பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 31

இவ்வகை நிகழ்ச்சியால் மங்கை பருவமாகும் பதின்மூன்றாம் வருட முதித்து வதுவைகால வாக்கியங்கள் எழும்பிற்று. அதைக் கேள்வியுற்று அம்பிகாதேவி தன் தந்தை சுந்திரவாகுவை அணுகி, எனது அருமெய்த் தந்தையே, நமது குலகுருவால் ஏற்படுத்தியுள்ள பெண்களின் ஞானசங்கத்திற்சேர விருப்புற்றிருக்கின்றேன், தடைசெய்யாமல் உத்திரவளிக்க வேண்டும் என வருந்தினாள். அதைக்கேட்ட அரசன் மனங்கலங்கி ஞான தேற்றலடைந்து குழந்தாய், பெண்களின் ஞானசங்கத்திற் சேரும் விருப்பம் உனக்கு பேதைபருவத்தில் இருக்க வேண்டும் அல்லது விவாக முடிந்து சிலகாலம் உன் புருஷனும் நீயும் சுகவாழ்க்கை கழிந்து உன்கணவன் புருட சங்கத்திலும், நீ பெண்கள் சங்கத்திலும் சேர வேண்டியது தருமகட்டளை. இதைத் தவிர்ந்து மங்கைபருவமுற்ற வதுவை பெண்கள் சங்கத்திற் சேர்க்கமாட்டார்களே யாது செய்யுதும் என்றான். அம்பிகாதேவி அரசன் முகத்தை நோக்கி என்னருமெய்த் தந்தையே, நீர் எவ்வித முயற்சியேனுஞ் செய்து பெண்கள் சங்கத்தில் என்னை சேர்த்துவிடல்வேண்டும் என வருந்தினாள். அரசன் மந்திரிப் பிரதானியரைத் தருவித்து தனது புத்திரிக்குந் தனக்கும் நடந்த விருத்தாந்தங்களை விளக்கினான். அதை அவர்கள் தீர்க்க ஆலோசித்து அரசே, உமது புதல்வியின் கழுத்தில் தாய்மாமனால் ஓர் பொட்டுக்கட்டி அறஹத்துக் களுக்கு அறிக்கைவிட்டு பெண்கள் சங்கத்திற் சேர்த்துவிடுவதே விதி என்றார்கள். உடனே அரசன் அம்பிகாதேவியின் தாய்மாமன் கந்தருவத்தனை அழைத்து சங்கதிகள் யாவையும் விளக்கி பொன்னினால் ஓர் பொட்டு செய்து சரட்டிற் கோர்த்து தன் புதல்வியின் கழுத்திற் கட்டும்படிச் செய்து சமணநீத்தோர் உத்திரவுபெற்று உமளநாட்டு வியாரத்துப் பெண்கள் சங்கத்திற் சேர்த்துவிட்டான்.

அம்பிகா தன்மம்

திருவளர்செல்வி தேவியம்பிகை / யருமறைப் பீடிகை யாதனமுணர்ந்து
போதிமாதவன் பொற்கழலேந்தி / யாதிதேவியென் றறவோர் போற்றும்
அவ்வையென்னு மைந்நெறிக்கிளத்தி / செவ்வியதன்மம் செப்புவங்கேண்மின்
தென்பரதத்து துரைபுந்நாட்டின் / மன்னவன் சாக்கை சுந்திரவாகு
நற்றவத்துதித்த நானிலமுதல்வி / பேதைப்பெதுமெய்ப் பாலையுங் கடந்து
மாதர்பருவ மங்கைமெய்யடைந்து / அம்மையர் தன்ம சங்கமமரும்
மிம்மெயினோக்க மிகுதியினின்று / தாதையையணுகி தற்பரன்வியார சாதன
மமருந் துரையருள் வீரென / வோதியமொழியை உள்ளத்தமைத்து தாதையு
மந்திர சாதனர்க்கோதி / மங்கைபருவம் வாய்ந்தமகட்கு தன் தாய்மாமன்
பொன்சரடிட்டு / சமண நீத்தோர் தன்னுரைக்கொண்டு
அறவுரையென்று மடுத்துணர்திரிவி / பிறவியம்பாசப் பந்தங்கழற்றி
பிடகமும்மொழிப் பிரித்துலகோர்க்குத் / திடமுறுதிரிவா சகமதாவிரித்து
உமளநாட்டு வுமைவியாரத்துள்.

திரிபிடக விசாரிணையினின்று சிலசாதனங்கொண்டு உண்மெயுணர்ந்த ஆனந்தத்தால் பெண்கள் வியாரத்து எதிரிலுள்ள பூகமரமென வழங்கும் வேம்பு மரத்தடியில் வந்து உட்கார்ந்து பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரையில் எளிதில் உணருமாறு திரிபிடக தருமபோதங்களை எளியவாசகநடையில் திரிவாசகங்களாக போதித்துவந்தாள். பிடகத்தை அறிவித்தவளாதலின் பிடகறி, பிடாறி என்று முதற்பேரளித்தார்கள்.

- 1:10; ஆகஸ்டு 21, 1907 –

பிடகறி பிடாறி என்னும் காரணப்பெயர் பெற்ற வேம்படியம்பாள் தான் மோனனிலையால் அடைந்த ஞானவிழி பார்வையால் செல்லல், நிகழல், வருங்காலம் மூன்றின் பலன்களையும் குடிகளுக்கு விவரித்துவந்த காலத்தில் நாகைநாடு என்னும் தேயத்தில் மழை குன்றி சாமளை என்னும் விஷப்பூச்சுக்களின் கொடூரத்தால் வைசூரி உவாந்திபேதி என்னும் மாறியாகிய வியாதிகள் தோன்றி மக்களும் விலங்கும் துன்புறுங்கால் குடிகள் பயந்து காவிரி உமளம் உமை வியாரத்துள் வேம்படி நிழலில் வீற்றிருக்கும்