பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 41

இதன் விவரந் தெரிந்துக்கொள்ளவேண்டியவர்கள் வேலூர் திருவல்லக் கிராமத்திலும், குல்கான்பேடே என்னும் கிராமத்திலும் கிடைத்துள்ளக் கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் தெரிந்துக்கொள்ளலாம்.

சுத்தசீலப் புத்தேளுலகிற்கு முதன்மெய்க் காவலாக விளங்குபவர் மாபலி பெருமானெனக் குறிப்பிட்டு மற்றும் விவரங்களையும் வரைந்திருக்கின்றார்கள்.

அவருக்கு ஆண் சந்ததி ஒன்றும் பெண் சந்ததி ஒன்றும் இருந்தது. இதில் ஆண்பிள்ளைத் திருப்பாணர் என்னும் அரசர். பெண்பிள்ளை அலர்மேலுமங்கை என்பவள், மடஞ்சார்ந்து பிட்சுணியாகிவிட்டாள். பாணர்வம்மிஷவாளிப் பட்டயத்தாலும், தாதைகி என்னும் அலர்மேலுமங்கை அற்புதத்திரட்டாலுந் தெரிந்துக்கொள்ளலாம்.

அலர்மேலுமங்கை அற்புதத்திரட்டு

மாவலிகடைநாட் கன்னியமாம் / வரவையேற்றதன்மின் வாயல்தோற்றுமின்.
பூவலிசிகரம்பற்றி தீர்த்தம் / பாயலேற்றுமின் பூவைபாற்றுமின்
காவில்புத்தூர் காவன் முன்னோன் / காலன்தூற்றுமின் கருணையேற்றுமின்
சேவடி நீழற் சேரற்றானந் / தேரவாற்றுமின் தேவர்போற்றுமின்.

மணிமேகலை

நெடியோன் குன்ற வாரசாரண / ரடியார் தானவ ரமரர்களுலகக்
காவல் கொண்டக் கற்பக சீலன் / மாவலி பெருமான் சீர்புகழ் திருமகள்
சிதாதகை யென்னுந் திருத்தகு தேவி / போதவிழ் பூம்பொழில் புகுந்தனள் புக்கி.

ஓர்கால் பகவனால் லோகவூற்றைக் காண்பித்து வியாதியுற்றவர்கள் சிரமுதலிலுள்ள ரோமங்களைச் சிறைத்துவிட்டு இன்னீரிற் குளிப்பீர்களானால் சிற்சில ரோகங்கள் நீங்குமென்றுரைத்த நெடியோன் குன்றம் - வேங்கடமலை - வடமலை என வழங்குமிடத்தில் மாவலிச்சக்கிரவர்த்தியால் இந்திரவியாரங் கட்டி அதிற்றானும் புத்தசங்கத்தோருந் தங்கி ஞானசாதன முற்றி புரட்டாசிமாதம் அமாவாசியில் நிருவாணமுற்றபடியால் அக்காலத்தை மறவாமல் புத்த தன்ம பிரியர்கள் யாவருஞ்சென்று ஏழைகளுக்கு அன்னதானமளித்து உரோமங்கழித்து சுனை தீர்த்தத்தில் முழுகி சமணமுனிவர்களைப் போல் மஞ்சளாடை அணிந்து அரசருக்குள் ஆட்சரிய துறவடைந்த கோவிந்தா கோவிந்தாவென்றானந்தக் கூச்சலுடன் மற்றும் வியாரங்களுக்குச் சென்று வருவது வழக்கமாயிருந்தது.

சீவகசிந்தாமணி

தீராவினைதீர்த்து தீர்த்தந் தெரிந்துய்த்து / வாராக்கதியுரைத்த வாமன்றானியாரே
வாராக்கதியுரைத்த வாமன் மலர்துதைந்த / காரார்பூம்பிண்டி கடவுணீயன்றே.
அம்மலைச்சினகரம் வணங்கிபண்ணவர் / பொன்மலர் சேவடி புகழ்ந்துபின்னரே
வெம்மலைத்தெய்வதம் விருந்துசெய்தபின் / செம்மல்போய்பல்லவ தேசநண்ணினான்.

சூளாமணி

என்றுதங்கதை யோடிரு நீண்டுகிற் / குன்று சூழ்ந்த குழுமலர் கானகஞ்
சென்றோர்வேங்கடஞ் சேர்ந்தனருச்சிமே / னின்று வெய்யவனு நிலங்காய்த்தினான்.
மஞ்சிவர் மால்வரைச் சென்னிவடமலை / விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற்றமரர்க / டுஞ்சிய வில்லத் துறக்க மனைத்தே.

இத்தகைய தன்மச் செயல்களை மதக்கடை பரப்பி சீவனஞ்செய்வோர் மாவலி அமாவாசி தானத்தை மாளிய அமாவாசை என்று மாற்றியதுமன்றி வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்த சுத்தவீரனாகும் மாபலியை தங்கட் கடவுள் மிதித்துக் கொன்றுவிட்டாரென்று மாவலிச் சக்கிரவர்த்தியின் சிறப்பையுங் கெடுத்து தங்களுக்குஞ் சீவன உபாயத்தைத் தேடிக் கொண்டார்கள். மாபலி - பாணவம்மிசத்து அரசன். - 1:18; அக்டோபர் 16, 1907 – பாணர்வம்மிஷ வரிசையைச் சார்ந்த மாவலிச் சக்கிரவர்த்தியின் புத்திரன் பாணரென்றும் திருப்பாணரென்றும் வழங்கிய ஒருவனிருந்தான். அவன் தனது இல்லறவாழ்க்கையைத் துறந்து திரிசிரபுரத்தைச் சார்ந்த அழகர் வியாரம் அரங்கா வியாரம் என வழங்கிய புத்ததன்ம சங்கத்திற் சேர்ந்து சீலமிகுதியடைந்தான். பெற்ற சுகத்தை ஏனையோரும் அடையவேண்டும் என்னும் நல்லூக்கத்தால் விடியற்காலத் தெழுந்து ஒவ்வோர் கிராமங்களுக்குங் சென்று அடியிற் குறித்துள்ள வாக்கியங்களை போதித்துக் கொண்டேவந்தார்.