பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 497

அவர்களது வித்தியா விருத்தியின் செயலும், புத்தி விருத்தியின் செயலும், ஈகை விருத்தியின் செயலும், சன்மார்க்கவிருத்தியின் செயலுந் தங்களுக்கு விளங்கும் மற்ற பின் சந்ததியோர்களால் தாங்களும் போற்றத்தக்க வாழ்க்கை பெறுவார்கள். ஆதலின் ஒழுக்க மிகுத்தோரால் புகழத்தக்கப் பெரியோர்களை நீயும் போற்றிவாழென்று கூறியுள்ளாள்.

81. பூமி திருத்தியுண்

பூமி - உனது நிலத்தை, திருத்தி - கல்லுகாடுகளைப் போக்கிப் பயிர்செய்து, உண் - நீ புசிக்கக்கடவா யென்பதாம். அதாவது, சகலதொழிலிலும் பூமியைத்திருத்தியுண்ணும் வேளாளத் தொழிலே விசேஷித்ததாகும். எவ்வகையிலென்பீரேல், மகாஞானிகள், அரசர்கள் முதல் சீவராசிகளீராக அன்னமூட்டி ஆதரிக்குந் தொழிலாதலின் பூமியின் பலனை போதித்துள்ளாள்.

ஏறெழுபது

வெங்கோபக் கலிக்கடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடி திருந்த பார்வேந்தர் முடிதிருந்தும் பொங்கோதைக் களியானை போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங்கோலேறடிக்குஞ் சிறுகோலே.

82. பெரியாரைத் துணைக்கொள்

பெரியாரை - வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும்

சன்மார்க்கத்திலும் மிகுத்த மேன்மக்களை, துணைக்கொள் - உதவிபற்றிநில்லுமென்பதாம்.

மக்களுள் மூர்க்கர் கேண்மெயால் கோபலாபமும், காமிய மிகுதியால் பிணியின் லாபமும், பெற்றுத் துன்புறுவது அநுபவக்காட்சி யாதலின் அவிவேகிகளையணுகாது விவேகிகளை அணுகவேண்டுமென்று கூறியுள்ளாள்.

நீதிவெண்பா

அரிமந்திரம் புகுந்தாலானை மருப்பும் / பெருங்கொளிசேர்முத்தும்பெறலாம் - நரினுழையில்
வாலுஞ்சிறிய மயிரெலும்புங்கத்தபத்தின் / தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்.

83. பேதமெ யகற்று

பேத - பலவகைக் குணங்களும் பலவகைச் செயலுமமைந்த, மெய் - நிலயற்ற தேகியென்று பிறர் சொல்லுந் செயலை, அகற்று நீக்கிக் கொள்ளுமென்பதாம்.

பேதமாகிய நிலையற்ற குணங்களும், நிலையற்ற செயலும் அமைந்தவனென்று மற்றவர் காண்பாராயின் எத்தொழிலிலும் இணங்கவிடாமல் அகற்றிவிடுவார்கள். அவற்றால் பலவகை இடுக்கங்களுண்டாகி துக்கம் பெருகிபோம். ஆதலின் உமக்குள்ள பேதகுணத்தை அகற்றுமென்பது கருத்தாம்.

திரிக்குறள்

நாணாமெய் நாடாமெய் நாரின்மெய் யாதொன்றும் / பேணாமெய் பேதை தொழில்.

84. பையலோடிணங்கேல்

பையல் - பரியாசமாம் சிறுசேஷ்டை , ஓடு - உள்ளவர்களுடன், இணங்கேல் - சேராதே என்பதாம்.

அதாவது, மக்களுருவமைந்தும், குரங்குசேட்டையுள்ளவர்பாலிணங்கில் விவேகவிருத்திக்குத் தக்க வார்த்தைகளுஞ் செயலுமின்றி களியாட்டும் கலகமும் பெருகி வீணே மனத்தாங்கலுண்டாகும். அம்மனத்தாங்கலால் வித்தியாபுத்தி விருத்திக் குறைந்து வீணே அல்லலடைவார்களென் றறிந்த ஞானத்தாய் பரியாசக்காரரை அணுகலாகாதென்னும் கருத்துடன் பையலோடிணங்கே லென்று கூறியுள்ளாள்.

85. பொருடனை போற்றி வாழ்

பொருள் - மெய்ப்பொருள், தனை - தன்னை, போற்றி - சிந்தித்து, வாழ் - வாழக்கடவா என்பதாம்.

தன்னைத்தான் உணரலென்னுந் தனக்குள்ள நற்செயல்களையும் துற்செயல்களையும் உணர்ந்து தனக்கொரு கேடும் வராது துற்செயல்களை