பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கழற்றி மனதின் உள்ள பொன் சுயரூபத்தைக் கண்டடைவதற்கு மாறாகியாபக மூன்றாஞ் சீராகும்.

மச்சமுனி ஞானம்

கேட்டறிந்துக்கொள்வீடென்ன காடென்ன கெட்டிப்பட்ட மௌனத்திலே நின்று, மாட்டறிந்துக்கொள்வஸ்துவையுண்டு நீ மனதைத்தாண்டி அறிவுக்குள்ளே செல்ல, பூட்டறிந்துக்கொள் (பொன்போல் தேகமாம்) மாட்டறிந்துக்கொள்
கற்பூரதேகமாமகண்டசோதியும் சித்தியுமாச்சுதே.

ஞானமதியுள்ளான்

ஆதி குருவோனை அடண்ணே ஆனந்த வாழ்வோடு
வேதியர்தந்த வோடு அடண்ணே வல்லதிருவோடிதே.
சாதிதவிர்ந்தவோடு அடண்ணே தான்பலிகொண்டவோடு
ஜோதிமணியோடு அடண்ணே சொல்லுந்திருவோடிதே
ஆதிசிவனோடு அடண்ணே அன்னைதான் தந்தவோடு
ஒதி உணர்ந்தவோடு அடண்ணே உற்றகை சிற்றோடிதே
வேதனளித்தவோடு அடண்ணேவெவ்வினையோட்டும்வோடு
மாதவபோதனனார் முன்பளித்த முத்தித் திருவோடி தே.

உலக விவகாரப் பற்றுக்களை ஒழிப்பதற்காக பிரத்தியேக மடங்களையும், ரோமத்தை வளர்க்கவும், வாரவும், சிக்கங்கோலிடவும், சீர்திருத்தவும் வேண்டிய தொல்லைகளை அறுக்க சிரமயிர் கழிப்பதையும், நானென்னு மமகாரமற பிட்சாபாத்திர மேந்துவதையும் உண்மெயாம் பொன்னுருகாண மஞ்சள்நிறப் பொன்னாடை அளித்ததையும் விளக்கிக் கொண்டு வருங்கால் சேணிபனென்னும் அரசன் வந்து செல்வனை வணங்கி தேவரீர் தாம் போதித்துவரும் தன்மங்கள் யாவும் துறவறம்பூண்ட சங்கத்தோருக்கே உபயோகமாகின்றதன்றி இல்லறம் பூண்ட குடும்பிகளுக்கு யாதொரு தன்மமுங் காணாதபடியால் இவ்வடியேனுக்குக் குடும்ப தன்மத்தை விளக்கியாட்கொள்ள வேண்டுமென்று அடிபணிந்தான்.

பகவன் சேணிபனை நோக்கிக் குழந்தாய், ததாகதர் மனையறமுந் துறவறமும் இரண்டையுமே போதித்துள்ளாரன்றி வேறில்லை. அதாவது மனையற வொழுக்கத்தினின்றோனே துறவறத்திற்கு அருகனாதலின் மனையற சுகவாழ்க்கையே துறவற முத்திப்பேற்றுக்கு வழியாகும்.

ஆதலின் குடும்ப சோதிரர்களே, முதலாவது சுகவழி தேடல் வேண்டும். அதாவது ஒர் குடும்பத்தில் தனதான்யப் பெருக்கமிருந்து ஒருவருக்கொருவர் அன்பும் ஒருவருக்கொருவர் சமாதானமும் இல்லாமற்போமாயின் அக்குடும்பத்தில் தனதானியமிருந்தும் ஒன்றுமில்லை என்பதேயாம்.

மற்றொரு குடும்பத்தில் தனதானியமில்லாமல் எழியநிலையிலிருப்பினும் அக்குடும்பத்தோர் ஒருவருக்கொருவர் அன்பும், சமாதானமும், அமைதியும், ஆற்றலுமுற்றிருப்பார்களாயின் அவர்களையே தனதானிய சம்பத்துடையவர்களென்று கூறலாகும்.

மனவாறுதலும் அமைதியும் களங்கமற்ற சமாதானமும் உடையவர்களாக வாழும் குடும்பத்தையே சகலசம்பத்தும் அமைந்த குடும்பமென்று கூறத்தகும். அத்தகையக் குடும்பத்தோர் எடுத்த முயற்சிகள் யாவும் நிறைவேறும். அக்குடும்பத்துள் விவேகமிகுத்தோர்களே கூடிய சீக்கிரஞ் சாது சங்கஞ் சேர்ந்து நிருவாணசுகம் பெறுவார்கள்.

ஓர் குடும்பத் தலைமகன் தனது தாய்தந்தையர்களையே காப்பாற்றினவர்களெனக் கண்டு தன்னைக் குழந்தைப்பருவத்தில் ஈ எறும்பும் அணுகாமல் கார்த்ததுபோல் அவர்களுக்கோர் துன்பமும் அணுகாமல் கார்த்து வேண்டிய புசிப்பும் ஆடையுமளித்து அன்புடன் பயபற்றுடனும் ஆதரித்துவரல் வேண்டும் அவ்வகை ஆதரித்துவருதலே குடும்பத்தலைவனின் மக்கள் தனது தந்தையின் பேரானந்தச் செயல்கண்டு பழகி வருவார்களாயின் இவர்கள் குடும்பத்தலைவர்களாயபோது தங்கள் தாய்தந்தையர்களைக் கனஞ்செய்து களிப்பின் செயலில் நிலைப்பார்கள். அத்தகைய நிலையிலுங் குடும்பத்தோர்கள் ஒருவருக்கொருவர் விலகிய வாழ்க்கைப் பெறாது சேர்ந்து வாழ்கவேண்டியதே ஒருவருவக்கொருவர் ஆதரவையுங் கொடுக்கக் கூடியதாகும்.