பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பஸ்ஸோ பஸ்சா வேதனா
ஜெய, மரணா, பிரிதேவா, துக்கா, தோம்னாஸே ஸம்போந்தே

செவியானது சப்தத்தைக் கேட்க காதின் விஞ்ஞானமானது லோப, மோஹங்களுடன் சேர்ந்து ஊறு உண்டாகிறது.

ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்

நுகர்ச்சி ...... றுன்பந்தலைவருமென்ப

3.காணேன் ஸபட்டீஸா கந்தேஸ உபேஸடி காணா விஞ்ஞானங்
தேனாங் ஸங்கதிபஸ்ஸோ.
பஸ்ஸோ பஸ்சா வேதனா
ஜெய, மரணா .... ஸம்போந்தே

நாவானது உருசிகாண நாவின் விஞ்ஞானமானது லோப மோஹங்களுடன் சேர்ந்து ஊறு உண்டாகிறது.

ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்
நுகர்ச்சி ... றுன்பந்தலைவருமென்ப
4.ஜீவேன்ஸா படீஸா ரஸேன்ஸ உபேஸடி ஜீவாவிஞ்ஞானங்தேனாங்
சங்கதி பஸ்ஸோ .
பஸ்ஸோ பஸ்சா வேதனா
ஜெய, மரணா .... ஸம்போந்தே

நாவானது உருசி காண நாவின் விஞ்ஞானமானது லோப மோஹங்களுடன் சேர்ந்து ஊறு உண்டாகிறது.

ஊறு சேர்ந்து நுகர்ச்சியாகும்.
நுகர்ச்சி .... றுன்பந்தலை வருமென்ப
5.காயேன் ஸபடீஸா புட்தபேலா தேகவிஞ்ஞானமானது
லோபமோஹங்களுடன் சேர்ந்து ஊறு உண்டாகிறது.
காயவிஞ்ஞானங் தேனாங் ஸங்கதி பஸ்ஸோ
பஸ்ஸோ பஸ்சா வேதனா
ஜெய, மரணா ...... ஸம்போந்தே

தேகத்தின் பலபாகங்கள் பரிசிக்க தேகவிஞ்ஞானமானது லோப மோகங்களுடன் சேர்ந்து ஊறு உண்டாகிறது.

ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்
நுகர்ச்சி .... றுன்பந்தலைவருமென்ப
6.மனோஞ்சபடீஸா தம்மேஸா உபேஸடி மனோவிஞ்ஞானங் தேனாங்க
ஸங்கதி பஸ்ஸோ .
பஸ்ஸோ பஸ்சா வேதனா
ஜெய, மரணா ..... ஸம்போந்தே

மனமானது நினைக்க மனோவிஞ்ஞானமானது லோப மோஹத்துடன் சேர்ந்து ஊறு உண்டாகிறது.

ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்
நுகர்ச்சி றுன்பந்தலைவருமென்ப

ஓ! சகோதிரர்களே! அறுவகையான ஆரமணங்களால் மூப்பு மரணம் நேர்கின்றது. மூப்பு மரணம் நேர்வதற்குக் காரணம் பேதைமெயே. பேதைமெ யல்லது பொய்காட்சியிலிருந்து செய்கைகள் உண்டாகின்றது.

செய்கையிலிருந்து உணர்வு உண்டாகின்றது, உணர்விலிருந்து அருவுரு உண்டாகிறது. அருவுருவிலிருந்து வாயில்கள் உண்டாகின்றன. வாயில்களிலிருந்து ஊறுகள் உண்டாகின்றது. ஊறுகளினின்று நுகர்வு உண்டாகின்றது. நுகர்விலிருந்து வேட்கை உண்டாகிறது. வேட்கையிலிருந்து பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து பிறப்புக்கு மூலமாம் கருமக்கூட்டம் உண்டாகின்றன. கருமக்கூட்டத்தினின்று மறுபிறப்புண்டாகின்றது. அதினின்று மூப்பு, மரணம், வலியும், அழுகையும் ஆகிய துக்கோற்பவங்கள் உண்டாகின்றன.

ஓ! சகோதிரனே! இந்தச் சக்கரத்தினின்று விடுபடுவது மிக்க அரிது.

ஓ! சகோதிரனே! ஞானமார்க்கத்தின் உதவியால் இச்சக்கரத்தினின்று விடுபடலாம்.

ஞானமார்க்கம் யாதெனில்:- அநித்யம், துக்கம், அநாத்மா என்பவைகளே.

இம்மார்க்கத்தின் உதவியால் அவிஜ்ஜாவாம் பேதமெய் என்னும் வண்டி சக்கரத்தின் குடத்தை எடுத்துவிட்டால் மற்றை இலைகள் உதிர்ந்து விடுமாபோல்