பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 407


மூன்று இரத்திநங்கள் (மும்முறை)

புத்தபகவானை வழிகாட்டியாகத் துணைக்கொள்ளுகிறேன்
அவரது தர்மத்தை வழியாகத் துணைக்கொள்ளுகிறேன்
அவரது சங்கத்தை வழிக்குத் துணையாகத் துணைக்கொள்ளுகிறேன்.

பத்துக் கோட்பாடுகள் அல்லது குருபீடத்தின் சட்டங்கள்

1. பானாதி பாதா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி
2. அதின்னாதானா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி
3. அஹபரஹம சரியா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.
4. மூஸாவாதா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி
5. ஸுராமேறய மஜ்ஜப மாதட்டாணா வேறமணி சிக்ஹா பதங் ஸமாதியாமி
6. விகாள போஜனா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி
7-8-9 நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமாலகந்த, விவப்பண தாரணமண்டன விபூஷணட்தானா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.
10. உட்சாஸயன மஹாஸயன வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.

1. ஜீவஹிம்சை செய்யாதிருத்தல் 2. களவாடா திருத்தல் 3. பிறன்மனை நயவாதிருத்தல் 4. பொய் மொழியாதிருத்தல் 5. கள் முதலிய லாகிரி வஸ்துக்களை அருந்தாதிருத்தல் 6. அகாலங்களில் போஜனம் அருந்தாம லிருத்தல் 7.ஆட்டம் பாட்டம் இல்லாம லிருத்தல் 8. புட்பம், வாசனை திரவியங்களால் தேகத்தை அலங்கரிக்காதிருத்தல் 9.வெள்ளி, பொன் முதலியவைகளைத் தொடாதிருத்தல் 10. உயர்ந்த அல்லது பெரிய பீடத்தில் உட்காராதிருத்தல்

இவைகளே சன்மார்க்கத்திற்கு ஏதுவானது. சிஷ்யன் பின்வருமாறு கூறுவான். இப்பத்துக் கோட்பாடுகளையும் தங்களிடம் கற்றறிந்தேன். ஆசீர்வதியுங்கள். எழுந்து குருநாயகனுக்கு வழிபடுகிறான் தடுத்தாண்டக்கோனே, நமஸ்கரிக்கின்றேன். சிஷ்யன் முழந்தாளிட்டுக் கொண்டு ஆசிரியர் மூன்று அடைக்கலங்களையும் பத்துக்கோட்பாடுகளையும் சொல்லிக் கொண்டுவர பின்னோடே தானுஞ் சொல்லுவான்.

பிரதம குருவாய்ச் சேர்க்கப்படுவதற்குரியவன் குருவாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் முன்கூறியபடி சடங்கு நிறைவேற்றப்படுகின்றது. பிரதம குருவாவதற்கு பக்குவியாயிருக்கும் பக்ஷத்தில் குருபீடத்தினின்ற உடனே பிரதமகுரு பீடத்திற் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். இல்லாவிடில் குருவாயிருந்து சிலநாள் உபதேசம் பெறவேண்டும். ஆனால் குருவாயிருந்தவன் பிரதம குருவாவதற்கு மறுபடியும் ஆசிரியர்களுக்குப் பழையப்படி விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.

குருவாய்ச் சேர்க்கப்படவேண்டுபவன், தனது குருநாயகனோடு திரும்பிவந்து பிரதமாசரியருக்கு வந்தனம் புரிந்து பின் வருமாறு கூறுவான்.

நான் விஞ்ஞாபனம் செய்துகொள்ள அநுமதிகொடுங்கள். பிரபோ அடியேனைக் கடைக்கணித்து அநுக்கிரஹம் புரியுங்கள். (முழங்கால் படியிடுகிறான். மூன்றுமுறை சொல்லுகிறான்)

குருநாயகன்-சரி, அப்படியே யாகக்கடவது.

பக்குவி-அடியேன் திருப்தியடைகிறேன். (மூன்றுமுறை) இந்த நாளிலுமிருந்து அடியேனையாட்கொள்ளுங்கள் அடியேன் தங்களுக்கு அடிமைப்பட்டவனாய் இருக்கிறேன். (மூன்றுமுறை.)

பிறகு அவன் எழுந்து நமஸ்கரித்து சபையின் கோடியில் தனியாய்ச் செல்கிறான். அவ்விடத்தில் அவனுக்குப் பிக்ஷாடன பாத்திரத்தை முதுகில் கட்டப்படுகிறது. அவனுடைய ஆசிரியன் அங்குசென்று அவன் வலக்கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பிரதமாசாரியின் சமீபத்தில் விடுகிறான். சபையினின்று ஒருகுரு எழுந்து பக்குவியின் பக்கத்தில் நிற்கிறார். இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே பக்குவிநின்றுகொண்டு இருக்கையில் குருவானவர் சபையோரை அநுமதி கேட்டுவிட்டுப் பக்குவியைநோக்கிப் பின்வருமாறு கேழ்விகள் கேட்பார்.

குரு: - உன் பெயர் ஞானவன்ஸாவா

பக்குவி: - ஆம், பிரபுவே

குரு: உனது ஆசாரியன் பருசுத்தமான தர்ம்மகீர்த்தியா