பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420 / அயோத்திதாசர் சிந்தனைகள்


எழுதாக்கேள்வி, ஆரணம், ஒத்து, சாகை, சுருதி, இருக்கென்னும் ஏழுபேதமாக வழங்கிவந்தார்கள்.

முன்கலை திவாகரம்

ஆதிநூலென்பது வேதநூற்பெயரே

பின்கலை நிகண்டு

ஆதிநூலெழுதாக்கேள்வி யாரண மொத்து சாகை
யேதமில் சுருதிதன்னோடிருக்கிவை யேழும்வேதம்
வேதநூற் நாமம் விதித்திடு ஞானபாகை
யாதியாங் கருமபாகை யருத்த பாகையுமா மென்ப.

பாபஞ் செய்யா திருங்கோள் கருமபாகை; நன்மெக் கடைபிடியுங்கோள் அர்த்தபாகை இதயத்தை சுத்திசெய்யுங்கோள் ஞானபாகை.

அறத்தால் கன்மபாகை நற்செயல் விளக்கத்தையும், பொருளால் அர்த்தபாகை மெய்ப்பொருள் விளக்கத்தையும், இன்பத்தால் ஞானபாகை பேரின்ப விளக்கத்தையும் விவரித்து ஞானசாதனத்தால் பற்றற்று தானே தானே தத்துவமாம் நித்தியானந்த நிருவாண வீடுபேறு பெற்றுபோது பாபஞ்செய்யா திருங்கோள், நன்மெக் கடைபிடியுங்கோள், இதயத்தை சுத்தி செய்யுங்கோள் என்னும் மூன்று பேதவாக்கியங்களின் பயனாம் வீடு பேற்றையும் ஒரு பேதவாக்கியமாக்கி ஆக நான்கு பேதவாக்கியங்கள் என வழங்கியதுமன்றி அதனதன் செயலுக்குத் தக்கவாறு இருக்கு, யசுர், தைத்திரீயம், அதர்வணமென்னும் நான்குபெயர்களையும் அளித்து அவைகளுக்கு சிறப்புநிலையாம் ஆகமம், ஆரிடம், பிடகம், தந்திரம், பநுவல், சமயம், சூத்திரமென்றும் வழங்கி வந்தார்கள்.

பின்கலை நிகண்டு

மெய்தெரியாரணந்தான் வேதத்தி ஞானபாகை
மையலுட் பொருளினாம மற்றுப நிடதமென்ப
வைதிகம் வேதமற்ற மார்க்கமேபார்க்குங்காலை
பையமிலிருக்கினோடு பிடகமேயாதிவேதம்
ஏமமா மிரண்டாம் வேத மிசை தைத்திரியத்தோடு
தோமிலா யசுவமென்றுஞ் சொல்லுவர் நல்லநூலோ
சாமமா மூன்றாம் வேதந் தகமெபேரின்பஞ் சாரும்
வாமமாம் நான்காம்வேதம் அதர்வணம் வீடு பேறாம்
தந்துரை புனைந்துரைத்தல் சார்ந்த பாயிரத்தினோடு
முந்திய பதிகமேநூன் முகமுக உரையுமப்பே
ரந்தமா மாகமத்தோராரிடம் பிடகமற்றுந்
தந்திரம் பநுவலோடு சமயஞ்சூத்திரமுநூற்பேர்.

நான்குபேதவாக்கியங்கள் : பாபஞ் செய்யாதிருத்தல், நன்மெய்க் கடைபிடித்தல், இதயத்தை சுத்திசெய்தல், அதன்பயன் வீடுபேறு.

நான்குபேதவாக்கியங்கள் : கன்மபாகை, அர்த்தபாகை, ஞானபாகை, வீடுபேறாம் நிருவாணபாகை.

நான்குபேதத்தின் பெயர்கள் : இருக்கு, யசுர், தைத்திரியம், அதர்வணம்.

ஆதிபேதவாக்கியம் கன்மபாகை. இதன் காரணம் பாபஞ்செய்யாதிருத்தல், காரியம் மெய்ப்பொருளறிதல். இதன் பெயர் பொருட்பால், பிடகம், இருக்கென்றுங் கூறப்படும்.

இரண்டாம் பேதவாக்கியம் அர்த்தபாகை. இதன் காரணம் நன்மெய்க் கடைபிடித்தல், காரியம் மெய்யறவுணர்ச்சி. இதன் பெயர் அறத்துப்பால் தைத்திரய மென்னப்படும்.

மூன்றாம் பேதவாக்கியம் ஞானபாகை. இதன்காரணம் இதய சுத்திசெய்தல், காரியம் மெய்யின்பமாம் பேரின்ப உணர்ச்சி. இதன் பெயர் காமப்பால் சாமமென்னப்படும்.

மூன்று பேதவாக்கியங்களுக்கு மேல் நான்காவது பேதவாக்கிய மில்லாவிடினும் மூன்று பேதவாக்கியங்களின் சாதனங்கொண்டு விவேக முத்தினவனாதலால் அவற்றை நிருவாணபாகையாகவும், சுயம்பிரகாச