பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வேண்டு மென்னுங் கருத்தால் பற்றற்றானுக்கு அடிமையாக வேண்டும் என்பது கருத்து.

சீவகசிந்தாமணி

மலரேந்து சேவடிய மாலென்ப மாலா / லலரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுவா
னலரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுமே / லிலரே மல ரெனினு மேத்தாவா றென்னே.

சூளாமணி

கருமாலை வெவ்வினைகள் காரளரநூறிக்
கடையிலா வொண் ஞானக் கதிர்விரித்தாயென்று
மருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்று
மடியே முன்னடி பரவு மாறறிவதல்லாற்
றிருமா லேதேனாரு மறவிந்த மேந்துந்
திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
பெருமானே நின்பெருமெய் நன்குணரமாட்டா
பிணங்குவார் தம்மெய் வினை பிணக் கொழிக்கலாமே.

இத்தகையாய் புத்தபிரானைத் திருமால் என்று சிந்தித்திருப்பது மன்றி பின்கலை நூலாகும் நிகண்டில் காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள்தான் மாலே யாகுமென்று கூறியுள்ள விதியின்படி புத்தபிரானை கண நாயகரென்றும், விநாயக ரென்றும் சகல நூலாக்கியோன்களுந் தங்கடங்கள் நூற்களின் காப்பில் சிந்தித்திருக்கின்றார்கள். இதினந்தரார்த்தம் உணராமலே சிந்தித்தும் வருகின்றார்கள்.

தேவரென்போர் யாவருக்கும் வழிகாட்டியும், ஆதிதேவனுமாக சிறந்திருந்தபடியால் நாயனார் திரிக்குறளுக்குச் சாற்றுக்கவி கொடுத்துள்ள புத்த சங்கத்தோராகும் கவிசேகர பெருந் தேவனார் “தேவிற் றிருமாலெனச்" சிறந்த தென்னுந் திருவாக்கினாலும் திருமாலென்னும் பெயர் புத்தருக் குரிய சகஸ்திர நாமங்களில் ஒன்றென்றறிந்துள்ள ஞானத்தாய் தனது ஞானகுருவாம் திருமாலுக் கடிமைசெய்யென்று திருந்தக் கூறியுள்ளாள்.

57. தீவினையகற்று

தீய - கொடிய, வினை - செயலை, அகற்று - இதயத்திற் பதியவிடாது நீக்கு மென்பதாம்.

பொய்யைச் சொல்லி வஞ்சிப்பதும், அன்னியர் பொருளை அபகரிப்பதும், பிறர் மனையாளை இச்சிப்பதும், சீவப்பிராணிகளை வதைப்பதும், மதி கெடுக்கும் பானங்களைக் குடிப்பதும் ஆகிய தீவினைகளாம் பஞ்சமா பாதகங்களை அகற்றவேண்டும் என்பது கருத்து.

திரிக்குறள்

வினைக்கண் விளைகெட லோம்பல் வினைக்குறை / தீர்ந்தாரிற் றீந்தன் றுலகு.

சீவகசிந்தாமணி

அளைவதுகாம மடுநறவு நெய்யொழுகு மூனும்பின்னும்
விளைவது தீவினையே கண்டீ ரிவை மூன் முன்விடு மினென்றாற் றளையுவிழ் கோதையார் தாமஞ்சேர் வெம்முலைபோல்
வீங்கிக் கண்சேந்
துளையவுறுதி யுரைப் பாரையோபாவமுணராரே காண்.

இத்தகையத் தீவினைகள் ஒழிந்தவிடத்து ஞானச்சுடர் விளங்குவதை அநுபவங்கொண்டு அறவாழியான் போதித்துள்ளபடியால் அவரது போதனையைப் பின்பற்றிய புத்தசங்கத்தோரும் தங்கள் தியானங்களில் விளக்கியுள்ளார்கள்.

சூளாமணி

விண்டாங்கு வெவ்வினை வெருவுதிரநூறி
விரிகின்றமெய்ஞ்ஞானச் சுடர்விளக்கு மாட்டிக்
கண்டார்க ணின்னில மெய்க்கண்டொழு கயானின்
கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப்பட்டுத்
தண்டாஅமரைமலரின் மேனடைந்தாயென்றுந்
தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தாயென்றும் வண்டாரசோகினிழல் வாயமர்ந்தாயென்றும்
வாழ்த்தினால் வாராயோ வானவர்தன் கோவே.