பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஒரு சகோதிரன் லோப, தோஸ, மோஹங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு மனத்தோடும், ஆராய்ச்சியோடுங் கூடியிருக்கும் போது சந்தோஷமயமும், ஆனந்தமயமுமானஸ்திதி.

(துதியா தியானம்) மனனமும், ஆராய்ச்சியுமில்லாமல் அவைகள் தடுக்கப்பட்டிருக்கும்போது சாந்தியிலிருந்து உற்பத்தியாகும் ஸந்தோஷமும், ஆனந்த மயமுமான ஸ்திதி.

(ததியாதியானம்) காம வெகுளியற்று சந்தோஷத்தை அடைந்து ஆனந்தமுடையவனாகியும், ஞானமுடையவனாகி அறஹத்துக்கள் அடைவதும், பொறுமெய், அறிவு சந்தோஷங்களோடு கூடியதுமான சுகத்தை தன்னுள் அடைதல்.

(சுருடாதியானம்) முன்பிருந்த சுகதுக்கங்களை அடியோடு விட்டொழித்து சுகதுக்க நாசங்களைப்பெற்று சுகமுமில்லாமலும், துக்கமுமில்லாமலும் இருக்கிற ஸமதிருஷ்டியையும், அறிவையுமுடைய பரிபூரணமான ஸ்திதி.

இப்படி படிப்படியாக தியானிக்கும் ஒரு சகோதிரன் ஸமாதியாகிய யோக சித்தியைப் பெறுவானென பகவன் கூறவும் பிக்ஷுகுழாங்கள் ஆனந்தப் பரவசமாய் சற்று போதிருந்து பகவனைப் பன்முறைப் பணிந்து தந்தையே, கருணைக்கடலே, காம்பீரம்பெற்ற ததாகதரே என கூறி ஆனந்தங்கொண்டு இறையும்போது இராஜகிரகத்திலுள்ள சகோதிரர்களுக்குள் பரமார்த்தங்களைப் பற்றி சந்தேகம் தோன்றி உளதென அறிந்த பகவன் பிக்ஷுகுழாங்களுடன் புறப்பட்டு இராஜகிரகம் வந்து சேர்ந்தார். சேர்ந்த அந்தக்ஷணமே பிக்ஷுக்கள் சந்தேகங்களை வினவ பின்வறுமாறு போதிக்கத்தொடங்கினார்.

21. சதுர் பரமார்த்த காதை

நான்குவித பரமார்த்தம்

1. சித்தம் - மனம் 2. சேதசிகம் - மனத்தின் சக்தி 3. ரூபம் – உருவம் நிப்பானம் – 4. நிருவாணம்

ஓ! சகோதிரர்களே! 1. சித்தம் 89 வகைப்படும். 2. சேதசிகம் 52 வகைப்படும் 3. ரூபம் 4 வகைப்படும் 4. நிப்பானம் 5 வகைப்படும்.

சேதசிகம் – 52

(1.) அன்னஸமானா 13

(2.) அகுஸலா 14

(3.) ஸோபனா 25

(1) அன்ன ஸமானா - 13:

பஸ்ஸா, விதகா, வேதனா, விசாரா, ஸஞ்ஞா, அதிமோக்கா, சேதனா, வீரியா, ஏககதா, பீதி, ஜீவதா, சந்தா, மனஸிகரா,

(2.) அகுஸலா - 14 :

மோஹா, தோஸா, அஹிரிகா, இஸ, அநொத்தப்பா, மாச்சரியா, உத்தச்ச, குக்குச்சா, லோபா, தீனா, தித்தி, மித்தா, மானா, விஸிகிச்சா,

(3.) ஸோபனா - 25:

1. ஸோபன சதந்ண சேதசிகம் 192. விரதி சேதசிகம் 3

3. அபமான சேதசிகம் 2 4. பிரஞ்ஞா சேதசிகம் 1

மனத்தின் சக்தி 52 வகைப்படும். (1.) நன்மெ அல்லது தீமெயான மனத்தின் சக்தி 13 வகை (2) தின்மெயான மனத்தின் சக்தி 14 வகை (3) நன்மெயான மனத்தின் சக்தி 25 வகை

சேதசிகம் - மனத்தின் சக்தி 52.

(1.) அன்னா - சமானா 13 : பஸ்ஸா - ஸ்பரிஸம் நற்பரிசம், துற்பரிசம் வேதனா - ஸ்பரிஸம் நல் உணர்ச்சி, துன்னுணர்ச்சி ஸஞ்ஞ - எண்ணம் நல் எண்ணம், துன் எண்ணம் சேதனா - தூண்டல்,

ஏககதா - அசையா மனம், ஜீவதா - விருத்தியாகும் மனம்,
மனசீகரா - சிந்தனை, விதகா - ஆரமணம்
விஸாரா - மெதுவான, அதிமோக்கா - உறுதி
வீரியா - பலம், பீதி - பிரீதி, சந்தா - ஆசை