அதாவது தானத்தைப்பற்றி தியானித்தல்
தேவாநூஸடி - தெய்வ நிலையைப்பற்றி தியானித்தல்
மரணாநூஸடி - மரணத்தைப்பற்றி தியானித்தல்
காயகதா நூஸடி - தேகத்தைப்பற்றி தியானித்தல்

அதாவது:- நகம், ரோமம், தந்தம், இவைகளைப்பற்றி நிதானித்தலே தேகதா நூஸடி யோகமென்னப்படும்.

அனபனா நூஸடி - மூச்சுகளைப்பற்றி தியானித்தல்.
உபாஸமா நூஸடி - சாந்தத்தைப்பற்றி தியானித்தல்

பிம்மாவிஹார :

(மித்தா) அல்லது மைத்திரீபாவனை. ஒரு சகோதிரன் இத்தியானத்தில் பரிசுத்தமானபிறப்பினை உடைய ஜீவர்கள் யாவும் ஆனந்தத்துடன் வாழ்வனவாகுக. அவை யாவும் துக்கம், வியாதி, துராசை என்னும் இவைகளினின்று விடுபட்டனவாகுக என்று தியானித்தல்.

(கருணா) அல்லது கருணை பாவனை. எளியவர்கள் ஆதுல நிலை நீங்கி செல்வமுடையவர்களாய் ஆகுகவென்று தியானித்தல்.

(முதிதா பாவனை) ஜீவர்களுடைய நல்ல அதிர்ஷ்டமானது எப்போதும் நீங்காதிருத்தல் வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தாங்கள் அடைந்துள்ள நல்வினைப்பயனை அடைகவென்று தியானித்தல்.

(உபேக்ஷை பாவனை) சகல உயிர்களையும் சமமாக பாவித்து விருப்பு வெறுப்பின்றி இருந்து தியானித்தல் இன்னான்கு பாவனைகளும் சித்தியான ஒரு துறவியை மஹாபிரம்மா என்றழைப்பர்.

(ஆகாரம் நல்லவை கெட்டவை என நினையாத தியானம்) பூதங்களைப் பற்றிய தியானம் இவைகள் சித்தியானபின் அளவற்ற ஆகாஸராஜ்யம், அளவற்ற சித்த ராஜ்யம், நேசமற்ற ராஜ்யம், திருஷ்டியும் திருஷ்டியுமற்ற ராஜ்யம் அதாவது