414 / அயோத்திதாசர் சிந்தனைகள்
பரிநிருவாணகால ரூபத்தையும், ஸ்தாபித்து காசிநாதவியாரமென்றும், காசிவிஸ்வேச வியாரமென்றும் வழங்கிவந்தார்கள்.
சங்கை ஆதாரனாம் புத்தபிரானால் தோன்றிய கங்கைக்கரையின் அருகிலேயே அறவாழியான் பள்ளிகொண்ட பரிநிருவாண ஆனந்தத்தால் கங்காநதி ஸ்நானத்தையும், சங்கறர் அந்தியமான பீடத்தையும், புத்தகயா வென்னும் பதியையும், உலகிலுள்ள சகல பௌத்தர்களும் சென்று தெரிசித்து கங்கையில் மூழ்கி காசிநாதா, காசி விசுவேசா, கங்கை ஆதரா, கமலநாயகா, கருணாலயனே எனக் கொண்டாடி வந்தார்கள்.
மணிமேகலை
புத்ததன்ம சங்கமென்னும் / முத்திரமணியை மும்மெயில் வணங்கி
காயங் கரையெனும் பேரியாற் றடக்கரை / மாயமின் மாதவன் றன்னடி பணிந்து
காசிமா நகர் கடல்வயிரு புகாமல் / வாசவன் விழாக்கோல் மறவேனென்று
காசிக்கலம்பகம்
குடமுடைந்ததென வானினங்
கண்மடி மடைதிறந்து பொழிபாலொடு
கொழுமடர் பொதிய வீழ்ந்து கைதைதொழு
சோறுமிட்டணி திருக்கையாற்
கடல் வயிற்றி நிரப்புகின்ற
சுரகங்கை குண்டகழியா நெடுங்
ககன நீள்குடுமி மதில்களேழுடைய
காசிமேவு மகிலேசரே
முத்திக்கு வேட்டவர் மோட்டுடற் பாரமுடைத்தலையோடு
அத்திக்கும் சாம்பற்கு மோம்பினரா லிவையன்றி யப்பாற்
சிந்திப்பது மற்றிலைபோலுந் காசிச்சிவபெருமான்
பத்திக்குக் கேவலமே பலமாக பலித்ததுவே.
பொன்னாருக்கென்ன பூந்துணர் கொன்றையும்
வெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்துங்
காந்தண்மலர்ந்தன்ன பாந்தளி னிறையுந்
திரைசுழித்தெரியும் பொருபுனற் கங்கையில்
வெள்ளிதழ்க்கமலம் வள்ளவாய் விரித்தென
முழுநகை முகிழ்க்குங் கழுமுடை வெண்டலை
தோலடிச்செங்காற் பால்புரை வரிச்சிறைக்
கிஞ்சுக மலர்ந்த செஞ்சூட்டெகினத்
துருவெடுத்த கல்வான் றுருவியுங் காணாத்
தொன்மறைக்கிழவ சென்னிமற்றியானே
கண்டுகொண்ட னனிக்கடவுண்மா முடியெனப்
பெருமகிழ் சிறப்பக் குரவையிட்டார்த்த
வெள்ளெயி ரிலங்க விரைவிற் சிறைத்தென
பெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையை
யாள்வழக் கறுக்கும் வாளமர் தடங்கண்
மின்னிழை மருங்கிற் சின்மொழி மகளீ
ரொழுகொளி மிடற்றி னழகுகவர்ந்துண்டெனக்
கயிறுகொண்டார்க்குங் காட்சித்தென்ன
மரகதங் காய்த்துப் பவளம் பழுக்குங்
கமஞ்சூர் கமுகின் கழுத்திறயாத்து
வீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்வரர்
பருமணிக் கமுகின் பசுங்கழுத் தடைந்து
துரைபடற்குறுதித் திறடெரித் தென்ன
முழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறு
மங்குல்கண்படுக்கும் மதுமலர் பொதும்பர்
கங்கைசூழ் கிடந்த காசிவாணா.
புகுமேமதிக்கொழுந்தும் பொன்மாலைப்போது
நகுமே கிளையு நகைத்தா னமக்கென்னே
யுகுமே லுயிர்காசி யுத்தமனைக் காண
தகுமே யப்போதிதழைத்தாரும் பெறலாமே.
மற்றும் சமணரிற் சித்திப்பெறவேண்டியவர்கள் அச்சாம்பலைவாரிக் கொண்டுபோய் மடத்தில் வைத்துக்கொண்டு அதன்மீது ரெட்டுவஸ்திரம் விரித்து தாங்கள் உழ்க்கார்ந்து ஞானசாதனமுஞ் செய்துவந்தார்கள்.
ஈதன்றி மகதநாட்டைச்சார்ந்த கபிலைநகரில் சாக்கையச் சக்கிரவர்த்தி திருமகன் பிறந்தபோது காராம்பசுவென்னும் கன்று ஈணாத பசுவொன்று