பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 399


மநுக்களென உயர்ந்தவர்கள் மானமற்று பஞ்சபாதகத்திற்குள்ளாகி தாழ்ந்தநிலைக்கு மாறாதிருத்தல் வேண்டும். மானமற்று மானிடரென்னும் பெயரற்று மாறாப்பிறவியில் சுழன்று தீராக்கவலையில் உழலாத சுகவழியைத் ததாகதர் கண்டறிந்தார். அவ்வழியை நீங்களும் பின்பற்றி மாறாப்பிறவியையுந் தீராக்கவலையையும் ஒழித்து அழியா சுகநிலைபெற்று மானிடர் என்னும் பெயரினின்று உயர்ந்து தேவர் பிரமரென்னும் பெயர் பெற்று பிறவியற்று பரிநிருவாணமுற்று நட்சேத்திரமாம் அந்தரத்துலாவுவீர்கள்.

மநுக்களெனத் தோன்றியும் மானமற்று பஞ்சபாதகத்துக்கு உள்ளாவது மாறாப் பிறவிக்கும் தீராத்துன்பத்திற்குமே வழியாம்.

அத்தீய வழியிலேகி தாழ்ந்த பிறவிக்கேகாது சுகவழியிலேகி பிறப்பற்றிருப்பதே பேரானந்தமாகும்.

எக்காலுமுள்ள பூமியிற்றோன்றும் சீவ அசீவர்களாம் புற்பூண்டு களிலிருந்து புழுக்கீடாதிகளும், புழுக்கீடாதிகளிலிருந்து மட்சம் பட்சிகளும் ஒன்றிலிருந்தொன்று உயர்ந்துகொண்டே போவதை உணர்ந்தும் தாங்களுயரும் வழியை நோக்காது தாங்களுங்கெட்டு உயர்ந்தேகும் சீவர்களையுங் கெடுத்து வருவது மானிகளாய மானிடர்களுக்கு அழகன்றேயாம். மானிகளாய மானிடர்கள் தேவர்களாவதே திருவுருவாகும். அத்திருவுருவே பிறவா பிணி, மூப்பு, சாக்காட்டை செயித்த உருக்கூடாகும். அவ்வுருக்கூட்டினின்று ஒளியுருவாக வெளி தோன்றலே பரிநிருவாணமாகும்.

ஆனந்தா! அப்பரிநிருவாணத்துக்குரிய இப்பரிசுத்ததேகத்தை ததாகத ஒளி அகலும் வரையில் மண்ணறிக்குமோ, காற்றுபரிசிக்குமோ, நீர் நனைக்குமோ, அக்கினி தகிக்குமோ, வெளி மறைக்குமோ ஆகாவாம். இராகத்துவேஷ மோகஞ்சூழ்ந்து இருளடைந்திருக்கும் அசுத்ததேகத்தை மண்ணறிக்கும், காற்றுமோதும், நீர் நனைக்கும், தீதகிக்கும், வெளி மறைக்கும். அதாவது தனக்குள் கோபமிருக்கும் வரையில் எதிரியின் கோபம் தன்னைச் சூழ்ந்து வாதிக்கும். தனக்குள்ள காமமிருக்கும் வரையில் எதிரியின் காமம் தன்னைப்பற்றி ஈடழித்து வாதிக்கும். தனக்குள்ள மயக்கமிருக்கும் வரையில் எதிரியின் மயக்கால் அவாபெருகி அல்லலுற வாதிக்கும். தனக்குள்ள இராகத்துவேஷ மோகங்களாம் இருளகன்று சாந்தம், ஈகை அன்பென்னும் ஒளிதிரண்டு பற்றற்ற பரிசுத்த தேகமே பரிநிருவாணத்திற்கு உரியதாகும்.

என்று சொல்லிவருங்கால் இராஜகிரகத்திற்கு 300 - காத வழியிலுள்ள ஓர் மலைவாசிகள் பகவனது குணாதிசயங்களையும், அவரது தேககாந்தியையும், அமுர்தவாக்கையும் கேள்வியுற்றுப் பெருங்கூட்டமாகத் திரண்டு வந்து பெருமானை வணங்கி சுற்றிலும் நின்றுகொண்டு இவர் நம்மெய்ப்போன்ற மனிதர்தானே, ஆனால் தேககாந்தியும், கருணையும் நிறைந்தவராகக் காண்கின்றார். இதனால் இவரை எங்கும் புகழ்ந்து கொண்டாடுவதற்குக் காரண மென்னை. இவரைப் பெருங்கூட்டங்கள் பின்பற்றி நிற்பதில் சுகமென்னை. உலக மனுக்களினும் இவரிடமுள்ள சிறப்பென்னை. இவரைக் காஷாயந் தரித்துள்ள பெருங்கூட்டத்தோர் கூடி வணங்கிநிற்பதால் பலனென்னை என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு அவரது அன்பின் முகதேஜசால் தியங்கி எவ்விதத்தேனும் நமதில்லத்தில் ஒரு வேளை அன்னம் புசிப்பிக்கச்செய்யவேண்டுமென்னும் அவாவின் மிகுதியால் அவலோகீசரை மறுபடியும் வணங்கி தங்கள் இல்லத்திற்கெழுந்தருள வேண்டும் என்று இரைஞ்சி நின்றார்கள். அவர்களது உள்ளச்செயலை முற்றும் உணர்ந்த ஐயன் தமதிடம் வந்துள்ள சமணர்களாம் சாதுசங்கத்தோர்களையும் ஆனந்தன் முதலோர்களை அவ்விடமே நிறுத்திவிட்டு மலைவாசிகள் இல்லஞ்சேர்ந்து அவர்கள் அன்புடன் அளித்த அன்னத்தைப் புசித்துக் குறிஞ்சி தோப்பின் ஓர் மரத்தடியில் அமர்ந்தார். அவ்விடமுள்ள யாவரும் வந்து அருகனை வணங்கி நின்றார்கள். வணங்கிநின்ற மலைவாசிகளின் உள்ளங்களை மாதவன் உணர்ந்து சகோதிரர்களே உலகத்தில் எப்போது மானிடரெனத் தோன்றினீர்களோ அப்போதே மகிமெய் நிறைந்த மானிகளாய் சருவசீவர்