பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 455




1. திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும்
பிறந்தாரென்னும் பொய்க்கதா விவரம்

இந்துதேச முழுவதும் புத்த தன்மமாம் மெய்யறம் பரவியிருந்த காலத்தில் இந்திரவியார சங்கங்களில் தலைமெயாய் அறஹத்துக்கள் என்றும், பிராமணர்கள் என்றும், அந்தணர்கள் என்றும் வழங்கிவந்த ஞானகுருக்கள் நீங்கலாக, சாக்கையர் என்றும், வள்ளுவர் என்றும், நிமித்தகர் என்றும் பெயர்பெற்று அரசர், வணிகர், வேளாளர் என்ற முத்தொழிலாளருக்கும் கன்மகுருக்களாக விளங்கி தன்மகன்மங்களை நடாத்தி வந்தார்கள்.

முன்கலைதிவாகரம்

வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் / மன்னர்க்குள் படுங்கருமத்தலைவாக்கொக்கும்.

பின்கலைநிகண்டு

வருநிமித்தகன் பேர் சாக்கை / வள்ளுவனென்றுமாகும்.

இவர்கள் பூர்வம் வடதேசத்தில் கணிதவல்லபத்தால் சாக்கையர் என்னும் பெயர் பெற்று கலிவாகு, குலவாகு, வீரவாகு, இட்சுவாகு என்னும் சக்கிரவர்த்திகளாக தலைத்தார்வேந்தர்களாக விளங்கிவந்த அநுபவத்தை வடநாட்டில் தற்காலம் வழங்குஞ் சாக்கையர் தோப்பென்னும் நந்தவனத்தாலும் அங்கு கற்பலகைகளில் அடித்திருக்கும் சிலாசாசனங்களாலுந் தெரிந்துகொள்ளலாம்.

மணிமேகலை

சாக்கையராளுந் தலைத்தார்வேந்தன் / ஆக்கையுற் றுதித்தனனாங் கவன்றானென.

இதே குடும்பத்தார் தென்னாட்டில் வந்து குடியேறியபோதும் சாக்கையர், வள்ளுவர், நிமித்தகரென்னும் பெயரால் தன்மகன்மங்களை நிறைவேற்றி வந்தபோதினும், இவ்விடம் உள்ளோர் வள்ளுவர் என்றே பெரும்பாலும் வழங்கி வந்தபடியால் திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஓர் தேசத்தை நாளதுவரையிலும் வள்ளுவர் நாடென்று வழங்கி வருகின்றார்கள். இவர்களே பௌத்தமார்க்க அரசர்களுக்கு கன்மகுருக்களாக காரியாதிகளை நடாத்திவந்த விவரம்.

சீவகசிந்தாமணி

பூத்தகொங்குபோற் பொற்சுமந்துளா ராச்சியார் நலக் காசறூணனான்
கோத்தநித்திலக் கோதைமார்பினான் வாய்த்தவன்னிரை வள்ளுவன் சொனான்.

சூளாமணி

நிமித்தகனுரைத்தலு நிறைந்தசோதியா / னுமைத்தகையிலாததோ ருவகையாழ்ந்து கண்
ணிமித்திலனெத்துணைப் பொழுது மீர்மலர்ச் / சுமைத்தகைநெடுமுடி சுடரத்துக்கினான்.
தலைமகன்றானடக்காகச் சாக்கைய / நிலைமெகொண் மனைவியா நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களா / குலமிகுங் கற்பகங் குளிரத்தோன்றுமே.

இத்தகைய வள்ளுவ அரசவம்மிஷ வரிசையில் வடமதுரைக்கச்ச னென்னும் அரசனுக்கும் உபகேசி என்னும் இராக்கினிக்கும் செந்நாப்புலவராகும் ஓர் மகவு உதித்து நாயனார் என்னும் பெயர் பெற்று வளர்ந்து பலதேச வியாரங்களுக்குஞ் சென்று தனது குலகுருவாம் சாக்கைய முநிவரால் போதித்துள்ள திரிபீட வாக்கியங்களாம் மூன்று பேதவாக்கியங்களையும் அதன் உபநிட்சயார்த்தங்களையும் தெளிந்து,

தின்னனூருக்கு மேற்கே இந்திரவியாரத்துள்ள புத்தசங்கத்தில் சேர்ந்து சமணநிலை கடந்து அறஹத்துவாம் அந்தணநிலைபெற்று தனது குலகுருவாம் சாக்கையமுநிவர் அருளிய முதல் நூலாந் திரிபீடங்கள் என்னும் திரிபேத வாக்கியங்களும் அதனுட் பொருட்களும் மகடபாஷையாம் பாலியிலும், சகடபாஷையாம் சமஸ்கிருதத்திலும் இருந்து சங்கங்களில் தங்கியுள்ள சமணர்களுக்கும் பிராமணர்களுக்கும் உபயோகப்படுவதன்றி ஏனைய