பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அறிந்தும் அதனுடன் பழகுதலும் எவ்வகையானும் ஓர்கால் தனக்கும் பிறருக்கும் துன்பத்தை விளைவிக்கும் என்றறிந்த ஞானத்தாய் விஷ ஜெந்துக்களைக் கொண்டு பிறர் பயப்படுவிதமாய் விளையாட்டுக் காட்டாதே. அது கொடுவினையாய் முடியுமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

விவேகசிந்தாமணி

அரவினை யாட்டு வாரு மருங்களி ரூட்டுவாரும்
இரவினிற் றனிப் போவாரு மேரி நீர் நீந்து வாறும்
விரை செரி குழலியான வேசையை விரும்புவாரும்
அரயனைப் பகைத் திட்டாரு மாருயி ரிழப்பர்மாதோ.

26. இலவம் பஞ்சிற்றுயில்

இலவம் - மிகு மிருதுவாம், பஞ்சியில் - பஞ்சு மெத்தையில், துயில் - நித்திறைசெய்

பருத்திப் பஞ்சு, பனைப் பஞ்சு, இலவம் பஞ்சு என்பவற்றுள் இலவம் பஞ்சே மிக்க மிருதுவானதும், சுகுணமுள்ளதுமாதலின் இலவம்பஞ்சு மெத்தையில் துயிலென்று கூறியுள்ளாள்.

அதன் சுகுணமோவெனில், பற்பல உஷ்ண ரோகங்கட்போம், மேககாங்கையால் குடும்பப் பரம்பரையில் தோன்றும் மதுமேகம்போம், குட்டரோகத்தால் உண்டாம் நமைகள்போம், குழவிகளுக்குக் காணும், மலபந்தம்போம், குமரகண்ட வலிபோம், தாதுவிருத்தி உண்டாகும் ஆதலின் பொதுவாய சுகங்கருதி இலவம்பஞ்சில் துயிலென வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

பதார்த்தசிந்தாமணி

பலபலவெப்பம்போகும் பற்றியமேககாங்கை
குலவரைதோன்று மேகங் குட்டத்தின் தினவுபாலர்
மலபந்தங் குமரம் நீங்கும் மன்மதநிலையுமுண்டாம்
இலவமெத்தைப்பதிந்த வில்லறமக்கட்கென்றும்

27. வஞ்சகம் பேசேல்

வஞ்சகம் - உள்ளத்தில் கெடு எண்ணத்தை வைத்துக் கொண்டு வெளிக்கு நல்லவன்போல், பேசேல் - பேசாதே என்பதாம்.

அத்தகைய வஞ்சநெஞ்சமுள்ளவன் உலகத்தில் எவ்வகையாய் உலாவுவானென்னில் நஞ்சுள்ள பாம்பானது தனக்குள்ள நஞ்சுடமெ அறிந்து மற்றவர்களுக்கு பயந்து வொளிப்பதுபோல் வஞ்சநெஞ்சனும் மற்றவர்களுக்கு பயந்துலாவுவான்.

அறநெறிச்சாரம்

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின் / பின்னைத்தா னெய்தானலனில்லை - தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சிற் குற்றேவல்செய்தல் / பிடிபடுக்கப்பட்ட களிறு.

திரிக்குறள்

வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க / ளைந்து மகத்தே நகும்.

28. அழகலாதனசெயேல்

அழகு - அந்நியர் கண்ணுக்கு ரம்மியமும், மனோரம்மியமும், அலாதன - இல்லாதவற்றை, செயேல் - என்றுஞ் செய்யாதே யென்பதாம்.

அதாவது ஓர் காரியத்தை எடுத்துச் செய்யுங்கால் அக்காரியமானது தனக்கு சுகத்தையும், நற்கீர்த்தியையும் தருவதுடன் ஏனையோர் கண்களின் பார்வைக்கு அழகாகவும், இதயத்திற்கு சுகமாகவும் விளங்கவேண்டும் என்பது கருத்து.

அறப்பளீசுரசதகம்

வாழ்மனைத்தனக்கழகு குலமங்கை குலமங்கை வாழ்வினுக் கழகு சிறுவர்
வளர்சிறுவருக்கழகு கல்விகல்விக்கழகு மானிலந் துதிசெய் குணமாம்
சூழ்குணமதற்கழகு பேரறிவு பேரறிவு தோன்றிடி லதற்கழகுதான்
தூயதவமேன்மெ யுபகாரவிரதம் பொறுமெய் சொல்லறிய பெரியோர்களைத்
தாழ்தல் பணிவிடைபுரிதல் சீலநேயங்கருணை சாற்றுமிவை யாமென்பர்காண்
சவுரிஜன கோரமரர் முநிவர்முற்சாரணர் சரண்மென் விருகைகூப்ப
ஆழ்கட லுதித்துவரு விடமுண்ட கண்டனே யண்ணலெம தருமெய்மதவேள்
அநுதினமு மனதினினை தருசதுரகிரிவளரறப்பளீசுரதேவனே.