பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 483

பொன்னணிநேமி வலங்கொள்சக்கரக்கைமன்னுயிர் முதல்வன் மகனெமக்களித்த
எண்ணருஞ்சக்கர வாளமெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை.

திரிபேதம் என்றும், திரிபீடம் என்றும் வழங்கிய சுருதிமொழிகளை கலைநூற்களில் வகுத்து பாநெறி என்றும், அரசர்கள் செவ்வியக் கோல்வழியில் வகுத்து கோனெறி என்றும், பொதுவாய நீதிநெறியில் வகுத்து நீநெறி என்றும், போதித்துள்ளவற்றில் உலகெங்குஞ் சூழ்ந்துள்ள சருவசீவர்கண்மீதுங் கருணைவைத்துக் காக்கும் நெறியே விசேஷ நெறியாதலின் நமது ஞானத்தாய் சக்கரநெறிநில்லென வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

சீவகசிந்தாமணி

நூனெறி வகையி நோக்கி நுண்ணுதினுழைந்து தீமெய்
பானெறி பலவு நீக்கிபரிதியங் கடவுளன்ன
கோனெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின்மாதோ
நீனெறி வகையினின்ற நல்லுயிர்க் கமிர்தமென்றான்.

காக்கைபாடியம்

பக்குவஞானம் பகர்ந்தருள்போதன் / மிக்கவர்க்கீய்ந்த மேதினி தன்ம
சக்கரநெறியிற் சேர்ந்தவர்க்கென்றுங் / கைக்கிளை காமக் காரணுகாவே.

44. சான்றேரினத்திரு

சான்றோர் - சகலராலும் நன்குமதிக்கும், இனத்து - கூட்டத்தாரிடத்து, இரு - சேர்ந்து வாழக்கடவா யென்பதாம்

சான்றோர் என்போர் சகலமக்களாலும் மேலோர், மேதாவியர் என்று சாற்றுதற்கு உரிய மேன்மக்களாகும் சாந்த மிகுத்தோர்களேயாவர். சகல நற்கிரித்தியங்களுக்கும் சான்றாகும் மேன்மக்களாம் நல்லினத்தோரை அடுத்து வாழ்வதினால் தனக்குள்ள பொய்யும் களவும் கொலையும், காமமும், வெறியுமற்று மெய்யும், ஈகையும், காருண்யமும், சாந்தமும், நிதானமும் பெருகி நிருவாணமார்க்கமும் சுருக்கமாக விளங்கும்.

ஈதன்றி தன்னையீன்ற தாயானவள் எக்காலும் அன்பு கொண்டொழுகு பவளாயினும் உமது புத்திரன் மேன்மக்களாம் விவேகிகளை அடுத்து கலைநூற்களைக் கற்று சாந்தரூபியாய் சகலராலும் நல்லோன் என்று சாற்றுதற்குரியவனாயிருக்கின்றான் என்று கேழ்விப்பட்டவுடன், ஈன்றாள் அகமகிழ்வையும் அன்பையும் சொல்லத்தகுமோ, ஒருவராலுஞ் சொல்லத் தரமன்றாம் ஆதலின் நல்லினத்தைச் சார்ந்தொழுகுஞ் சாட்சியே நன்றென்று கூறியுள்ளாள்.

திரிக்குறள்

ஈன்ற பெழுதிற் பெரிதுவக்குந் தன்மகனை / சான்றோனெனக் கேட்டத் தாய்.

குமரேசசதகம் - நல்லினஞ்சேர் பயன்

சந்தனவிருட்சத்தை யண்டிநிற்கின்ற பல தருவுமவ்வாசனைதரும் தங்கமகமேருவை யடுத்திடுங் காக்கையுஞ் சாயல்பொன்னிறமே பெறும்
பந்தமிகு பாலுட னுடைந்த தண்ணீரெலாம் பால்போல் நிறங்கொடுக்கும்
படிகமணி கட்குளே நிற்கின்ற வடிவுமப் படியே குணங்கொடுக்கும்
அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடி லடுத்ததும் பசியநிறமாம்
ஆனபெரியோர்களொடு சகவாசம துசெய்யிலவர்கள்குணம் வருமென்பர்காண்
மந்திரநெடு கிரியைமுன் மத்தாய்கடைந்தவரின் மருகமெய்ஞ்ஞான குரவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயநீடு மலைமேவு குமரேசனே.

45. சித்திரம் பேசேல்

சித்திரம் - பொய்யாகியவார்த்தைகளை மெய்போல் அலங்கரித்து, பேசேல் - நீ என்றும் பேசாதேயென்பதாம்.

அதாவது தன் கண்ணினாற் காணாததைக் கண்டதுபோல் அலங்கரித்துப் பேசுதலும், தன் செவியினாற் கேளாததைக் கேட்டதுபோல் அலங்கரித்துப் பேசுதலும், தன் நாவினால் உருசிக்காததை உருசித்ததுபோல் அலங்கரித்துப் பேசுதலும் தன் நாசியினால் முகராததை முகர்ந்தது போல் அலங்கரித்துப் பேசுதலும். தன் உடல் பரிசிக்காதனவற்றை பரிசித்தது போல் அங்கரித்துப்