பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 437

குருவை அடுத்து அவர்களுக்குரிய தீட்சையைப்பெற்றுக் கொள்ளுவானாயின் அவன் அன்று முதல் மகம்மதியனென்று அழைக்கப்படு வான். ஆனால் சைவன், வைணவன், வேதாந்தியென்று சொல்லிக்கொள்ளும் மதத்தினர்களுக்கு அதிற் சேர்ந்த ஒர்காலமுங் கிடையாது சேர்த்துக்கொள்ளுங் குருவுங்கிடையாது. பெரியசாதி என்று சொல்லிக்கொள்ளுவோர்களுக்கே அதன் உறுதி நிலையற்றிருக்க அவர்களால் தீண்டப்படாதென்று இழிவுகூறி புறம்பே அகற்றிவைத்துள்ள சைவன், வைணவனென்னும் பேதைகளாயப் பிரசங்கிகளுக்கும் அவர்களது நாவைப்பார்த்து நங்கவிளிக்குங் குழாங்களுக்கும் நிலையுண்டோ , இல்லை. எவ்விதமென்னில் மகம்மதியர் அல்லாசாமி பண்டிகையில் மனம்போனவாறு வேஷமிட்டு ஆலி ஜூலா கூச்சலிடும் ஐயமாரையடுத்தாப்போன்றவர்களென்பதாம், பெரியபுராணமாயினும் இவர்களுக்குச் சொந்தமாமோ என்பதில் பணங்கொடுத்துப் பெரியபுராணத்தை விலைக்கு வாங்கியுள்ளது கொண்டு அவர்களுக்கு சொந்தமேயாயினும் அதனுள்ளடங்கிய மக்களும் அச்சங்கதிகளும் அவர்களைத் தீண்டப்படாததாதலின் சொந்தமாகாவாம். நாயையேனும் என்வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளுவேன் உம்மெயென் வாயற்படியிலுங் காலை வைக்கவிடமாட்டேனென்று உறும்பும் சத்துருவின் மதத்தைத் தம்மதமென்று அவர்கள் பாராட்டி சீராட்டித் திரிவது அன்னியனுக்குப் பெற்ற பிள்ளையைத் தன்பிள்ளையென்று தாராட்டிப் பலருக்கும் பகட்டுவதுபோலாம்.

பௌத்தர்களுடைய காலத்தில் பழய நடந்த சங்கதிகளைக் கண்டெழுதியுள்ள நூற்களுக்குப் பூராணங்களெனப்பெயரளித்திருந்தார்கள். அதிற் பெரும்பாலும் பதிநெட்டு புராணங்கள் புத்தபிரானையே முதற் கடவுளாகசிந்தித்து பழய சரித்திரங்களை வரைந்திருப்பதாக வடதேசவாசியாகிய துருகப்பிரசாதென்பவர் தனது புராணங்களைக் கண்டித்தெழுதியுள்ளவற்றுள் இப்பெரிய புராணத்தை யெழுதாமலே விட்டிருக்கின்றார். இதுவுமன்றி விஸ்வபிரம்ம வம்மிஷத்தோரென்னுங் கம்மாளர்களுக்கும் தங்களுக்குத் தாங்களே பிராம்மணர்களென்று சொல்லிக் கொள்ளுவோர்களுக்கும் வாதுகளுண்டான போது விவகாரங்கள் யாவும் ஈஸ்ட்டின்டியன் கம்பனியார்காலத்திய சித்தூர்ஜில்லா அதாலத் கோர்ட்டில் நிறைவேறியிருக்கின்றது. அக்காலத்தில் இந்த பிராமணர்கள் வீட்டில் சாமிகளே வந்து அவதரித்துக் கதைகளடங்கிய பெரிய புராணம் இருந்திருக்குமாயின் அதைக் கொண்டுவந்து அக்கோர்ட்டில் ரூபித்துத் தங்கள்சாதியே சிறந்ததென்று ஜெயம்பெற்றிருப்பார்கள். அஃதில்லாதபடியால் அபஜெயமடைந்தார்கள்.

இவைகளன்றி வீரமாமுனியென்பவர் சமணர்கள் நூற்களாகும் முன்கலைதிவாகரம், பின்கலைநிகண்டு முதலியவைகளை ஆதாரமாகக்கொண்டு ஓர் சதுரகராதி எழுதியிருக்கின்றார். அதனுள் பௌத்தர்கள் காலத்திய பதிநெண் புராணங்களைமட்டிலுங் கண்டெழுதியுள்ளாரன்றி பெரியபுராணப் பெயர், புராணவகுப்பிற்கிடையாது அதே அகராதியை 1860-ம் வருடத்தில் விசாகப்பெருமாளையரும் பொன்னம்பல முதலியாருங்கூடி பரிசோதித்துக் கூட்டவேண்டியவற்றைக் கூட்டியும் குறைக்க வேண்டியவற்றைக் குறைத்தும் அச்சிட்டிருக்கின்றார்கள். அவர்களும் இப்பெரிய புராணத்தைக் குறிப்பிட்டெழுதியுள்ளதுங் கிடையாது.

பெரிய புராணம் அக்காலிருந்தால் சேர்த்தேயிருப்பார்கள். இல்லாது 60 வருடத்திற்குள் தோன்றிய கற்பனா கதையேயாதலின் அவ்விருவரும் அவற்றைக் குறிப்பிடாது புராணத்தொகையை வெளியிட்டுள்ளார்கள்.

இத்தகைய சரித்திர நூலாதாரங்களைக்கொண்டே பெரிய புராணம் நூதனமாயக் கட்டுக்கதையென்றும் சிவமதக்கடை பரப்பி அதனால் வயிறு பிழைப்போருக்கு சரக்குபுத்தகமென்று கூறலாமேயன்றி நடந்த சரித்திரபுத்தகம் ஆகாவாம். அதனை ஓர் மெய்யாய் நடந்த சரித்திரமென்று பிரசங்கித்து நடிக்குந் தீண்டாத்திருமேனிகளுக்கு இலக்கணங்கள் யாவரால் ஏற்பட்டுள்ள தென்னும் சரித்திரமுந் தெரியாது. இலக்கண பாகுபாடுகளும் இலக்கியத்