பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 395


அவர்கள் யாவரையுங்கண்ட அறவாழியான் ஆனந்தமுமகமலர்ச்சி யுடனின்று சகோதிரர்களே! ததாகதர் பரிநிருவாணம் அடையுங்காலம் நெருங்கிவிட்டபடியால் நீங்கள் ஒவ்வொருவரும் அதன் அந்தரங்க ஒளியின் பிரிவையும் அதன் சுகத்தையுங் கண்டுகளித்து பிறவியையறுத்து நித்திய வாழ்வில் நிலைப்பீர்களாக.

இந்த சத்தியதன்மமானது நாளுக்குநாள் அசத்தியர்களாலும், அசப்பியர்களாலும், சோம்பேரிகளாலும் மாறுதலடைந்தபோதினும் சத்திய தன்ம போதகர்களால் நாளுக்குநாள் நித்தியர்கள் தோன்றி பிறவி சமுத்திரத்தைக் கடந்து கரைசேருவார்கள்.

சீவக சிந்தாமணி

பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெட
விண்டிலர் கனைகதிர் வீரன் தோன்றினா
னுண்டி வணறவமிர் துண்மினோவென
கொண்டன கோடனை கொற்றமுற்றமே.

ததாகதர் பிறவியால் உண்டாம் பிணியைக் கண்டார் துக்கித்தார், பிணியின் நிறைவால் நரைதிறை என்னும் மூப்பை கண்டார் துக்கித்தார், மூப்பின் மிகுதியால் மரணத்தைக் கண்டார் துக்கித்தார், பிறவியால் உண்டாம் பிணி, மூப்பு, சாக்காடென்னும் அநித்தியத்தைக்கண்டு அதற்கெதிரடையாய நித்திய மிருக்கவேண்டுமென்று நிதானித்தார், இராகத்துவேஷமோகங்களை ஜெயித்தார், பற்றற்றார், நிருவாணம் பெற்றார், அந்நிருவாண பலனே, உபத்திரவமாம் பிணியை ஜெயித்தார், நரைதிறை காணும் மூப்பை ஜெயித்தார், பஞ்ச அவத்தையால் மாளும் மரணத்தை ஜெயித்தார், பிறவியற்றார், அவ்வழியே நீங்களுஞ்சென்று பிணி, மூப்பு, சாக்காடென்னுந் துன்பங்களை செயித்து சுகம்பெறுவீர்களாக.

சீவக சிந்தாமணி

வேட்டெனபெறாமெ துன்பம் லிழைநரைப் பிரிதருன்பம்
மோட்டெழி லிளமெய் நீங்கி மூப்புவந்தடைத ருன்பம் வேட்டெழுத் தறிதலின்றி யெள்ளற்பாடுள்ளிட்டெல்லாஞ்
சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கென்றான்.

முன்வினைக்கீடாய் பிறக்கும்போதே கா கூ என்னும் அழுகையுந் துக்கமுந் தோன்றி வளர்ந்து காலபேதங்களாலும் புசிப்பின் பேதங்களாலும் வினைக்கீடாய் பிணிகள் தோன்றி துக்கத்தை அனுபவிப்பதும் பிணி தோன்றியுள்ளோன் மாதுருவும் பிதுருவும் உடன்பிறந்தாரும் அத்துக்கத்தை அநுபவிக்கவுமாகத் தோன்றுவதும் வினையின் பயனேயாகும். அப்பிணிகளின் மாறா பெருக்கத்தால் தேகந் தளர்ந்து நரைதிறையாம் மூப்பு வந்தடைவதாகும். மூப்பு முதிர்ந்து தளர்ந்தவுடன் தான் துக்கித்து தள்ளாடுவதுடன் தனது பந்துக்களுந் துக்கிப்பர். 'மூப்பால் முதிர்ந்து தளர்ந்து மரணவத்தை வருங்கால் பாசபந்த பற்றுக்கள் ஓர்புறமிழுக்க பஞ்ச அவஸ்த்தையின் துன்பம் மேலும் மேலும் பெருக்க இருளடைந்து இறக்கின்றான். இத்தகையாய் மாறிமாறி பிறக்கும் பிறப்பேதுன்பத்திற்கு ஆளாக்கும். பிறவாமலிருப்பதே பேரின்பத்திற்கு உள்ளாக்கும்.

சீவகசிந்தாமணி

பிரிதலும் பிணியும் மூப்புஞ் சாதலும் பிறப்புமில்லா
வரிவையைப் புல்லியம்பொனணிகிளர் மாடத்தின்றேன்
சொரிமது மாலைசாந்தங்குங்குமஞ் சுண்ணந் தேம்பாய்
விரிபுகை விளக்கு விண்ணோ ரேந்தமற்றுரையுமன்றே

மணிமேகலை - தீவினைக்கேடு

தீவினை என்பது யாதென வினவினாய்
தொடி நல்லா யாங்கது கேளாய்
கொலையே களவே காமத் தீவினை
அலையா துடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
சொல்லே சொல்லிற் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி