பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 403


அச்சுகவாரிக்கு செல்லுஞ் சுகத்தை, நீரே நினது சிற்சுகத்தில் உணர்ந்துக் கொள்ளலாம். அதாவது ஆனந்தா, தாமும், தமதுதோழர் பிருங்கியும், நடக்கவியலா சப்பாணிகளாகி தவழ்ந்து திரிந்தவர்கள் தற்காலம் எழுந்து நிற்கவும்நடக்கவும் உண்டாகிய ஏதுஎதுவென்று வினவினார். ஆனந்தன் அவலோகிதரடிபணிந்து தேவாதிதேவா, தமது சத்தியதன்ம போதனையும் கிருபா நோக்கமுமே ஏதுவென்றான். பகவன் ஆனந்தனை நோக்கிக் குழந்தாய் எனது கிருபா நோக்கம் உமது நற்செயலை நோக்கியிருக்குமேயன்றி வேறிராது. சத்திய தன்மத்தைப் பின்பற்றி ஒழுகிய ஒழுக்க ஏதுவே இம்மட்டும் உமது பயிரங்கத்தையும் அந்தரங்கத்தையும் சுகச்சீர்பெறச் செய்துவருகின்றது. நீங்கள் முற்றிலும் சத்தியதன்மத்தில் நிலைத்து பாபப் பற்றுக்களற்று இதயசுத்த முண்டாகி நன்மெய்க் கடைபிடித்து அதன் பயனால் புறமெய் ஈதென்றும், அதுவடைந்த சுகம் ஈதென்றும், உண்மெய் ஈதென்றும், அதன் சுகம் ஈதென்றும் தெள்ளற உணர்ந்துக் கொள்ளுவீர்களாயின் தற்காலந் ததாகதர் பெறும் பரிநிருவாண சுகமும் பெறுவீர்களென்று முகித்தார்.

அறவாழியந்தணன் கூறிவந்த சத்தியதன்மங்கள் யாவையுங் கேட்டிருந்த கௌண்டினனென்னும் சிரமணனெழுந்து சீமானை வணங்கி, தேவாதிதேவா! தமது சத்திய சங்கத்தைச் சார்ந்தது முதல் அடியேனுக்கோர் சங்கை உண்டு. அவையாதென்பீரேல், நாங்களில்லறம்விட்டுத் துறவறம் பற்றியவுடன், சிரமயிர் கழிக்கவும், பிட்சாபாத்திரங் கைகளிலேந்தவும் பொன்னிறம் போன்ற மஞ்சளாடைகள் அணைவதுமாகியக் காரணங்கள் விளங்கவில்லை. அவற்றை விளக்கி ஆட்கொள்ளவேண்டும் என்றடிபணிந்தான்.

அவனது சங்கையை உணர்ந்த அருகன் கௌவுண்டன்யனைநோக்கி குழந்தாய் காட்டிற்கும் நாட்டிற்கும் மத்தியில் கட்டிடங்களை நிருமித்து சங்கத்தோர்களை அங்கு நிலைக்கச்செய்தது காரணம் யாதெனில், பாபத்தை ஒழித்து நன்மெய் கடைபிடித்து இதயத்தை சுத்திசெய்யவேண்டியவர்கள் இல்லறத் தொல்லையாம் பல பற்றுக்களும் இருந்து செய்வது கஷ்டமாதலின் சங்கத்தோரை வேறுபடுத்துங் காரணமுண்டாயிற்று. சங்கத்தில் சேருங்கால் சிரமயிர் கழிக்கவேண்டிய காரணமோவென்னில் இல்லறத்திலிருந்து சிரமயிரை சிக்கங்கோலிட்டு சீவுவதும், சீர்திருத்துவதுமே பெருவேலையாகும். அத்தகைய சீர்திருத்தத்தை மனோ சீர்திருத்தக்காரரேற்றுக்கொள்ளுவதனால் தங்கள் விசாரிணைக்கு சுகக்கேடுண்டாவதுடன் தேகசுகத்திற்கும் இடையூறுண்டாமாதலின் இல்லறக்குடும்ப சுகத்தை விரும்புவோருக்குக் குடுமியும் துறவறத்தூய தண்மெயை விரும்புவோருக்கு சிரமயிர் கழித்தலும் பற்றினைக்கழிக்கும் முதற்சீராகும்.

இவற்றுள் சிரமண நிலையாம் முதற் சாதனர்களுக்கே இவைகள் வேண்டியவன்றி தவநிலை முதிர்ந்த சிரமணர்களாம் அறஹத்துநிலை அடைபவர்களுக்கு மயிரைக்கழித்தலும், மயிரை வளர்த்தலுமாகியச் செயலும் எண்ணமுமில்லையாகும்.

பிட்சாபாத்திரங் கைகளில் ஒடுக்கவேண்டிய காரணமோவென்னில் டம்பத்திற்கும், அகங்கரிப்புக்கும் மூலமாகும் இராகத்துவேஷ மோகங்களைக் கழிக்கும் இரண்டாஞ் சீராகும்.

வாசிட்டம்

பொன்போலயிலங்குமனம், சஞ்சலத்தாற் குரங்காம்.

ஞானக்குறள்

வெள்ளிபொன்மேனி யாதொக்கும் வினையுடைய,
உள்ளுடம்பினாய ஒளி.

பட்டினத்தார்

விமலர்தந்த வோடு நமக்குண்டு

பொன்னிறம்போன்ற மஞ்சளாடை அணையவேண்டிய காரணமோ வென்னில் பொன்னிறம்போன்ற மனதை ஆசாபாச பல பற்றுக்களடர்ந்து அல்லலுறும் பிறவிக்கு ஆளாக்குகின்றபடியால் ஆசாபாசக் களங்கங்களைக்