பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 409

இரு குருமார்களுக்கும் மத்தியில் வந்து நின்று முழங்கால் பணியிடுகிறான் ஆசரியர்காள்! யான் சொல்லுவதைக் கேட்டருளுங்கள். பரிசுத்தமான தர்ம்மகீர்த்தியினடிக்கீழ் ஆசிரியனாய்ச் சேர்க்கப்பட விரும்புகிறான். ஆசரியர் சபைகூடச் சமையம் இதுதான். ஆசரியனாயிருக்கத் தக்கவனாயிருக்கின்றானா வென்று பக்குவியைப் பரீக்ஷிக்கிறேன்.

கேள்விகள் முடிவு பெறுகின்றன. பிறகு ஒரு ஆசிரியன் இவ்வாறு கூறுகின்றான்.

பரிசுத்தமான தர்ம்மகீர்த்தியின்கீழ் ஆசார்யனாயிருக்க இந்தபக்குவி வேண்டுகிறான். அவன் அந்த பதவிக்குரிமெயுள்ளவன். அவனுக்குப் பிக்ஷாடன பாத்திரமும் காஷாய வஸ்திரமும் உண்டு. இந்த பரிசுத்தமான சபையில் யாருக்காவது அங்கீகரமாயிருந்தால் பேசாமலிருக்கட்டும் யாருக்காவது ஆக்ஷேபமிருந்தால் அவன் எழுந்து சொல்லலாம். சபையார் அவனைக் குருவாய்ச் சேர்த்துக்கொள்ள அங்கீகரிக்கிறார்கள். மூன்று முறை இரண்டு குருமார்களும் சபாநாயகருக்கு நமஸ்காரம்செய்து பின்வருமாறு கூறிமுடிப்பார்கள். பக்குவி பரிசுத்தமான தர்ம்மகீர்த்தியின் கீழ் குருபதவிக்குச் சேர்க்கப்பட்டான். சபையார் இதை அங்கீகரிக்கிறார்கள். ஆகையால் வாய்திறவாமல் இருக்கிறார்கள். ஆதலால் இதுதான் உங்கள் விருப்பமென்று தெரிந்துக்கொள்ளுகிறேன். சங்கபோதமுடிந்தவுடன் அறவாழி அந்தணன் ஆனந்தனை நோக்கி சகல சங்கத்தலைவர்களையும் அருகில் அழைக்கும்படி ஆக்கியாபித்தார். சகல சங்கத்தவர்களும் அருகில் வந்து அறனை வணங்கி வாய்ப்பொத்தி நின்றார்கள். அவர்களது அன்பின் பெருக்கையுணர்ந்த அருகன் ஆனந்தமுற்று சங்கத்தலைவர்களே ததாகதர் கண்டக் காட்சியை உலகில் தோன்றியுள்ள மக்கள் யாவருக்கும் விளக்கி என்றும் அழியா மெஞ்ஞான விளக்கை ஏற்றிவிட்டார். சங்கத்தலைவர்களாகிய நீங்கள் மேலும் மேலும் அவைப் பிரகாசிக்கத் தூண்டி ஞானவொளியில் நிலைத்து நிருவாணம் பெற்று அறஹத்துக்களும் பிராமணர்களுமாகி சருவ சீவர்கள்மீதும் அன்பு பாராட்டி சத்தியதன்மத்தை மாறாமலூட்டி தற்காலம் ததாகதரடையும் பரிபூரண சுகமாம். பரிநிருவாணமடைந்து பிறவி துக்கத்தை ஒழித்துக்கொள்ளுங்கோள் என்றடங்கிவிட்டார்.

வீரசோழியம்

கூரார் வளையுகிர்வாளெயிற்றுச் செங்கட்
கொலையுழுவை காய்பசியாற்கூர்ந்த வென்னோய்நீங்க வோராயிரங்கதிர் போல்வாள் விரிந்தமேனி யுளம்விரும்பிச்சென்றாங்கியைந்தனை நீ
என்றான். காரார் திரைமுளைத்த செம்பவளமேவுங்
கடிமுகிழ் தண்சினையகா மறுபூம்போதி
யேரார் முனிவரர் வானவர்தங் கோவே
எந்தாயரோ நின்னை ஏற்றாதார்யாரோ
திருமேவு பதுமஞ் சேர் திசைமுகனா முதலாகு
வுருமேவி அவதரித்து உயிரனைத்து முயக்கொள்ளுவான் இவ்வுலகுங் கீழுலகு மிசையுலகுமிருள் நீங்க
எவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்த செழுஞ் சுடரென்ன
விலங்கு கதிரோரிரண்டு விலங்கிவலங்கொண்டு லவ வலங்குசினைப் போதிநிழ லறமமர்ந்த பெரியோய் நீ.

அருங்கலைச்செப்பு - பரிநிருவாணப்பத்து

பரமுத்தியாய பாக்கியத்தைப் பெற்றான், திரசித்தி காண்டச்சிவன்.
வாள்போன்ற நல்லொளிவளர்த்தானுடலெங்கும், நீள்விசும் புலாவும் நிலை.
உச்சி வழியால் அலைந்துகிளையுள்ளொளியின், சொச்சவுளங் கண்டகன்ற சீர்.
அம்பரமாமுள்ளொளியே நல்லொளியாய் தோன்றி, உம்பர்க்குயர்வழியானான்.
பிறவியறுத்தப் போரொளியைக் கண்டோர், துறவினானந்தமிதென்றார்.
சுகவாருதி நிலையே சூழொளியதாகி, பகவனெனப்பரந்த பேர்.
சுகங்கண்டடைந்த சுழிமுனையாந் தோற்றம், அகண்டத்துலாவுவதேயாம்.
புவியத்திற காலூன்றா பொன்னொளிதேகத்தின், அவியாமுதற் பரமானார்.
ஒளி கனலற்ற உண்மெயாந் தண்ணொளியாய்க், களிப்பவர்க் காட்சியதுவாம்.
கருணை வடிவுங் காட்சி நல்ஞானத்தோர், குருவடிவாய்த் தோற்றுமொளி.