பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 419

விழாவென்றும் இந்திரவிழாக்கோலென்றும், இந்திரதிருவென்றும் அவரைக் கொண்டாடிவந்த உச்சாகத்தால், அவ்வகைக் கொண்டாடிவந்த மக்களை இந்தியர்களென்றும், கொண்டாடிய தேசத்தை இந்தியமென்றும் நாளது வரையிலும் வழங்கி வருகின்றார்கள்.

இத்தகைய இந்திரரென்னும் பெயர்பெற்ற பகவனால் வரைந்துள்ள வரிவடிவ முதலெழுத்ததிகாரத்திற்கு ஐந்திரவியாக்ரணமென்று பெயர். அதனாதாரங்கொண்டே தொல்காப்பியம் தோன்றியுள்ளதென்பதை அதற்குப் பாயிரங்கூறியுள்ள பனம்பாரனாரே போதுஞ்சான்றாம்.

தொல்காப்பிய எழுத்ததிகார சிறப்புப்பாயிரம்

வடவேங்கட தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிருமுதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச்
செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல்கண்டு முறைப்படவெண்ணி
புலந்தொடுத்தோனே போக்கறு பனுவ
னிலந்தரு திருவிற் பாண்டியன வையத்
தறங்கரை நாவினான் மறை முற்றிய
விதங்கோட்டாசாற் கரிதுபத்தெரிந்து
மயங்கரமாபினெழுத்து முறைகாட்டி
மல்குநீர்வரைப்பினிந்திரரரைந்த
தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்ற
பல்புகழ் நிறுத்தப் படிமெயோனே.

வீரசோழியம்

ஆவியனைத்துங் கசதநபமவ் வரியும்வவ்வி,
லேவியவெட்டு ம்யவ்வாறுஞன் நான்கு மெல்லாவுலகு,
மேவியவெண்குடைச் செம்பியன்வீர ராசேந்திரன்றன்,
நாவியல் செந்தமிட் சொல்லின் மொழிமுதனன்னுதலே.

முன்கலை திவாகரம்

வடநூற்கரசன் என்றதமிழ்க் கவிஞன்,
கவியறங்கேற்று முபயக் கவிப்புலவன்,
செறிகுணத்தம்பற் கிழவோன் சேந்த,
னறிவு கரியாகத் தெறிசொற்றிவாகரத்து,
முதலாவது தெய்வப்பெயர் தொகுதி.

சிவஞான யோகீஸ்வரர் வடகலை தென்கலை பாணிநீயம்

திடமுடைய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய்
படிமொழியை பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையா
தொடர்புடைய தென்மொழியை உலகம் எலாந்தொழுதேத்தக்
குடமுநிக்கு வற்புறுத்தார் கொல்லாற்றுபாகர்.

வீரசோழியப் பாயிரம்

ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கலகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயு முளையோவெனிற் கருடன் சென்ற நீள்விசும்பி
லீயும் பறக்குமிதற்கென்கொலோ சொல்லுமேந்திழையே.

வீரசோழியக் கிரியாபதப்படலம்

மதத்திற் பொலிவும் வடசொற்கிடப்புந் தமிழ்மரபு,
முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமு மோங்குவினைப்,
பதத்திற்சிதைவு மறிந்தே முடிக்க பன்னூறாயிரம்,
விதத்திற் பொலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே (அவலோகிதர்- புத்தர்.)

சீவஞானயோகீஸ்வரர் கலைஞானம்

திருமொழிக்குங் கண்ணுதலால் முதற்குலவரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிபடுத்தார் முநிவேந்தரிசைபரப்பும்
இருமொழியுமான்றவரே தழீஇனா ரென்றாலிவ்
இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.

(முதற்குரவர் - ஆதி முநிவர், முநிவேந்தராம் முதற்றுறவியால் வடமொழியும், தென்மொழியுமாக்கியதென்பது கருத்து).

அவலோகிதரால் அக்கை, தங்கையர்போலாக்கிய வடமொழி, தென்மொழி இரண்டினாதரவால், திரிபேத வாக்கியங்களாகு முதநூலை ஆதிநூல்,