பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400 / அயோத்திதாசர் சிந்தனைகள்

களுக்கும் உபகாரமென்னும் நன்மெய் புரியுங்கள். உபகாரஞ் செய்யப் பொருளில்லையேல் சகலர்களுக்கும் நல்லவர்களென விளங்குங் கோளென்று சொல்லிக்கொண்டே உள்ளத்தொடுங்கிவிட்டார்.

உள்ளொடுக்கத்தால் ஏழுநாள் கண்திரவாமலும், நாவு பேசாமலும், மூச்சோடாமலும், தேகமசையாமலும் உழ்க்கார்ந்த நிலையிலமர்ந்த அந்தர் அங்கநிலையை உணரா மலைவாசிகள் அறவாழியான் இறந்துவிட்டாரென்று ஏங்கி உடலையோர் பாடையில் வளர்த்தி சுடலைக்கெடுத்துச்சென்று கட்டைகளை அடுக்கிக் கொளுத்திவிட்டார்கள்.

சுடலைதகனத்தில் அமர்ந்த சித்தார்த்தர் மறுபடியும் அம்மரத்தடியில் வந்து உட்காாந்து கொண்டிருப்பதைக் கண்ட மலைவாசிகள் திடுக்கிட்டு உள்ளங் கலங்கி நடுக்குற்றவர்களாய் ஐயனே! உமது மெய்கண்ட மேன்மெயை உணராபாவிகள் இறந்துவிட்டீரென்று ஏங்கி தகனஞ்செய்துவிட்டோம். யாங்கள் அறியாமல் செய்த தோஷத்தைப் பொருத்து ஆதரிக்க வேண்டும் என்றடிபணிந்தார்கள்.

ஓ! சகோதிரர்களே! ததாகதர் பசியுள்ளார் மத்தியில் பசியற்றவராகவும், தாகமுள்ளோர் மத்தியில் தாகமற்றோராகவும், கோபமுள்ளோர் மத்தியில் கோப மற்றவராகவும், காமமுள்ளோர் மத்தியில் காமமற்றவராகவும், நோயாளிகள் மத்தியில் நோயற்றவராகவும், துக்கமுள்ளோர்கள் மத்தியில் துக்கமற்றவராகவும், உபாதைப் படுவோர்கள் மத்தியில் உபாதையற்றவராகவும், நித்திறை உள்ளார்கள் மத்தியில் நித்திறை அற்றவராகவும், மரணத்தை உள்ளார்கள் மத்தியில் மரணத்தை ஜெயித்தவராகவும் விளங்குகிறபடியால் நிருவாணம் பெற்ற அந்தர் அங்கமும், பயிர் அங்கமும் பொருந்தியுள்ளவரையில் உண்மெய்க்கண்ட உடலை தீ தகிக்குமோ, மண்ணறிக்குமோ, காற்றுமோதுமோ, நீர் நனைக்குமோ, ஒளிமறைக்குமோ ஒருக்காலும் முடியாவாமென்று நிருவாணமாம் அந்தர் அங்கத்தை விளக்கிவருங்கால் மலைவாசிகள் பேரானந்தமும் குதூகலமுங் கொண்டு இவரே உலகநாதன், இவரே உலகரட்சகன், இவரே உலகமக்களை ஈடேற்றவந்த தாதா, இவரே மானிடரிற் சிறந்த சீமான், இவரே ஜகத்தின் குருவென்று மகிழ்ந்தும் புகழ்ந்தும் அவரறவுரையை சிந்தித்து நிற்குங்கால் அருமறை பயந்தோன் ஆனந்த நகரென்னுங் குஷிநகராம் கங்கைக் கரைச்சேர்ந்து மரத்தடியில் உட்கார்ந்து ஆனந்தனை அழைத்து ஏதேனும் விசாரிணை உண்டோ என்றார்.

அருங்கலைச்செப்பு - தென்மலைப் பத்து

தென்மலையோர்கூடி தேவனடி அடைந்தார், நன்மனத்தைக் காணும் நலம்
இம்மெய் மறுமெய் இரண்டிற்குங் காரணமாம், நன்மெய்க்குகந்தவர் என்றார்
கூட்டங்கள் கூடி கும்பிட்டடிபணியும், நாட்டமேதென்றார் நவில்
திங்கள முதத்திருமுகத்தைக் கண்டார், தங்கள் மனைத்தெரிந்தார் தேர்
புசிப்புண்டகன்று புரைமரந்தூய்ந்து, நிசிப்பிரு மூணாளமர்ந்தார் நேர்
ஏழுநாள் கண்டோரிறைமடிந்தாரென்றெண்ணி, சூழு கனல் சுட்டெறித்தார் சீர்
எறியுறா மன்னனெழுந்துமுன் மரமமர்ந்தார் பிறிவுறா வங்கத்தவர்
அங்கமழியாது அறிந்தாரருள் நிறைந்தார், சங்கத்தமர்ந்தார் சரண்
பிறப்புப் பிணிமூப்புச் சாக்காட்டை வென்ற, சிறப்பின் சுகமறிந்தார் சீர்
அறவுரையைக் கேட்டோரதனொழுக்கம் நின்றார். பிறப்பறுக்கும் பாதை அறிந்தார்.


அதாவது பகவன் தென்மலைக்குச் சென்றதும் மலைவாசிகளால் தகனஞ்செய்ததும், ரூபகாயம் அழியாததும், சங்கத்தோர் மத்தியில் எக்காலும் நித்திறைக்கொள்ளாததும், புசிப்பை நாடாததும், தாகத்தை விரும்பாததும் ஆகியச் செயல் கண்ட சமணர்களும் ஆனந்தனுந் திடுக்கிட்டு அறவாழியானை நாம் புசிக்கும்படி வேண்டினால் புசிக்கின்றார். வேண்டாவிடில் தாமும் வேண்டாமலிருக்கின்றார். தாகத்திற்கருந்தும்படி வேண்டினால் அருந்துகின்றார். வேண்டாவிடில் அருந்தாமல் அறவுரையை அடியார்களுக்கு போதித்தலையே பசிதாகத்திற்கு நிவர்த்தி என்றிருக்கின்றார். அரசன் மரத்தடியில் வீற்றிருந்தது முதல் இரவும் பகலும் அயர்ந்தநித்திறை கொண்டதைக் கண்டறியோம். சதாவிழிப்பும், சதா அறவுரைப் போதனைகளுமே அவருக்கு ஆனந்த நித்திறைபோற் காண்கின்றது.