பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426 / அயோத்திதாசர் சிந்தனைகள்



87. சைவம்

வினா: “சைவம்” எனு மொழி தென்மொழியா, வடமொழியா, அதன் பொருளென்னை. தாயுமான் என்னும் பெரியோன் எம்மதத்தோர் என்பதேயாம்.

மா. பாலசுந்திரம், கோடூர்.

விடை: தாயுமான் என்னும் பெரியோன் குருவையே தெய்வமென சிந்திக்கும் சமணமுனிவர்களில் ஒருவரும், புத்ததர்மப்பிரியருமாதலின் கல்லாலடியிற் கமலாசனத்துள் வீற்று நால்வருக்கு உபதேசித்தவற்றை அவர்பாடலின் பல இடங்களிற் கூறியுள்ளதுமன்றி புத்தரது பரிநிருவாண சோதியையே இடைவிடாது சிந்தித்தும் சமணமுநிவருள் சித்திபெற்ற சித்தர்களையே ஆனந்தமாகத் தொழுதும் வந்திருக்கின்றார்.

இத்தகைய சமணமுநிவரின் தியானப்பாக்களுடன் சில நூதன மதத்தோர் தங்கள் மதக்கருத்துக்கு இயைந்தப் பாடல்களை இயற்றி பொன்னுடன் தராகலந்தனபோல் சேர்த்துக்கொண்டு தங்கள் மதநூலென மாறுகொளக் கூறிவருகின்றார்கள். அக்கூற்று கற்றவர்முன் எவ்வகையாலும் பொருந்தாவாம்.

தாயுமானவர் முதற்செய்யுளுள் “அங்கிங்கெனாதபடி யெங்கும் பிரகாசமாய்” என்னும் மெய்ப் பொருளை எப்பொருளுக்கு ஒப்பிட்டு ரூபிப்பார்கள்.

“செங்கமலபீடமேல் கல்லாலடிக்குவளர் சித்தாந்தமுத்திமுதலே” என்பவற்றால் எம்முத்தனை ஒத்திப்பார்கள்.

“பந்தமெல்லாந்தீர பரஞ்சோதி நீகுருவாய் வந்தவடிவை மறவேன் பராபரமே” என்பதில் எக்குருவை சுட்டுவார்கள் யாவுந் தனக்குள் வளர் உண்மெய்ப்பொருளையே அவர் வந்தித்தும் சற்குருவாம் புத்தரையே சிந்தித்துமுள்ளதை அவரது சுயச்செய்யுள் சகலவற்றினும் பகலக் காணலாம்.

ஈதன்றி உலகமக்களை தொல்லைவிட்டகன்று தெய்வசபையாம் புத்தசங்கத்தைச் சேருங்கோள் என்று கூறியுள்ளச் செய்யுளையுங் காணலாம்.

“ஸைவஸமயமே ஸமயம் ஸமயாவதீதப் பழம்பொருள், கைவந்திடவும் அன்றுள்ளொளிக்காட்டுங் கருத்தைவிட்டு பொய்வந்துழலும் ஸமய நெறி புகுதவெண்டா மடநெஞ்சே, தெய்வச்சபையை சேர்வதற்கு சேரவாருஞ் ஜெகத்திரே”.

ஸைவமென்பது பாலிமொழி, அதன்பொருள் தன்னையறிதல், ஸமயமென்பது பாலிமொழி, அதன்பொருள் காலக்குறிப்பு.

அகப்பேய் சித்தர்

ஸைவ மாருக்கடி - யகப்பே, தன்னையறிந்தவர்க்கே; ஸைவமானவிட -
மகப்பே, தானாக நின்றதடி.

ஸைவஸமயமேஸமயம் என்பது தன்னைத்தானறியுங்காலமே சரியான காலம் என்னப்படும்.அதாவது ஒருமனிதன் ஏதுமறியா பாலபருவத்தில் செய்யுஞ்செயல்கள் ஓர் காலம், குமரப்பருவத்திற் காமியங்கொண்டலைவது ஓர் காலம், அரசபருவத்தில் புத்திரபாக்கியப்பேற்றை பெறுவது ஓர்காலம். இத்தியாதி காலச்செயலால் யாதுபயனுங் கிட்டாவாம். இவற்றுள் தன்னைத்தான் அறிந்தடங்குங்காலமே ஆனந்த நித்திய சுககாலமாதலின் வடமொழியில் ஸைவஸமயமே ஸமயமென்றும், தென்மொழியில் தன்னைத்தானறியும் நேரமே நேரமென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

அவ்வகைத் தன்னைத்தான் அறிந்தொடுங்குவதால் காலங்களுக்கு அதீதப்பட்டப் பூரணப் பொருளுள்ளொளியாய்த் தோன்றுங்கருத்தையும் செயலையும் விட்டு காலத்திற்குக்காலம் நூதனமாகத் தோன்றி கெடுக்கும் பொய்ப்புராணக் கட்டுக்கதைகளை நம்பி மோசம் போகவேண்டாம் மனமே எனத் தனக்குத்தானே கூறிக் கொண்டதுமன்றி கருணைமிகுதியால் உலக மக்களையும் தனது சத்தியசங்கத்தில் வந்து சேரும்படியும் அழைத்திருக்கின்றார். அதற்குப் பகரமாகத் தன்னைத்தான் அறிந்தடங்குதற்கு மனமே காரணமாதலின் அதனது இரண்டாம் பாடலில் “காடுங்கரையு மனக்குரங்கு கால்விட்டோட வதன்பிரகே யோடுந்தொழிலாற் பயனுளவோ” என்று இதயசுத்தமாம் புத்தரது