பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரணமார்க்கத்தில் விசாரிணை புரிந்துவந்தான்.

24. பிருமன் தரிசன காதை

பிருமனென்பவன் அசோதரையம்மனின் சோதிரன் அஜாதசத்துரு வென்பவன் விம்பாசார அரசனுடைய புத்திரன் இவ்விருவரும் பகவன் கோசலை நாட்டிலிருக்கின்றாரென்று எண்ணி அவ்விடம் போய் விசாரித்து இல்லை என்றுணர்ந்து குருநாதன் வந்தவழியைத் தொடர்ந்து ஐயனைப் பாலைவனத்தில் சந்தித்தார்கள்.

இவ்விருவர் வருகையையுங் கண்ட இறைவன் ஓர் மரத்தடியில் தங்கி வந்தகாரணம் யாதென்றார்.

அசோதரை நெஞ்சுவிடு தூது - மகா ராஜா துறவு

பிரும நகந்தை பிறங்காதடங்கப், பரம னொளியாய் படர்ந்து
உருவனத்தும் வகிலுங் கழைமணியு மந்திரயாழுந்தி,
சிகிநிறச் செம்பாலை குணந்தீர்ந்து - பகரறிய.

நிகழ்காலத்திரங்கல்

பிருமனுஞ் சத்துருவும் பேணா மகந்தைகெட, / உருமறைந்தசோதி உயர்ந்த அதிசயமே.

பிருமனென்னும் தனது மைத்துனன் தனக்குள்ள மமதையால் மாதவனைநோக்கி நீவிருமது சங்கத்தோருக்கு கொடுத்திருக்குங் சட்டங்கள் யாவும் கடினமின்றி எளிய நடையிலிருக்கின்றபடியால் அவர்களொவ் வொருவரும் வீண்காலம் போக்குகின்றார்கள் கடின சட்டத்தில் நிறுத்த வேண்டுமென்றான்.

அவற்றை வினவிய பகவன் பிருமனைநோக்கி தாங்களும் அவர்களுடன் கலந்துள்ளவராதலின் கடின சட்டத்தில் பொருந்துவீரோவென்றார்.

நாம் பொருந்துவோம் பொருந்தமாட்டோமெனும் கேள்வியைத் தாம் கேட்கவேண்டியதில்லை உம்முடைய சங்கத்தோரை உறுதிச் செய்துக் கொள்ளும் என்றான்.

பகவன் அவனுக்குள்ள வஞ்சினத்தையும், பொறாமெயையுமுணர்ந்து மௌனமுற்றார்.

மறுமொழி கூறாதிருந்த மாதவனை மற்றும் பிருமன் நோக்கி உமது சங்கத்தோரை உறுதிசெய்துக் கொள்ளுமென்றான்.

அவ்வார்த்தைக்கும் அருகன் யாதோருத்திரமுங்கூறாதிருப்பதைக் கண்ட பிருமன் சினமீறி அஜாதசத்துருவை அழைத்து தூரஞ்சென்று இவரை நாம் எவ்விதத்திலும் கொன்றுவிடவேண்டும், அவ்விதம் செய்யாமற்போய்விடு வோமாயின் உமது தந்தைக்கும் எனது தந்தைக்கும் சங்கதிகள் எட்டி வீணில் அல்லலடையவேண்டி வரும். ஆதலின் யாருமற்ற பாலைவனமே இச்செயலுக்குத் தகுதி என்று அருகில் நெருங்கினார்கள்.

இவர்கள் கொடுஞ்செயலை உணர்ந்த கோமான் அவர்கள் நெருங்கிய நேரத்தில் அந்தர சுவர்க்க மத்தியம் என்னும் நிலையற்று சுடுகையற்று சுயம்பிரகாச சோதியாய் நின்றுவிட்டார்.

சுயம்பிரகாசத்தைக் கண்ட இருவர்களுந் திகைத்து நான்கு திக்குகளிலோடித் திரிந்தும் அவரது மகத்துவம் விளங்காது மதிகெட்டு திட்டமிட்டார்கள்.

அருங்கலைச்செப்பு - பாலைநிலப்பத்து

பாலை நிலத்தின் பகுத்தனைத்தும் பார்த்துரைத்தான்,
சீலமிகுத்த சிவன். மண்ணினுறுக்கு மணியொளியா
முன் தொகுப்பு மெண்ணியுரைத்தானிறை.

அக்கால் குன்றை நாட்டுச் செல்வன் சோதியை ஒடுக்கி பாலைவன வாசிகளிடஞ்சென்று இராகத் துவேஷ மோகமாம் மூன்றினால் உண்டாகுங் கேடுகளையும் அன்பு, ஈகை, சாந்தமென்னும் இம்முன்றினால் உண்டாகுஞ் சுகங்களையும் விளக்கி அவர்கள் விருத்தி அடைய வேண்டி பாலைவனத்தில் உற்பத்தியாகும் உவர்மண், கீரைமணி மண், வளையல் மண், கண்ணாடி மண், படிகக்கல், அப்பிரகக்கல் முதலியவைகளின் விளைவுகளையும் அவைகளைக்