பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பக்குவி: - ஆம், பிரபுவே

இரண்டு குருமார்களும் பின்வருமாறு கூறுவார்கள். பரிசுத்தமானவரும், ஆசிரியிக்கப்பெற்றவரும், உண்மெயை அறிந்தவருமான புத்த பகவானுக்கு ஸ்தோத்திரம்.

பிறகு புத்தரது கட்டளைகளை அக்குருமார் சொல்லுவார்கள்.

முதலில் ஆசாரியனை நியமிப்பது யுக்தமாகும். ஆசாரியனை நியமித்தபிறகு பிக்ஷாடன பாத்திரத்தையும் காஷாய வஸ்திரத்தையும் பக்குவி யடைந்திருக்கிறானா என்று கேட்பது யுக்தம்.

குரு: இதுதானா உன் பிக்ஷாடனபாத்திரம்

பக்குவி: ஆம், பிரபுவே

குரு: இதுதானா உன் உடை

பக்குவி: ஆம், பிரபுவே

குரு: இதுதானா உன் உத்தநீயம்

பக்குவி: ஆம், பிரபுவே

குரு: இதுதான் உன் வேஷ்டி

பக்குவி: ஆம், பிரபுவே

குரு: நீபோய் அவ்விடத்தில் நில்

பக்குவி வணக்கமாய் அவ்விடத்தைவிட்டு சபையின் ஓரத்திற்கு சென்று நிற்பான். குருமார்கள் பிரதமாசாரியருக்கு முன்பாக நின்று கொண்டு சபையை நோக்கிக் கூறுவார். ஆசாரியர்களே செவிகொடுங்கள் இந்த மனுஷ்யன் பரிசுத்தமான தர்ம்மகீர்த்தியின்கீழ் குருவாயிருக்கப் பிரார்த்திக்கிறான் ஆசாரியர் சபை கூடுதற்குச்சமையம் இதுதான். நான் பக்குவிக்கு உபதேசம் செய்கிறேன். குருமார் பிரதமாசாரியருக்கு நமஸ்காரம் செய்து சபையின் கோடிக்குச்சென்று பக்குவிக்குப் பின்வருமாறு உபதேசம் செய்வார்கள். ஞானவன்ஸா, கேட்பாயாக. இப்போது நீ நடந்தவற்றை உண்மெயாய்ச்சொல்லவேண்டியது. சபையில் உன்னைக் கேட்கும்போது உண்மெயாயிருந்தால் ஆமென்றும் உண்மெயா யில்லாவிட்டால் இல்லை என்றும் சொல்லவேண்டியது. ஆலஸ்யம் செய்யக்கூடாது. ஒன்றையும் மறைக்கப்படாது. பின்வரும் கேள்விகளைக் கேட்பார்கள். உனக்கு குஷ்டம் பிளவு, சொரி, சிறங்கு, குளிர் ஜுரம் முதலியவியாதிகள் ஏதேனும் உண்டா.

பக்குவி. இல்லை, பிரபுவே
குரு. நீமனுஷ்ய ஜாதியைச் சேர்ந்தவனா
பக்குவி. ஆம், பிரபுவே
குரு. ஆம், ஆண்மெயனா
பக்குவி. ஆம் பிரபுவே
குரு. நீயோர்க் களத்தில் யுத்தம் செய்பவனல்லவே
பக்குவி. அல்ல, பிரபுவே
குரு. உன்னைப் பெற்றோர் சம்மதத்தைப்பெற்று வந்திருக்கிறாயா
பக்குவி. ஆம், பிரபுவே
குரு. உனக்குப் பிக்ஷாடனபாத்திரமும், காஷாய வஷ்திரமும் இருக்கிறதா
பக்குவி. ஆம், பிரபுவே
குரு. உன் பெயரென்ன
பக்குவி. என் பெயர் ஞானவன்ஸா
குரு. உனக்கு ஆசாரியன் யார்
பக்குவி. எனக்கு ஆசாரியன் பரிசுத்தமான தர்ம்மகீர்த்தி, பிரபோ

இரண்டு குருமார்களும் சபையின் முன்னேபோய் சபாநாயகருக்கு நமஸ்காரம் செய்து பின்வருமாறு கூறுவார்.

ஆசரியர்காள். செவிசாய்த்துக்கேட்டருளுங்கள். பக்குவி பரிசுத்தமான தர்ம்மகீர்த்தியின் கீழ் ஆசார்யனாய்ச் சேர்க்கப்பட விரும்புகிறான். குருமார் சபைகூடுதற்குச் சமையம் இதுதான். பக்குவி இவ்விடம் இருந்தால் அருகில் வந்து நிற்கக்கடவன், ஒருகுருபக்குவியருகில் வரவழைக்கிறான் பக்குவி வந்து