பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410 / அயோத்திதாசர் சிந்தனைகள்


உத்திராயண நிலயமுள்ளத்தொளியாய், சித்திரபானுக் கணிதஞ்சேர்.
அல்லும் பகலுமது வகன்ற உள்ளொளியாய், பல்லவத்திலே அமர்ந்தான் பார்.
அங்கத்தொளிருமந்த ரங்கவுள்ளொளியாய்க, கங்கைக் கரையமர்ந்த சீர்.
சீர்சிறந்த செவ்வேள் சிரவொளிமெய்க் காண்டல், மார்கழியின் மாமதியமாம்.
துங்கநிலயத்துளி ரொளியங்காண்டல், மங்களவாரத்தின் மகிழ் குருவாகவந்தான்
குளிர்ந்தவொளி திரண்டான், திருவாதிரைநாளிற் சீர்.
காரணமாய் நின்றான் கமலவொளி சிறந்தான், பூரணைநாட் கொண்டான் புகழ்.
படியதிர்ந்ததெங்கும் பணையுள்ளொளியாய், விடியர்காலத்தின் வெளிர்.
ஊழியது கடந்தான் உள்ளொளியாய் நின்றான், நாழிகையைம்பத்தாறதாம்.
சீலம் நிறைந்த செவ்வொளியைக் கண்டார், கோலதுவே லக்கினமதாம்.

அவர் உழ்க்கார்ந்திருந்தபோது தேகமுழுவதும் வாள்போன்ற சோதிவீசி பரந்தது. சிரசின் உச்சியில் ஐந்துபிளப்பமைந்த ஒளிஓங்கி வளர்ந்தது. அருகினின்ற ஆனந்தனும் பிருங்கியும் அறஹத்துக்களும் ஆனந்தக்கண்ணீர் ததும்பக் கலங்கினார்கள்.

அதுசமயத்தில் விதற்பநாட்டரயனும் அவன் மந்திரியும் தங்களுக்கு நேரிட்டுள்ள சங்கைகளைத் தெளிந்துக்கொள்ள வேண்டுமென்று அருகிலோடி வந்தார்கள். அவைகளை உணர்ந்த அருகன் அறப்பள்ளியில் தனதுவலக்கையால் சிரந்தாங்கி கால்நீட்டிப் படுத்துவந்தவர்களை அருகில் வரச்செய்து சங்கையை விளக்குங்கோளென்று கூறினார்.

விதர்ப்பநாட்டரசனும் மந்திரியும் விவேகமிகுத்தோன் உடலிற்றோன்றும் ஒளியையும் அதன் குளிந்தப் பிரகாசத்தையும் கண்டு திகைத்தும் பயந்தும் வாய்பொத்தியும் நின்று ஒப்பிலா அப்பனே, எங்களுக்குள்ள சங்கையாதெனில், எங்களைக் காப்பாற்றும் பொருள் யாதேனும் உண்டாயில்லையா என்பதேயா மென்றார்கள். அம்மொழிகளைக்கேட்ட அருகன் இருவரையும் நோக்கி உண்டென்பதை உங்களுள்ளத்திலும் இல்லை என்பதை தோற்றும் பொருள் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிதலிலும் அறிந்துக்கொள்ளலாம். அன்னையானவள் குழந்தைக்கு அன்னத்தை ஊட்டுவாள். அதனை விழுங்கித் தன்னைப் போஷித்துக்கொள்ளவேண்டியது குழவியின் செயலாகும். அதுபோல ததாகதர் தான் கண்டடைந்த சுகவழியைப் போதிப்பார். நீங்களோ அவ்வழியில் சென்று சுகமுற்று உண்டா இல்லையா என்பதை உங்களுக்குள் நீங்களே உணர்ந்துதெளிந்துக்கொள்ளல் வேண்டும். உண்டென்னிலோ விசாரிணையற்ற சோம்பலால் எங்குண்டென்னும் எதிர்வினாத் தோன்றும். இல்லையெனிலோ மதோன்மத்தச் சோம்பலால் யாதுக்கில்லை என்னும் பதில்மொழித் தோன்றும். ஆதலின் உண்டென்பதை அவனவனுள்ளத்திலும் இல்லை என்பதை அவனவன் விசாரிணையிலுமே தெரிந்துக்கொள்ளவேண்டியது இயல்பாமென்று தனதிருக் கண்களையும் மூடி மார்கழிமீ பௌர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரத்தில் பரிநிருவாணம் அடைந்துவிட்டார்.

ஆனந்த நகரமென்னும் பல்லவநாட்டில் பேறியாற்றங்கரை என்றும் கங்கைக்கரை என்றும் வழங்குமிடத்தில் சித்திரபானு வருஷம் மார்கழி மாதம் 28-வது நாள் மங்களவாரம் பௌர்ணமி திதி விடியர்காலம் 56 நாழிகை துலாலக்கினத்தில் பரிநிருவாணமுற்றபோது தேகமெங்கும் குளிர்ந்த ஒளி வீசவும் உச்சியினொளி ஓங்கிவளரவும், பூமியதிரவும், மேகங்கள் பரவி நிற்கவும் தாமரை மலரவும், கண்ட சங்கத்தோர்கள் யாவரும் கலக்கமுற்று தேவாதிதேவனை என்று காண்போம், திருமூர்த்தியை என்று காண்போம், மூவாமுதல்வனை என்று காண்போம், முத்திக்கு முதல்வனை என்று காண்போம், சித்தார்த்தி திருவுருவை என்று காண்போம், திங்கள் முகவதனத்தை என்று காண்போம். தேஜோன்மயவுருவை என்று காண்போம். அழியாத அறவுரையை என்று கேட்போம், அமுதமொழி அறநெறியை யார்பால் கேட்போமென்று கதறியழுது தாயிழந்த குழவிபோல் பதரிநின்றார்கள்.

விம்பாசாரம் - விழாவரைக்காதை

இறைமகற்காத னெண்பானைந்திற் / குறைமிகுகாலக் கூற்றங் கடிந்து,
தக்கக் கடைநாடனுவாதிரையில் / பக்கமங்கலம் பருமதிகோலாய்,
போதி நீழற் பொருந்திய புத்தேள் / சோதிபஞ்கச் சூழொளியாகி,
ஆனவைகரை யார்ப்ப வானவன் / போனக விழாக்கோள்.