பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 499

90. மீதூண் விரும்பேல் மீ - அதிக, ஊண் - புசிப்பை, விரும்பேல் - இச்சியாதே யென்பதாம்.

அதாவது மிதமின்றி மீதூண் இச்சிப்பவர்க்கு சோம்பலும், மந்தமும் உண்டாகி சருவதொழில் விருத்திகளும் கெடுவதன்றி சுற்றத்தாரும் பெருவயிற்றோன் என்றிகழப் பேரெடுப்பன். ஆதலின் மிதாகாரம் புசித்து வித்தியா விருத்தியையும், அறிவின் விருத்தியையும் பெருக்கி சுகவாழ்வைப் பெறவேண்டுமென்னும் தன்மச்சிந்தையால் அதிக புசிப்பை விரும்பாதேயுங்களென்று கூறியுள்ளாள்.

நீதிவெண்பா

ஒருபோது யோகியே யொண்டளிர்க்கைமாதே / இருபோது போகியே யென்ப - திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல்விட்டுப் / போகியே யென்று புகல்.

91. முனைமுகத்துநில்லேல்

முனை - கூரிய அம்பை ஏந்தி முனைந்தோன், முகத்து - எதிரில், நில்லேல் - நிற்காதே என்பதாம்.

அதாவது எய்யவேண்டியவன் தவறி எதிர் தோன்றியவன் படவேண்டி நேரிடுமாதலின் சினந்து முனைந்தோர் எதிர் நிற்கலாகாதென்பது கருத்து.

92. மூர்க்கரோ டிணங்கேல்

மூர்க்கர் - கோபிகள், ஓடு - உடன், இணங்கேல் - நெருங்கே லென்பதாம்.

முற்கோப மிகுத்த மூர்க்கரை நேசிப்பதினால் இவனு மோர் மூர்க்கனென்று மற்றவர் மதிப்பதுடன் நல்லோர் நெருங்கவு மாட்டார்கள். நெருங்கினும் நேசிக்கமாட்டார்களென்பது கண்டு, நல்லவனென்று நடமாடுங்கால் மூர்க்கரது கேண்மெய் தோன்றின், நல்லவனென்னும் பெயரற்று சுகமிழப்பானென்னுங் கருணையால் ஞானத்தாய் மூர்க்கரோடிணங்கேலென்று கூறியுள்ளாள்.

நீதிவெண்பா

நல்லொழுக்கமில்லா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கு
நல்லொழுக்கமில்லாச்சொனண்ணுமே - சொல்லி விடின் பாம்பெனவுன்னாரோ பழுதையோயானாலுந் தரம்பமரும் புற்றெடுத்தக்கால்.

93. மெல்லியாடோள்சேர்

மெல்லியாள் -மிருதுவாக்குடையவள், தோள் - உடன், சேர் - கூடிவாழக்கடவா யென்பதாம்.

மெல்லிய வாக்கும், மெல்லிய செயலும், மெல்லிய நடையுமுடையாளை இல்லாளாக்கி வாழக்கடவாய் என்பதாம்.

அறப்பளீசுரசதகம்

கணவனுக் கினியளாய் மிர்து பாஷியாய் மிக்க கமலநிக ரூபவதியாய்
காய்சிநமிலாளுமாய் நோய்பழியிலாததோர் கால்வழியில் வந்தவளுமாய்
மணமிக்கநாணமட மச்சம் பயிர்ப்பென்ன வருமினிய மார்க்கவதியாய்
மாமிமாமர்க்கிதஞ் செய்பவளுமாய் வாசல்
வருவிருந் தோம்புபவளாய்
இணையின் மகிழ்நன்சொல்வழி நிற்பவளுமாயந்தி யென்பெய ரிலாதவளுமாய்
இரதியெனவே லீலை புரிபவளுமாய் பிற ரிழிவழி செலாதவளுமாய்
அணியிழை யொருத்தி யுண்டாயினவள் கற்புடைய ளாகுமெம தருமெய்மதவே
அநுதினமு மனதிநினை தருசதுர கிரிவள ரறப்பளீசுரதேவனே.

94. மேன்மக்கள் சொற்கேள்

மேல் - சிறந்த, மக்கள் - மநுக்களின், சொல் - வார்த்தையை, கேள் - கேழ்க்கக் கடவா யென்பதாம்.

வித்தையிலும், புத்தியிலும் மிகுத்துள்ளதன்றி அன்பு, ஈகை, சாந்தத்தில் உயர்ந்தோர் மாட்டே உலகம் சீர்திருந்துவதின் அனுபவங்கண்ட ஞானத்தாய் மேன்மக்கள் சொற்கேளென்று வற்புறுத்தி கூறியுள்ளாள்.

சிலர் மேன்மக்களென்றால் உயர்ந்தசாதியென்றும், கீழ்மக்களென்றால் தாழ்ந்தசாதியென்றும் அதனுட்பொருளறியாது வேஷசாதியோர் வகுப்பின்படி