பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 469

இட்டு - வட்டித்துள்ள அன்னத்தை முன் புசிக்கக்கொடுத்து, உண் - நீயும் உண்ணுமென்தாம்.

பூர்வம் இத்தேசமெங்கும் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் பாசபந்தத்தில் ஐயமுற்று பற்றறுக்க முயலும் சமண முநிவர்களாகும் தென்புலத்தோர் ஒருமடங்களைவிட்டு மறுமடங்களுக்குப் போவதியல்பாம். அவற்றை உணர்ந்துள்ள இல்லறத்தோர் தாங்கள் புசிப்பதற்கு முன்பு வெளிவந்து அறஹத்தோ, அறஹத்தோ என்று ஐம்புலனொடுக்க வையமுற்றோரை அழைப்பார்கள். அவர்கள் வந்தவுடன் வட்டித்துள்ள அன்னத்தை முன்பு புசிக்கக்கொடுத்து பின்பு தாங்களும் உண்பது ஐயமிட்டுண்ணென்னும் போதனாவொழுக்கத்தை பின்பற்றியச் செயலேயாம்.

அறநெறிச்சாரம்

பிச்சையு மையமுமிட்டுப் பிறன்றார / நிச்சலு நோக்காது பொய்யொரீஇ - நிச்சலுங்
கொல்லாமெய்காத்துக் கொடுத்துண்டுவாழ்வதே. / இல்வாழ்க்கை யென்னு மியல்பு.

சிலப்பதிகாரம்

அறவோர்களித்தலும் அந்தணரோம்பலும்
துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர்சிறப்பின்
விருந்தெதிர் கோடலு மிழந்தவெண்ணையும்

ஆசாரக்கோவை

முறுவலினிதுரைகானீர்மனைபாய
கிடைக்கையோ டிவ்வைந்த மென்பதலைச்சென்றார்
கூணெடுஞ் செய்யுஞ்சிறப்பு.

நீதிவெண்பா

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க லென்னுமிவ
ரின்புறத்தா லுண்ட லினிதாமே - அன்பிறவே
தக்கவரை யின்றித் தனித்துண்ண றானிகமீன்
கெக்கருந்த லென்றே குறி.

தண்டலையார் சதகம்

திருவிருக்குந்தண்டலையார் வளநாட்டி .......
(நாலுவரிகள் தெளிவில்லை)

இத்தகையாய் பாசபந்தத்திற்கு, ஐயமுற்று பற்றறுக்க முயலும் பெரியோர்களுக்கு இட்டுண்பதே பேருபகாரமாதலின் ஞானத்தாய் முதியோர் கருத்தை குறுக்கல் விகாரப்படுத்தி ஐயமிட்டுண் என்று கூறியுள்ளாள்.

10. ஒப்புரவொழுகு

ஒப்புரவு - உள்ளத்திற் சாந்தத்தை நிறப்பி முகமலர்ச்சியுடன், ஒழுகு - இல்வாழ்க்கையில் நடவு மென்பதாம்.

ஒப்புரவினின்று வார்த்தையாடலும், ஒப்புரவினின்றுணவளித்தலும், ஒப்புரவினின்று உள்ளந்திருத்தலுமே உலகசிரேஷ்டமாகக் கொள்ளுதலான் ஒழுக்கத்திற்கு உதவி ஒப்புரவென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

விவேகசிந்தாமணி

ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மெய்ப்பேசி
உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர்தமாகும்
முப்பழ மொடு பாலன்னம் முகங்கடுத்திடுவராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே.

அறநெறிச்சாரம்

மக்களுடம்பு பெறற்கரிது பெற்றபின் / மக்களறிவு மறிவரிது - மக்கள்
அறிவதறிந்தா ரறத்தின் வழுவார் / நெறித்தலை நின்றொழுகுவார்.

ஒப்பி - மனப்பூர்வ சம்மதமாய், உரவோர் - அறிவுபமிகுத்தாராகும் சமன முநிவர்பால் ஒழுகு - நெறிபிறழாது வாழக்கடவா என்பதுமோர் பாடபேதம்.

திரிபீடகம், திரிக்குறளாம், முப்பாலைத்தழுவியதே திரிவாசகமாதலின் நீதிநெறி ஒழுக்கங்களையே புதைப்பொருளாக அமர்ந்துள்ளதாகும்.