பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மணிமேகலை

மெய்யுணர்வின்றி மெய்ப்பொருணர்வரிய / வையமல்ல தறுதிச் சொற்பெறா
கருமத்தொகுதி மீளத்தோற்ற மீளுந் / தோற்ற மீளப் பிறப்பு மீளும்
பிறப்புப் பிணி, மூப்புச்சாக்கா டவல / மாற்றுக்கவலை கையாரென்றென்று
கடையிற்றுன்ப மெல்லா மீளு / மிவ்வகையான மீட்சி யற்று
கண்ட மாகுமென்ப / பேதமெசெய்கை யென்றிவை யிரண்டுங்
காரணம் ஐய மாதலானே / யிரண்டாங் கண்ட மாகுமென்ப
வுணர்ச்சி யருவுருவாயிலூறே / நுகர்ச்சி யென்று நோக்கப்படுவன
முன்னவற் றியல்பால் உன்னிய வாதலின் | மூன்றாங்கண்டம் வேட்கைப் பற்றுக
கரும வீட்டமென கட்டுரைப்பவை / மற்றும் பற்று நிகழ்ச்சி யொழுக்கிலுட்
குற்றமாம் வினையே விளைவாக லானே / ரன்காங் கண்டம்
பிறப்பே பிணியே மூப்பே சாவென / முதிர்ந்திடுந் துன்பமென விவை
பிறப்பினுட்கும் பயனாதலினாற் / பிறப்பின் முதலுணர் வாதியாகி
வினையுனுடை முதற்சந்தி / நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டறும்
புகர்ச்சியி னறிவ திரண்டாஞ் சந்தி / கன்மக்கூட்டத் தொடுவருபிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி / மூன்றுவகை பிறப்பு மொழியுங்காலை
யான்றற மார்க்கத் தாயவுணர்வொடு / தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியு
முணர்வுள்ளடங்க வுருவாய் தோன்றியு / முணர்வுள்ளுருவு முடங்கி தோன்றும்.

ஆனந்தா, ஊனக்கண்ணால் க்ஷணத்திற்குச்சணம் அழிந்துகொண்டே போகும் பொய்ப்பொருளைக் காணக்கூடும். அம்மெய்ப்பொருளே தானே தானாய் தலைவனாகுந் ததாகதரைக்காணும் ததாகதரோ தன்னை ஆய்ந்தறியுந் தருமத்தை ஊட்டுவார். ஊட்டப்பெற்றோர் தங்களை ஆய்ந்து தங்கடங்கள் மனதை அறிவுக்குள் ஒடுக்கி அலைவற்ற மெய்ப்பொருளாய் நிலைக்க வேண்டியவை அவரவர்கட் செயலாகும். அவரவர்களின் ஊனக்கண் பார்வையை ஒழித்து ஞானக்கண் பார்வையினிலைப்பதே முக்காலச் செயலையும், முக்காலத் தோற்றத்தையும், மூவுலகத்தையுந் தோற்றுவிக்குங் களங்கமற்றக் கண்ணாடியாகும். களங்கமற்ற கண்ணாடியே மாசற்ற மனமாகும். மாசற்ற மனமே அறிவிலடங்கிய மெய்ப்பொருளாகும். மெய்ப்பொருளுணர்வே பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடெனுந்துன்பங்களை ஒழித்த பற்றற்ற நிலையே நிருவாணமென்னப்படும். அந்நிருவாணநிலையோ உலகப் பற்றற்றதுடன் உடல் பற்று மற்று புழுக்கூட்டில் ஒடுங்கியுள்ள விட்டில் போலும், ஓட்டிலடங்கியுள்ள பழம்போலும் பற்றியும் பற்றற்றிருக்கும். அப்பற்றற்ற பழம்பொருள் பரிபூரணமாய் வெளிதோன்றலே பரிநிருவாணமென்னப்படும். அப்பரிநிருவாணமே ததாகத ருருங்காலம் ஈதாதலின் ஒவ்வொரு வரும் இதனை நன்குணருங்கோளென்று கூறிவருங்கால் ஆனந்தனெழுந்து அருகனின் அடிபணிந்து ஐயனே, எங்கள் பற்றுக்களை அறுப்பதில் இராகத்துவேஷ மோகமென்னும் பற்றுக்களைமட்டும் அறுப்பதா அன்றேல் சாந்தத்தைப் பெருக்கல் வேண்டும் அன்பை வளர்த்தல் வேண்டும், ஈகையில் நிலைத்தல் வேண்டுமென்னும் பற்றையும் அறுப்பதா இவ்விரண்டின் விவரங்களையும் விளக்கி ஆதரிக்கவேண்டும் என்றிரைஞ்சினான்.

மணிமேகலை

மெய்க்குணத்தடைதல் அல்லதூஉ நிலனாய் / மையாயுழல்வதும் நீராயிழைவதும்
தீயாய் சுடுவதுங் காற்றாய் வீசுவதும் / மாயதொழிலை யடைந்திடமாட்டா
நேரினுந் தெய்வக்கண்ணா ருணர்குனர் / நோலாபூதத் திரட்சியுள்ளானோர்
மாலைப்பொழுதி லொருமயிரறியார் / சாலத்திரள்மயிர் தோற்றுதல்சாலுங்
கருமப்பிறப்புங் கருநிலப்பிறப்புஞ் / சேமம் பிறப்பும் எண்ணப் பிறப்புமென்
மிவ்வாறு பிறப்பினும் பண்புறு வரிசையின் / பாற்பட்டிறந்து கழிந்த வறிவே
பிறப்பிற் கலந்து.

சீவகசிந்தாமணி

காதலுங் களிப்புமிக்குங் கங்குலும் பகலும் இல்லார்
சாதலும் பிறப்பு மில்லா தண்மெய் பெற்றவர்க ளொத்தார்.

அறவாழியான் ஆனந்தனை நோக்கி குழந்தாய், சாந்தம், அன்பு, ஈகை இம் மூன்றும் உனது சுயரூபம். மத்தியில் பாற்பட்டு கலந்த காம, வெகுளி, மயக்கம் இம்மூன்றும் துப்புற நீங்கியவிடத்து சாந்தம், அன்பு, ஈகை இம் மூன்றுந்தானே தானாய் விளங்கும். நான்கு வாய்மெயின் பலனை உணர்ந்து சுகவாரியினிலைக்கும்.