பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கங்குல்பரந்தனவா காந்தள் நிறைந்தனவா லென்செய்கோம்யாம்
சங்கங் குமிங்கினவா சாக்கை யொடுங்கினதா லென்செய்கோம்யாம்
எங்குமமர்ந்தகுரு வங்க மறைந்தனகா லென்செய்கோம்யாம்
எல்லா முணர்ந்த மொழியார்பாலுணர்ந்தறிவோ மென்செய்கோம்யாம்
கல்லா லமர்ந்தசுக காட்சி யெங்கு கண்டறிவோ மென்செய்கோம்யாம்
சொல்லா லுணர்த்து சுக சூட்சமொழி கண்டறியோமென்செய்கோயாம்.
சீலசுகமளித்த செல்வநிலை யெங்குணர்வோ மென்செய்கோம்யாம்
காலநிலையைவென்றகாட்சிதனை யென்றுணர்வொமென்செய்கோம்யாம்
வாலவறிவமர்ந்தோன் வாய்மொழியைக்கேட்டிலோமேயென்செய்கோம்யாம்.
மறுளறுத்தப்பெரும்போதி மாதவனைக்கண்டிலமா லென்செய்கோம்யாம்
அருளமர்ந்ததிருமொழியாலறவழக்கங்கேட்டிலோ மாலென்செய்கோம்யாம்
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக்கண்டிலமா லென்செய்கோம்யாம். துக்கநிலைநாலுணர்ந்தத்தூயவனைக்கண்டிலமாலென்செய்கோம்யாம்
பக்குவமெய்ப்பாங்குரைக்கும் பரதன்மொழிக்கேட்டிலமா லென்செய்கோம்
திக்கெட்டுணர்ந்தானின் தேய்வு நிலைக்கண்டறியோ மென்செய்கோம்யாம்.

பேரியாற்றங்கரையில் வந்திருந்தப் பெருங்கூட்டத்தோருள் விவேகமிகுத்த அறஹத்துக்களும் மற்றும் பெரியோர்களும் மாதவன் தனது பெருமுயற்சியால் கண்டுபிடித்த துக்கநிவர்த்தியின் மார்க்கங்களையும் அம்மார்க்கத்தில் நடந்து மாறிமாறி பிறக்குந் துன்பங்களையும் பிணியின் துன்பங்களையும், மூப்பின் துன்பங்களையும், மரணத்தின் துன்பங்களையும் ஜெயித்து ஜெயசீலனாக விளங்கி பரிநிருவாணமுற்ற பக்குவத்தையும் கண்டுணர்ந்து உலகத்தில் இதுவரையுங் காணா பேரின்ப சுகமும் பெரும்பேரும் இதுவே என்று ஆனந்தக் கூத்தாடி அவரது ஏகசடையைக் கத்திரித்துவைத்துக்கொண்டு தாங்களும் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வாய்மெயில் நிலைத்து பிறப்பை ஜெயிக்கவும், பிணியை ஜெயிக்கவும், மூப்பை ஜெயிக்கவும், மரணத்தை ஜெயிக்கவுமாயசுக சாதனங்களில் நிலைத்து சதாவிழிப்பிலும் ஜாக்கிரதையிலும் நிலைத்துக்கொண்டார்கள்.

அத்தகைய விவேகம் இல்லாதவர்களும் அறிவின் விருத்தியற்றவர்களும் ஆசாபாசப் பற்றுக்களையே மேலாக விரும்பினவர்களுமாகியக் கூட்டத்தோர்கள் யாவரும் தங்களைப்போல் பிணிவாதையிலும், மரணாவத்தையிலும் சித்தார்த்தர் வருந்தி சீவனை விடாது சுகதேகமும் சுப்ரதேஜசும் பெற்றிருந்து இறந்துவிட்டாரென்றுக் கேட்டவுடன் எவ்வகையால் இறந்தாரென்னும் விசாரிணையே பெரிதாகக்கொண்டு உசாவிவருங்கால் சேணிபனென்னும் அரசனளித்தப் புசிப்பில் கூர்முகக்கரி சமைத்தளித்து என்றுந் தின்றறியாதவர் அதனை புசித்து இறந்தாரென்று தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசி உறுதிபடக் கூறவாரம்பித்துக்கொண்டார்கள்.

விவேகமிகுத்தோர் அவர்களின் அவிவேகக்கருத்தை தடுத்து பரிபூரண பரிநிருவாணப் பேரின்பத்தை விளக்கியும், அவர்கள் எங்குங் கண்டுங் கேட்டுமறியா பரிநிருவாண சுகநிலையறியாது தங்கள் தங்கள் அஞ்ஞானப் பெருக்கின் பிடிவாதத்திலே நின்றுவிட்டார்கள்.

அரசர்களும், சங்கத்தோர்களும் அறவாழியான் தேகத்தைப் பல்லக்கில் வளர்த்தி அரசர்களும், அறஹத்துக்களும் அதனை ஏந்திக்கொண்டு அரசசின்னங்களாம் பலவகை வாத்தியகோஷங்கள் முயங்க வெண்குடை வெண்கொடி, வெண்சாமரைகள் வீச சுத்தோதயனென்னும் மண்முகவாகு சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்கிரவர்த்தி பிறப்பை ஜெயித்தார், பிணியை ஜெயித்தார், மூப்பை ஜெயித்தார், மரணத்தை ஜெயித்தாரென்னும் ஆனந்தக்கூத்தாடிக்கொண்டே வம்மிஷவரிசையோராம் சாக்கையர்களும், பாதுகாப்பாளராகும் மல்லர்களும் புடைச்சூழ்ந்து நெருங்கக் காசிகங்கைக்கரைப் பல்லவ நாட்டைச்சார்ந்த ஆனந்தநகருக்கெடுத்துச்சென்று அவ்விடமுள்ள ஓர் விசால பூமியில் அரசர்களால் கொண்டுவந்திருந்த சந்தனக்கட்டை, கற்பூரம், அகிற்றைல முதலியவகைளை விட்டுப் பரப்பி பல்லக்குடன் தேகத்தை அவற்றுள் வைத்து மேலும் மேலும் சந்தனக்கட்டைகளால் மூடி நெருப்பிடுவதற்கு ஒருவருக்கொருவர் மனம்வராது