பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422 / அயோத்திதாசர் சிந்தனைகள்


2. தன்னிடத்து உண்டாகும் காமத்தைத் தங்கவிடாமல் அகற்றி அன்பை பெருக்குதல் இதயசுத்தம்.

3. தன்னிடத்துண்டாம் மயக்கங்களை அகற்றி அறிவை வளரச்செய்தல் இதய சுத்தம்.

4. தன்னிடத்து உண்டாம் வஞ்சினம் பொறாமைகளை அகற்றி சகலர் சுகவாழ்க்கையை விரும்புதல் இதயசுத்தம்.

5. தன்னிடத்து உண்டாம், பொய்பொருளுசாவுதல் இதயசுத்தம்.

6. தன்னிடத்து உண்டாகும் சிற்றின்பச் செயல்களை அகற்றி பேரின்பத்தை நாடல் இதயசுத்தம்.

7. தன்னிடத்து உண்டாகும் ஆடம்பச் செயல்களை அகற்றி அடக்கத்தில் நிற்றல் இதயசுத்தம்.

8. தன்னை வஞ்சித்துத் துன்பப்படுத்தியவனை அன்புடன் ஆதரித்தல் இதயசுத்தம்.

4. நிருவாணபாகையுட்பொருளஷ்டகம் வீடுபேறாம் நிருவாணம் என்பது என்னை

1. தன்னிடத்து உண்டாம் பற்றுக்களை அகற்றி சதானந்தத்தில் இருப்பது நிருவாணம்.

2. தன்னை மறைக்கும் நித்திறையை ஜெயித்து சதா விழிப்பிலிருப்பது நிருவாணம்.

3. தன்னை மாறிமாறி பிறக்கச்செய்யும் மரணத்தை ஜெயித்த நிலை நிருவாணம்.

4. தன்னை சதாதுக்கத்தில் ஆழ்த்தும் காம வெகுளி மயக்கங்களை வுறுத்த நிலை நிருவாணம்.

5. தானே தோன்றுகிறதும் கெடுகிறதுமாகிய மனதை தோன்றாமலுங் கெடாமலும் நிறுத்தல் நிருவாணம்.

6. தனக்கு உண்டாகும் ஜெநநபயம், மரணபயமற்று யாதுக்குங் கலங்காமல் நிற்றல் நிருவாணம்.

7. தன்னுள் தானாய் விளங்கும் உண்மெய்யாம் பேரின்பமே நிருவாணம்.

8. தானேதானே சுயம்பிரகாச சதாநித்திய சித்தாம் ஆனந்தநிலை நிருவாணம்.

இத்தகைய பேதவாக்கியம் ஒன்றுக்கும் எட்டு உட்பொருள் நுட்பங்களை விளக்கி நான்கு பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிட தங்களாக்கி நாளதுவரையில் திராவிட பௌத்தாள் சுருதி யுக்தி அனுபவமாகவும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் மார்க்கமாகவும் வழங்கி வருகின்றார்கள். ஒருமொழியின்றி ஆதியில் மூன்று மொழிகளாகத் தோன்றி அம்மூன்று மொழிகளும் மூன்று பேதமாயிருந்தது கண்டு திரிபேதவாக்கியங்கள் என வழங்கி வீடுபேற்றையும், ஒருபேதவாக்கியமாகக் கொண்டபோது நான்கு பேதவாக்கியங்களென வழங்கலாயினர்.

இதுவே புத்தரது ஆதிவேத விளக்கமென்னப்படும்

(ஆதிவேதம், முதலாண்டு முதல் இலக்கத்திலிருந்து தொடர் கட்டுரையாக நாலாமாண்டு பதினொன்றாம் இலக்கம் வரை வெளிவந்தது)

84. புத்ததன்மம் மகடபாஷை சத்தியதருமம் சகடபாஷை மெய்யறம் திராவிடபாஷை

இம்முப்பாஷை மொழியும் ஒரு பொருளையே தரும். அதனால் புத்தம் என்பதும். சத்தியம் என்பதும், மெய்யென்பதும், ஒரு பொருள் கொண்டு, சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தரது மலைவுபடா வாக்கை அநுபவத்திற் கண்டோர் அவரை புத்தரென்றும், சத்தியரென்றும், மெய்யரென்றும் அழைக்கலானார்கள்.

இவற்றுள் தன்மம் என்பதும், தருமம் என்பதும், அறம் என்பதும் ஒரு பொருட் கொண்டு ஆராயுமிடத்து மலைவுபடா மெய்யறம் என்பது யாதெனில்: கோபத்தாற் குடிகெடுமென்று கூறியபோது அதன் அனுபவங் கண்டோன்