பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அம்மனிடஞ்சென்று விசாரித்தால் இம்மாறிக்கு ஏதேனும் பரிகாரஞ் சொல்லுவாள் என்னும் அவாக்கொண்டு உமளநாடணுகி அம்பிகையை சேவித்து நாகைநாட்டின் குறைகளை விளக்கினார்கள்.

அம்மன் உள்விழிநோக்கி மக்களை அழைத்து உங்கள் உள்ளங்களிலுள்ள அன்பையும் அறனையும் அகற்றி வஞ்சகம், பொறாமெய், பொருளாசைக், கெடுமதி இவைகளை நிரப்பிக்கொண்டபடியால் வானம் பெய்யாது சாமளை என்னும் விஷக்காற்று உங்கள் நாட்டிற் பரவி உயிர்களைக் கொள்ளை கொள்ளுகின்றது.

இப்பவும் உங்களுள்ளங்களில் உள்ளக் கள்ளங்களை அகற்றி இதயம் சுத்தஞ் செய்வதுடன் வீதிகளையும் வீடுகளையும் சுத்தஞ் செய்து மட்டிப்பால் புகை கற்பூரப் புகைகளை வீடுகள் எங்குங்கமழ நிரப்பி நிம்பத்தார் என்னும் வேப்பிலைத் தோரணங் களைக் கட்டுவதுடன் வீட்டின் வாயற்படிகளிலும் சொருகி பலதானியங்களை உப்பிடாமல் அவித்து ஏழைகளுக்கு தானங் கொடுப்பதுடன் பச்சரிசி மாவும் கூழுந் தானமளிப்பீர்களானால் இதய சுத்தத்தாலும், தேச சுத்தத்தாலும், வேப்பிலை மணத்தாலும், கற்பூரப்புகை யாலும், அவிரிப்புகையாலும் சாமளைப் புழுக்கள் அகன்று கொள்ளை நோய் அகன்று குணம் அடைவீர்கள் என்ற வாக்கைக் கேட்டவுடன் நாகைநாட்டுக் குடிகள் இதயசுத்தம் தேச சுத்தம் செய்ததுடன் அன்பைப் பெருக்கி தானம் அளித்த விஷயத்தால் கொள்ளைநோய் நீங்கி உள்ளம் குளிர்ந்தார்கள்.

சமண நீத்தோர் தண்ணந்தம்மருள் / பெற்று காவிரிபூகநீழ
லுற்று யாக்கை யுண்மெயுணர்ந்து / நாகை நாடு நடுக்குதுன் மாறி
வேக மாற்ற வுரவோர்க்கன்று / வன்பு மறனு மகலவிட்டீர்
துன்பக் கிருமி துடர்ந்த துள்ளம் / உள்ளக் களங்க மகற்றியூரின்
தெள்ளுந் தூசித் துடைத்து மட்டிப் / பாலின் புகையும் பூரப் புகையும்
நீலிப் புகையும் நிரம்பப் பயின்று / பாகு மாவுங் கூழும் பயிறும்
வேகுங் கும்பிக் கிட்டு மவித்து / உண்டி கொடுத்து வுயிரளிப்பீரேல்
பண்டை வினையின் பற்றறுப்பீர்காள் / நிம்பத் தாரி னிரை தோரணங்க
ளம்பலவீதி யெங்கு நிரப்பி / வாய நிலையிலு மாட மலைவிலும்
நேய நிம்பத் தார் மண மூட்டி / யக சுகவாரி யன்பி னிலையால்
தகை மும்மாரிப் பெய்து சாமளைக் / கிருமி யகன்றுக் கிருபாக் கடலா
மருக னருளும் வாய்மெயு முருமென / சாமளை யுற்ற சிலுகை விளக்கி
வாமன் பிடகம் வரையறுத்தோதி.

அம்மன் வாக்கினாற் சொன்னபடி நாகைநாட்டாரை வதைத்தக் கொள்ளைநோய் அகன்று சுகமுற்றவைகளைக் கண்ட ஒவ்வோர் அரசர்களும் குடிகளும் அம்மனைவந்து தாமரை புட்பத்தால் அர்ச்சித்துக் கொண்டாடுவதுடன் பலவகைப் புட்பங்களால் அம்மன் தேகத்தையும் மறைத்து ஆனந்தத்தியான முற்றிருக்குங்கால் அம்மன் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் நீதிமார்க்கத்தினின்று நிருவாணசுகமடையும் போதி போதங்களாகிய திரிவாசகம், மூதுரை, ஞானக்குறள், இரத்தினகரண்டக முதலிய நூற்களியற்றி அரசர் கரங்களில் ஈய்ந்து மடங்களுக்கு அனுப்பி தசசீலாம் தங்களைப் பரவச்செய்து வந்ததுமல்லாமல் ஆதியங்கடவுளாகிய சாக்கைய முநிவரின் மும்மொழியும் மும்மொழிகளைத் தழுவிய நான்கு பேதவாக்கியங்களின் முடிவும், மூலர் திரிமந்திரமும் நாயனார்த் திரிக்குறளும் நானியற்றியுள்ளத் திரிவாசகமுமாகிய நூற்களில் முநிவர் நூல் முதனூலும், நாயனார் நூல் வழி நூலும், மற்றும் நூற்கள் சார்பு நூற்கள் என்றும் விளக்கிக் காண்பித்தாள்.

முனிவன் கண்ட முதனூநிருவி / இனியவழிநூ லியற்றனன் நாயன்
முதநூல் வழிநூல் முற்று முணர்ந்து / விதய மும்மறை முடி புரையாற்றி
படி மிசை மூவர் பெருதிரி மந்திரம் / முடி புரை யாற்றி மொழிந்தனர் சார்பாய்.
மூலர் மொழிந்த மந்திர மூன்றுஞ் / சாலமொழிந்தேன் திரிவாசகம் யான்
மங்கை மாதர் வேராமஞ்சள் / கெங்கை கிழங்கைக் கூட்டறைவித்து
தேகமெங்குந் தீட்டிக் குளித்து / வேக சுன்னக் குங்கும மிட்டு

என்பதன் கருத்தோவெனில் மங்கைப் பருவமடைந்த மாதர்கள் மஞ்சள் கிழங்கை அறைத்து தேகமெங்கும் பூசிக் குளித்து மஞ்சளும் சுன்னமும் கலந்த