பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மனுக்களுக்கு உபயோகம் இல்லாமல் இருந்தபடியால் அதனை திராவிட பாஷையாம் தமிழ்பாஷையில் திரிபீடகம், திரிபேத வாக்கியம் என்னும் முதநூலுக்கு முப்பால் திரிக்குறள் என்னும் வழி நூலியற்றினார்.

திரிக்குறள் சாற்றுக்கவி - நல்கூர்வேள்வியார்

உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா / னுத்தாமாமதுரைக் கச்சென்ப - விப்பக்க மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப் / போதார் புனற்கூடற்கச்சு.

நன்னூல்

வினையினீங்கி விளங்கியவறிவின் / முனைவன் கண்டது முதனூலாகும்.
முன்னோன் நூலின் முடிபொருங்கொத்து / பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி யழியாமரபினது வழிநூலாகும்.

பின்கலை நிகண்டு

பூமலியசோகிநீழற் / பொலிந்தவெம் மடிகள் முன்னா
ளேமமா முதநூற்சொல்ல / வள்ளுவ ரியன்றபாவாற்
றாமொரு வழிநூற்சொல்ல / சார்புநூற் பிறருஞ்சொல்ல
தோமிலா மூன்றுநூலுங் / துவமென வுதித்தவன்றே.

திருக்கழுகுன்றம் சீர்காழிதம்பிரான் கையேட்டுப்பிரிதியிலும் பாகு பலினாயனார் கையேட்டுப்பிரிதியிலுமுள்ள காசிநாதராம் புத்தபிரான் கூறியுள்ள முதநூலைத் தழுவி வள்ளுவர் வம்மிஷ வரிசையைச்சார்ந்த நாயனாரியற்றிய வழிநூலுக்கு புத்தசங்கத்தோருள் பொன்முடியா ரருளிய சாற்றுக்கவி.

திரிக்குறள் சாற்றுக்கவி - பொன்முடியார்

கானின் றதொங்கலாய் காசிபனா தந்ததுமுன்
கூனின்றளநற் குறளென்ப நூன்முறையான்
வானின்றுமண்ணின் றளந்ததே வள்ளுவனார்
தானின்றளந்த குறள்.

திரிக்குறள் சாற்றுக்கவி - நரிவெருத்தலையார்

இன்பம் பொருளறம் வீடென்னு மின்னான்கு
முன்பறியச்சொன்ன முதுமொழிநூன் - மன்பதைகட்
குள்ளவரிதென் றவைவள்ளுவருகலம்
கொள்ள மொழிந்தார் குறள்.

2:1, சூன் 17, 1908

திரிக்குறள் சாற்றுக்கவி - வெள்ளிவீதியார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
வதற்குரியாரந்தணரே யாராயினேனை
யிதற்குரிய ரல்லாதாரில்.

ஆதியிற் புத்தபிரானாற் கூறிய திரிபீடவாக்கியம் என்னும் முப்பேத வாக்கியங்களும் வரிவடிவட்சரமில்லாது மகடபாஷா ஒலி வடிவாய் செய்யாமொழியாய் ஒருவர் போதிக்கவும் மற்றவர்கள் கேட்கவுமான சுருதியாயிருந்து,

மக்களின் முதல் சீர்திருத்த திரிபீடவாக்கியங்கள் செய்யாமொழியாய் சுருதியிலிருப்பதால் மனதில் தங்கி மறையும் என்று எண்ணி அவலோகிதராகும் புத்தபிரான் சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் வரிவடிவிலியற்றி திரிபேதவாக்கியங்களையும் அதின் உபநிட்ச யார்த்தங்களையும் வரைந்துள்ள போதினும் ஒவ்வோர் புத்த சங்கங்களிலுமிருந்த சமணர்களும், பிராமணர்களும் புத்ததன்மங்களை பெரும்பாலும் சகடபாஷையில் உபயோகித்துவந்தார்கள்.

அதினால் சகல குடிகளுக்கும் மறை, மறை என்று விளங்காதிருந்ததைக் கண்ட திருவள்ளுவ நாயனார் தனது குலகுருவாம் சித்தார்த்தரின் அரசவம்மிஷ வரிசையில் வடமதுரையை அரசாண்ட கச்சனென்னும் அரசனுக்கு மகவாய் பிறந்து சகல கலைகளுங் கற்று தெளிவுற்று (உப்பக்கநோக்காம்) உள்விழி பார்வையின் ஞானக்கண்ணிலைகால் உதித்தவராதலின் தனது அரச போகங்கள் யாவையுங் கருதாது ஞானவிசாரிணையால் பலதேச புத்த சங்கங்களிலுஞ்-