பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 441

பௌத்தர்கள், சையாம் பௌத்தர்கள், தீபேத் பௌத்தர்கள், பர்மா பௌத்தர்கள், பூர்வ திராவிட பௌத்தர்கள் புத்ததன்மத்தை எவ்வகையாகப் போதித்து எவ்வழியாக நல்மார்க்கத்தில் நிலைபெறச் செய்தார்களோ அதுபோல் இவ்விருவர்களும் போதித்து நன்மார்க்கத்தில் நிலைபெறச் செய்வார்கள். அங்ஙனமிராது பௌத்தர்கள் யாவருக்கும் நூதனமாய பௌத்த கூட்டங்களென்று ஏற்படுத்திக் கொண்டு அவ்விருவர்களின் போதனையில் புத்தரது சிலாரூபங்களை சங்கங்களில் வைக்கப்படாதென்றும் பௌத்தகுருக்களே சங்கத்திலிருக்கப்படாதென்றுங் கூறுவதுடன் மறுபிறவி என்பதுங் கிடையாது, கன்மமுங்கிடையாது, மனிதன் எப்போது மரித்துவிடுகின்றானோ அதுதான் அவனுக்கு முடிவு. மற்றோர் சுகம் யாதுங்கிடையாதென புத்ததன்மத்திற்கு எதிரடையாய அபுத்ததன்மமாம் நூதன பௌத்தம் போதிக்கின்றார்கள். அதனால் புத்ததன்மமே மாறுபடுவதுடன் அதனைக் கேட்போர்கள் மனிதன் மரிப்பதே முடிவாதலின் மனம் போனவாறு கொலைச்செய்தால் பாபமென்னை, குடித்து சுகித்தால் பாபமென்னை, அன்னியன் தாரத்தை யிச்சித்தால் பாபமென்னை, அன்னியன் பொருளை அபகரித்தால் பாபமென்னை, பொய்யைச் சொன்னால் பாபமென்னை என்னும் உச்சாகமுண்டாகி தானுங் கெடுவதுடன் தன்னை அடுத்தோரையுங் கெடுத்து தேசத்தையுஞ் சீரழித்து இராஜவிசுவாசத்தையுங் கெடுப்பதற்குத் தடையிராது.

வீதிகளில் மலமூத்திராதிகளை விசிரம்பிப்பில் அதிகாரி பிடித்து தெண்டிப்பான் என்னும் பயமிருக்கில் வீதிகள் சீரும் சிறப்புமடைந்திருக்கும். அவ்வகை அதிகாரிகளுமில்லை தெண்டனையுமில்லையென்னில் வீதிகளில் மலமுத்திராதிகள் நிறைந்து சீரும் சிறப்புங் கெடுவதுபோல தீவினைக்குத் தக்க தெண்டனையுமில்லை நல்வினைக்குத்தக்க சுகமுமில்லாது மனிதன் மரணமடைவதே முடிவேயன்றி வேறொரு கருமமுந் தொடராது என்று கூறுவதாயின் நல்வினைச் செய்தாலென்ன தீவினைச் செய்தாலென்னவென்னும் உச்சாகம் உண்டாகுமாயின் மனுக்கள் சீர்கெடுவதற்கே ஏதுவுண்டாகிப்போம்.

அதனினும் சாதிபேதமுள்ள இந்துக்கள் புத்ததன்மம் போதிப்போர் என வெளிதோன்றி சாதிபேதமுள்ள இந்துக்கள் மத்தியினின்று இத்தகைய போதனைகளை போதியாது சாதிபேதமில்லாமல் சேரிகளில் வாழ்வோர்களையும் பேட்டைகளில் வாழ்வோர்களையுஞ் சேர்த்துக்கொண்டு இத்தகைய நூதன பௌத்தம் போதிப்பதை ஆலோசிக்கில் இவர்களை சீர்கெடுப்போர்களாக விளங்குகிறதேயன்றி சீர்படுத்துவார்கள் என்பதை கனவினும் நம்புதற்கு ஏதுவில்லை. சாதிபேதமில்லாக் குடிகள் சாதிபேதம் உள்ளவர்களால் பலவகையாலும் நசுங்குண்டு அறிவின்விருத்தி கெட்டிருப்பதினால் அவர்கள் மத்தியில் கேட்டை விளைவிக்கும் நூதன பௌத்தத்தைப் போதிப்பதாயின் உள்ள அறிவுங்கெட்டுப் பாழடைவார்கள் என்பதற்குத் தடையில்லை. ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் இத்தகைய சீர்கேட்டைப் போதித்துவரும் பிரசங்கியார்களையும் அக்கூட்டங்களை நடாத்த முயலுங் கூட்டத்தோர்களையும் சற்று நோக்கி மநுக்களுக்குக் கேட்டை உண்டுசெய்யும் வழிகளை அடைப்பார்களென்று நம்புகிறோம்.

- 6:51; மே 28, 1913 –

101. ஜெயினரும் பௌத்தரும்

வினா : ஜெயினர்கட்கும் புத்தர்கட்கும் யதார்த்தத்திலுள்ள பேதாபேதங்கள் இன்னின்னவையென நன்குவிளங்குவது அரிதாகலான் விரித்து விளம்புதல் வேண்டுமென விநயபூர்வகம் வேண்டுகிறேன்.

ஆதிசக்கிரவர்த்தி உபாத்தியாயர், திருமலை

விடை : கமலசூத்திரத்துள் சகஸ்திரநாம பகவனென்றும் மணிமேகலையில் ஆயிரநாமத்தாழியன் திருவடியென்றும் புத்தருக்குரிய வாயிரநாமங்களில் ஜைநரென்பதும், சைநரென்பதும், ஜிநரென்பதும், சினரென்பதும், புத்தருக்குரிய பெயரெயாகும். அப்பெயர் வாய்த்தவிதி பாலி நிகண்டு பஞ்சமாரஜிநோதிதீ