பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 457

சென்று தேற விசாரிணைபுரிந்து தின்னனூருக்கு அருகே உள்ள இராகுல வியாரத்தில் தங்கி தனது அரசாங்க பரம்பரையில் நிகழ்ந்துவந்த புத்ததன்ம அரசநீதிகளையும், அரண்களையும், அமைச்சர் விதிகளையுந் தெள்ளற விளக்கியதுமன்றி ஒழுக்கம் சீலம் ஞானம் இவைகளையும் விளக்கி பாயிரமாகும் பத்துப்பாடலிலும் புத்தபிரானாகும் ஆதியுங்கடவுளை வாழ்த்தி அவர் ஓதியுள்ள தன்மபீடம், சூத்திரபீடம், வினையபீடம் ஆகும் முப்பீடங்களாம் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்ப பேதவாக்கிய உட்பொருளாம் கன்மபாகை, அர்த்தபாகை, ஞானபாகையின் கருத்துகளைத் தெள்ளற விளக்கி ஆயிரத்தி முந்நூற்றி முப்பது அருங் குறட்பாவால் அறத்துப்பால், பொருள்பால், காமப்பாலெனவகுத்தெழுதி தனது தந்தையாகிய கச்சனென்னும் அரசனுக்கு வாசித்துக்காட்டி அவனை மனமகிழச் செய்தார்.

திரிக்குறள் சாற்றுக்கவி - கீரந்தையார்
தப்பா முதற்பாவாற் றாமாண்டபாடலினான்
முப்பாலிநாற்பான் மொழிந்தவ - ரைப்பாலுந்
வைவைத்தகூர்வேல் வழுதி மனமகிழ
தெய்வத் திருவள்ளுவர்.

அதே அறவோர் பள்ளியில் அறஹத்து நிலையடைந்த நாயன் மற்ற புத்தசங்கத்தோர்களுக்கும் தெள்ளற விளக்கி அவரவர்கள் தியான போற்றுக் கவிகளைப்பெற்று சிலநாட்சென்று சித்திரை சதுர்த்தசி பின்னாள் அமரவாசியில் நிருவாணதிசை அடைந்தார்.

அக்கால் புத்தசங்கத்தோரும் குடிகளுந் தேகத்தை தகனஞ்செய்து தாதுகோபத்தை அதே அறப்பள்ளி மத்தியில் அங்கலயஞ் செய்த சிலகாலங்களுக்குப் பின் வியார மாறுதலால் அடியில் குறித்துள்ள தியான பஞ்சுரத்தினப்பாவை நற்பலகையில் எழுதி அவ்விடம் நாட்டினர்களாம்.

சிலாசாஸனப் பெயர்ப்பு
நல்லுரையூரர் நாயனாரை சிந்தித்த தியானபஞ்சுரத்தினப்பா

மலர்கலியுலகத்துன்னிய மேலோன் வள்ளலெணகுணன றவாழி
குலகுமரபோன் கொற்றவனென்னுங் குடமதுராபுரிகச்சன்
தவமதி லுதித்த தண்டமிழ்மறையோய் சருவமுமுணர்ந்த பாவலனே
தலமெலா முதற்சீராகுல வியார சங்கமெய் நாயனேயருளே.

சங்கமெய்க்குருவாய் சாதனத்துரைந்து தரணியோர் குறைமிகுவாற்றி
பொங்கிரு வினையின் பகுப்பினை யுணர்த்தி புத்தமுதீய்ந்த மெய்ப்பொருளே
தங்குமின்னமுதே தாதைமுப்பால்போற் சமணமுற்றோர்க் கருளுட்டுந்
திங்கணன் முடியோன் வழிவழிகாட்டுந் செந்ந நற்புலவ நாயகனே.

செந்நாப்புலவர் சீர்பெயர்பெற்றுத் தெண்ணிறை திரிக்குற ளருளி
நந்நாவலர்க்கு நாவுற மீய்ந்து நானிலத்தோர் நலமுற்றார்
புந்நாவடியேன் போற்றவுமறியேன் புநிதமெய்ஞ்ஞான மாவமுதே
திந்நநூர் மேலோய் திருவளு ரானீர் சின்மய நாயனே யருளே.

சின்மயானந்த நாயனே நின்னை சேவைசெய் தேற்றுதற் கருளாய்
முன்னுமிச்சங்க முதலவனாகி மேடமே சதுர்த்தசி பின்னாள்
துன்னிய முத்தித் தூயமெய்ப்பொருளாஞ் சுடரொளி காட்டிய வருளே
மின்னுபூம்பிண்டி வேந்தனன் வழியோய் வள்ளலுண் நாயனே யருளே.

வள்ளலந் நிறைந்த வள்ளுவர் வழியோய் மாதவ ரேற்று மெய்ஞ்ஞான
உள்ளமேகொண்டா யுலகெலா முணர்ந்தாய் உமதுமுப்பா லதையுணர்ந்தோர்
கள்ளமே யகற்றி காட்சியை பெறுவர் கமலநாயகன் கழல்கண்டு
வள்ளுவநாயன் காட்டிய வழிநூல் மணந்திரு வள்ளுவரூரே.

என்னும் ஐந்து பாடலும் விபூதி விளக்கம் பத்தும், சகசவிளக்கம் நூறும் அடங்கியுள்ள ஓர் ஓலைச்சுவடி கொடுக்கப்பெற்றோம்.

எவ்வகையில் என்னில் இராயப்பேட்டையைச் சார்ந்த புதுப்பேட்டையில் வசித்திருந்த சித்தூர்ஜில்லா தாசில்தார் ம-அ-அ-ஸ்ரீ ஏ.ஜெயராம் நயினாரவர்களை இரத்தினகரண்டகம், வளையாபதி, குண்டலகேசி, அசோதரை காவியமுதலிய புத்ததன்ம நூற்கள் கிடைக்கும் ஆயின் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அக்கால் அவர் வீடூர் முதலிய கிராமங்களுக்குச்