பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஒருவன் செறுக்கற்று செய்யப்படுகின்ற கன்மங்களானது செறுக்கினின்று உதிக்காதும், செறுக்கால் சம்பவிக்காதும், செறுக்கையே உதிக்கச்செய்யாது. அதாவது செறுக்கே அற்றுவிடுகின்றது. செறுக்கற்றபோது கன்மங்கள் அற்றுவிடுகின்றன. அக்கன்மங்கள் பனைமரத்தை வேறோடே பெயர்த்து விட்டால் எப்படி திரும்ப முளையாதோ அதுபோல் செறுக்கு முற்றும் அற்றவிடத்து கன்மங்களுடன் தோன்ற ஏது கிடையா.

ஓ! சகோதிரர்களே! ஒரு விதையை காற்று, உஷ்ணம் இவைகளால் சேதப்படுத்தாதபடிக்கும், அழிக்காதபடிக்குமிருக்கும்படியான ஒரு செழிமையான தோட்டத்தில் விதைத்தபின்னர் அதை ஒருவன் தீயால் சுட்டு சாம்பலாக்கி அதை காற்றிலும், நதியிலும் எறிந்துவிட்டால் விதை முளைத்து பலனைத் தராதோ அதுபோல் பேராசை, பகை, செறுக்கு இம்மூன்றும் அற்றபோது கன்மங்கள் ஒழிந்து எழுதற்கு இடமில்லாதுபோம்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமான மூன்றுவிதகன்மங்களை எழவிடாது ஜாக்கிரதையுடன் ஒரு சகோதிரன் இருப்பானாகில் அவன் மறுபடியும் பிறக்க ஏதுவில்லாமற்போம்.

மனிதன் எதை விதைக்கின்றானோ அதை அறுப்பான். அதாவது எவ்வித கன்மங்கள் செய்கின்றானோ அதன்படி அநுபவிப்பான் என ஒரு சகோதிரன் கூறுவானாயின் அது தன்மத்திற்கு ஒவ்வாததும் துக்கத்தை போக்குவதற்கு ஏதுவில்லாமற்போம். ஆனால் யாவனேனும் எதைவிதைக் கின்றோமோ அதன் பலனை அறுப்போம். அதாவது எவ்வித கன்மங்கள் செய்தோமோ அதன் பலனை அனுபவிப்போம் என்பானாயின் அது தன்மத்திற்கேற்றதும் துக்கத்தை போக்குவதற்கு ஏதுவாயிருக்கின்றது.

ஒரு சகோதிரன் செய்யும் கன்மமானது அற்பமாயிருப்பினும் அது அபாயமாகவும், மற்றொரு சகோதிரன் செய்யும் கன்மம் அற்பமாயிருப்பினும் அது அற்பமாகவே முடிவதற்குக் காரணம் யாது?

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதையற்றவனாகவும், சீலவிஷயத்திலும் தியானவிஷயத்திலும் ஞானவிசாரிணையிலும் ஜாக்கிரதை அற்றவனாயும், ஒரு காரியத்தை முழுதும் நிறைவேற்றாது அரையுங் குறையுமாக முடிப்பவனாகவும், எதெது தீமெயை விளைக்கக்கூடியதோ அவைகளில் மிக்க ஊக்கத்துடன் மனதை செலுத்துகின்றவனெவனோ அவன் செய்யும் கன்மமானது அற்பமாக இருக்கினும் அபாயத்திற்கே ஏதுவாக இருக்கும்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதை யுள்ளவனாகவும், சீலவிஷயத்திலும் தியானவிஷயத்திலும் ஞான விஷயத்திலும் ஜாக்கிரதை உடையவனாகவும், ஒரு காரியத்தை முழுதும் நிறைவேற்றுபவனாகவும், எதெது நன்மெயை விளைக்கக்கூடியதோ அவைகளில் மிக்க ஊக்கத்துடன் மனதை செலுத்து கின்றவன் எவனோ அவன் செய்யும் கன்மமானது அற்பமாக இருக்கினும் சுகத்திற்கே ஏதுவாக இருக்கும்.

ஓ! சகோதிரர்களே! ஜலம் நிறைந்த ஒரு சிறு பாத்திரத்தில் ஒருபிடி உப்பைக் கலந்துவிடின் அச்சலத்தை அறுந்தமுடியுமா முடியா. ஒருபிடி உப்பை கங்காநதியில் கொட்டி கலக்கிவிடினும் ஜலம் அறுந்தமுடியுமா முடியும்.

ஓ! சகோதிரர்களே! உலகில் ஜீவர்கள் யாவரும் கன்மாம்ஸமாக அவதரித்திருக்கின்றனர். அவர்கள் கன்மத்திற்கு சுதந்தரக்காரராயிருக்கின்றனர், கன்மத்தால் பிறந்திருக்கின்றனர், கன்மத்திற்கு பாத்தியதை உடையவர்களாயிருக்கின்றனர், கன்மத்தால் காப்பாற்றப்படுகின்றனர், ஜீவர்களை உயர்ந்த ஸ்திதிக்கும் தாழ்ந்த ஸ்திதிக்கும் வரச்செய்வதும் கன்மமே.

இவ்வுலகில் ஒருவன் கொலை, வதை, குரூரச் செய்கைகள், அடித்துக் கொல்வது, ஜீவர்கள்மேல் அன்பே வையாது இத்தியாதி கிருத்தியங்களை ஒரு பிறப்பில் செய்து வருவனேல் அவன் மறுபிறப்பில் நீடியகாலம் ஜீவிக்காது சிறிதுகாலம் இருந்து மாள்வான். இவ்வுலகில் ஒருவன் கொலை, வதை, குரூர செய்கைகள், அடித்துக்கொல்லல் இவைகள் யாவுமின்றி கொலை