பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அவைகளின் உயர்வுகளை நீங்கள் மத்தியில் கெடுத்து கொலைபுரிவதால் அதன் நோக்கங்களும், நிலைகளுங் கலைந்து தாழ்ந்தநிலை அடைவதுடன் உங்கள் உணர்வுங்கெட்டு தாழ்ந்தநிலை அடைவீர்களென்று போதித்து அவர்கள் குடிசைகள் யாவையுந் தவிற்று கட்டிடங்கள் கட்டும் வகைகளையும் ஊட்டிவருங்கால், பகவன் மலைய நூரான் வாசஞ்செய்யுங் குறிஞ்சிநாட்டில் சத்தியதன்மத்தைப் போதித்துவருகின்றாரென்று கேழ்விப்பட்ட பிருமனும் அஜாதசத்துருவும் அம்பும் வில்லுங் கையிலேந்தி துஷ்ட யானைகளையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்து அவலோகிதர்மீது அம்பு கும்பலைப் பிரயோகித்தார்கள்.

அவற்றைக்கண்ட அமலன் அருகிலுள்ளவர்களை தூர விலகிவிடச் செய்து தனியே உழ்க்கார்ந்தார்.

அவ்விருவரும் எய்த அம்புகும்புகள் அவலோகிதர் உடலில்மோதி புட்பங்கள் உதிருவதுபோல விழுந்துகொண்டே வந்தது. அவர்கள் அம்பு கூடுகளுங் காலியாயின. இன்னும் அவர்களுக்குக் கோபம் அதிகரித்து தங்களிடமுள்ள யானையை விடுத்துக் கொல்லும்படிச் செய்தார்கள்.

அவ்வியானையோ வீரிட்டுக்கொண்டு ஐயனருகில் வந்து அவரது ஞானகருணாகரமுகங் கண்டவுடன் தனது மதவீரியத்தை ஒடுக்கி முழங்காலிட்டு மத்தகஜம் பூமியிற்படவணங்கி பின்னுக்கே சென்றுவிட்டது.

அதன்செயலைக் கண்ட இருவருக்கும் மேலும் மேலுங் கோபமதிகரித்து யானைக்கு மயக்கவஸ்துவை ஊட்டி மறுபடியும் மாதவன் பேரில் ஏவினார்கள்.

அவ்வியானையோ தனது மதிமயக்கத்தால் மாதவனை அணுகி துதிக்கையினால் பிடிக்கவும் இழுக்கவுமாகியச் செயலிலிருந்தது. அதன் மதிமயக்கத்தை உணர்ந்த மாதவன் புந்நகைக்கொண்டு ஓர்கரத்தால் துதிக்கையைப்பற்றி ஓர் துரும்பை எறிவதுபோல் தூர எறிந்துவிட்டார்.

யானைக்கோ தனக்குள்ள மயக்கங்கள் யாவுமகன்று பகவனுரத்திற்கு பயந்து வீரிட்டோட்டமிட்டது.

யானை உரத்தோன் வல்லபத்தைக்கண்ட யாவருந் திடுக்கிட்டு நின்று விட்டார்கள்.

அவருரத்தைக் கண்ணாரக்கண்ட பிருமனும் அஜாதசத்துருவும் ஐயன் எதிரில் போவதற்கு பயந்து மலையைச் சுற்றிக்கொண்டு உச்சிக்கேறி அவ்விடமிருந்த ஓர் பெரும்பாறையை யானை உரத்தோனுக்கு நேரே உருட்டிவிட்டார்கள்.

அப்பாறையானது அதிவேகமாக உருண்டு வந்து ஐயன் தலைமீதெழும்பி உருண்டுபோய் இருவர்களும் மலையடிவாரத்தில் விட்டிருந்த ரதத்தின்பேரில் விழுந்து அவற்றை பொடியாக்கிவிட்டது.

அதனைக்கண்ட இருவரும் நமதில்லம் போய்ச் சேருவதற்கு ரதமில்லையே யாது செய்யலாமென்று மயங்கி தாங்கள் தவமுதல்வருக்கு செய்து வந்த தீங்குகளை சிந்தித்தார்கள்.

இருவருஞ் செய்த தீவினைகளை சிந்தித்ததினால் இறைவன் மீதிருந்த வஞ்சினங்களும் பொறாமெயுமகன்று யானையுரத்தைப்பெற்ற தேகபலமிருந்தும் நம்மீதவ்வுரத்தைக் காட்டாதிருப்பது என்னவன்போ யாது சாந்தமோ என்று ஒருவருக்கொருவர் நிதானித்து சதா சாந்தரூபியை இன்று சேவித்து அடைக்கலம் புகுவதே நமதரணாகும். அங்ஙனம் அவர் அடைக்கலங் கொள்ளாவிடில் இருவர் பிராணனையும் அவர் பாதத்தில் விடுவதே பதமென்றெண்ணி யானை யுரத்தோனருகில் சென்று இருவரும் அவர் கமலபாதத்தைப்பற்றி செந்தாமரை பாதா, சின்மயபோதா, ஜெகத்குருநாதா, சுருதி நல்வேதா, சருவசீவ தாதாவென்றிறைஞ்சி எங்கள் குற்றத்தைப் பொருக்கவேண்டுமென்றார்கள்.

இவற்றிற்கு முன்பு இராககிருகத்தை ஆண்டு வந்த விம்பாசாரனுக்கு தனது புத்திரன் அஜாத சத்துருவும், அசோதரையின் தமயன் பிருமனும் துஷ்ட செயல்களிற் திரிகின்றார்களென்றறிந்து அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்தான். அவனுடைய நற்போதனையை சகிக்காத பிருமன் அஜாத