பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தொகுப்புகளுந் தெரியாதாதலின் வீணே ஆடு கசாயிக்காரனை நம்புவதுபோல் அன்னியர் சாதியையும் அன்னியர் மதத்தையும் மெய்யென நம்பிக்கொண்டு சுஜாதி அபிமானமற்று சுஜாதி விரோதமுற்று அல்லலடைந்து வருகின்றார்கள். இன்னுஞ் சில காலத்துள் தங்களுடைய நல்விசாரிணையாலும் உண்டாம் உணர்ச்சியாலும் சத்திய தன்மந்தோன்றி சுஜாதி சீர்திருத்தத்திற்கீடுபடுவார்கள். அதுகாலம் வரையில் அவர்களது அறியாச்செயல்களுக்கும் பிரசங்கங்களுக்கும் மனத்தாங்கல் அடையாது தங்களது தன்மக்கடைபிடியில் நிற்க வேண்டுகிறோம்.

- 6:41; மார்ச் 19, 1913 –

99. தெய்வத்தை வேண்டிக்கொள்ளுதல்

வினா: பலதேவதைகளையுண்டுசெய்துகொண்டிருக்கும் பற்பல மதஸ்தர் பலவகையானத் தீயச்செயல்களைச் செய்து வந்தபோதினும் ஆபத்துகாலத்தில் தங்கள் தேவனை தேவியை வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செலுத்தினால் அவ்வாபத்து நீங்கிப்போய்விடுகிறதென்றும், வியாதிகள் நீங்காவிடில் தங்கள் தேவனை தேவியை வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்கள் நீங்கிவிடுகிறதென்றுங் கூறித்திரிகின்றார்கள். அவர்கள் கூறுங் கூற்று அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்துமோ.

வே. பார்த்தசாரதி, சென்னை

விடை: இவையே காகதாளி நியாயமென்று கூறப்படும். அதாவது காக்கையானது பனைமரத்தில் உழ்க்காரவும் பனம்பழம் வீழவும் ஆயதுபோல நீங்கும் ஆபத்து நேர்ந்தகாலத்து தேவனை தேவியை வேண்டிக்கொள்ள அவரவர்களால் ஆபத்து நீங்கிவிட்டதென்றும், தீரும்வியாதி தீர்ந்தகாலத்து தேவனை தேவியை வேண்டிக்கொள்ள வியாதி நீங்கிவிட்டதென்றும் நம்பி மோசத்துக்குள்ளாகி கண்ணைப்போற் பொன்னினாற் கண்ணும், காலைப்போல் வெள்ளியினாற் காலுங்கொண்டுபோய் செலுத்துவதுடன் வேணரொக்கங்களுங் கொண்டுபோய் தேவதைகளுக்கு லஞ்சஞ்கொடுத்து வருகின்றார்கள். ஆபத்தைநீக்கவும் வியாதியைப் போக்கவுங்கூடிய தேவதைகளுக்குப் பிரிதிதானமும் வேண்டுமோ. அதேயாபத்தும் அதே வியாதியும் மற்றும் பலருக்குண்டாகி அதே தேவதைகளை வேண்ட அவை நீங்காமலிருப்பது பிரத்தியட்சமாகும். உம்மெய்ப்போல் ஆபத்திற்கும் வியாதிக்கும் வேண்டிக் கொண்ட ஏனையமக்களுக்கு ஏன் நீங்கவில்லையென்னில் அத்தேவதையின் பேரில் உமக்கு உறுதியில்லையென்பார்கள். அதனால் அத்தேவதைகளால் ஒருகாரியமும் ஆகிறதில்லை இவனாலேயே ஆகிறதாக விளங்குகிறது. ஆதலின் அவர்களது மறுமொழியைக்கொண்டே அவனவனன்றி யோரணுவு மசையாதென்னு மொழியை நிலைபெறச் செய்யல்வேண்டும். கண்ணைப்போல் கண்தராவினாலும், காலைப்போல்கால் இரும்பினாலும் ரொக்கத்திற்கு பதில் தாம்பூலத்தையுங் கொடுப்பார்களாயின் அக்கோவில்குருக்கள் கையேந்திப் பெற்றுக்கொள்ளுவார்களா ஒருக்காலும் பெறமாட்டார்கள். அதாவது பேதைமக்களை வஞ்சித்தும் பொய் சொல்லியும் பொருள் பறிப்பதற்கு மதக்கடைகளைப் பரப்பி அதனாற் சீவிக்கும் சோம்பேறிகள் அதிகரித்துவிட்ட படியால் தேவதைகளுக்குலஞ்சங் கொடுத்து ஆபத்தை நீக்கிக்கொள்ளும் நம்பிக்கைகளும் வியாதியை நீக்கிக்கொள்ளும் நம்பிக்கைகளும் விவேகமற்ற மக்களுக்குப்பரவி வேண்டிக்கொள்ளும் வித்தைகளேயதிகரித்துவிட்டது. இவைகள் யாவும் தங்களால் தேவதைகளை சிருஷ்டித்துக்கொண்டு பொய்ச் சொல்லிப் பொருள் பரிப்பதற்கு ஆதாரமான மதக்கடைகளென்னப்படும். வியாபாரிகள் தங்கள் கடை சரக்கே நல்ல சரக்கு ஏனைய கடை சரக்கு நல்ல சரக்கல்லவென்றுகூறி பொருள் சம்பாதிப்பதுபோல் எங்கள் மததேவதைகளே மேலானதேவதைகளென்றும் வியாதிகளையும் ஆபத்துகளையும் நீக்குமென்றும் மோட்சத்தை நேரிற் கொடுக்குமென்றும் பொய்யைச்சொல்லுவதோடு தங்கள் மதக்கடை வியாபாரக் குறைவால் ஓர் மதத்தோருடன் மற்றொரு மதத்தோர்