பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பொருட்கூறித்திரிவர். அஃது பொருந்தாவாம். எங்ஙனமென்றால், ஒருங்கே ஓர் கூட்டத்தார் கூடித் தங்களை உயர்ந்தசாதியென்று சொல்லிக்கொள்வதும் மற்றுமோர் கூட்டத்தோரை ஒருங்கே சேர்த்து தாழ்ந்தசாதியென்று சொல்லித்திரிவதும் ஆகியப் பொருளற்ற மொழிகள் யாவும் கலையற்ற சாதிப்புறட்டுகளேயாம்.

சாதிக்கும் சாதனங்களில் நல்லோரென்னும் மேலான சாதனங்களை சாதிப்போர் மேல் சாதியினரென்றும், சாதிக்கும் சாதனங்களில் தீயோரென்னும் இழிந்த சாதனங்களைச் சாதிப்போரை தாழ்ந்தசாதியினரென்றுங் கூறத்தகும்.

அதாவது, ஐரோப்பியராயினும் சீனனாயினும், ஜப்பானியராயினும், இந்தியராயினும், வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமென்னும் மேலான சாதனங்களில் இருப்பார்களாயின் அவர்களையே மேன்மக்களென்றும், மேலான சாதியோ ரென்றும் கூறப்படும்.

பொய், வஞ்சகம், சூது, குடிகெடுப்பு, அன்னியர் பொருளாசை முதலிய இழி செயல்களிலிருப்பார்களாயின் அவர்கள் எத்தேசத்தாராயினும் கீழோ ரென்றும், தாழ்ந்த சாதியோரென்றுங் கூறப்படும்.

ஆதலின் நல்லூக்கம், நற்கடைபிடி, நல்லுணர்ச்சி, நல்வாய்மெய் மிகுத்த மேன்மக்களாம் விவேகமிருத்தோர் சொற்படி நடக்கவேண்டுமென்று கூறியுள்ளாள்.

95. மைவிழியார் மனையகல்

மைவிழியார் - கண்ணில் மையிட்டு மயக்கவல்லார், மனை - வீடுகளுக்கு, அகல் - தூர நில்லு மென்பதாம்.

தூண்டிலிட்டும் வலைவீசியும் மச்சங்களை இழுப்பதுபோல், கண்களுக்கு மையிட்டு வாலிப மக்களுக்கு வலைவீசும் மைவிழியார் மனையைக் கண்டவுடன் அவ்விடம் நில்லாது தூர அகல வேண்டு மென்பது கருத்தாம்.

96. மொழிவ தறமொழி

மொழிவது - ஓர் வார்த்தை புகலுங்கால், அற - சந்தேக மற, மொழி - சொல்லவேண்டு மென்பதாம்.

ஒரு வார்த்தையை புகலுங்கால் அவ்வார்த்தையின் பொருள் தெரிந்தும் தெரியாது இருக்குமாயின் பிரயோசன மற்றுப்போம். ஆதலின் மொழியின் வாக்கு முழுதும் தெளிவுற சொல்லவேண்டுமென்பதாம்.

97. மோகத்தை முநி

மோகத்தை - காமிய மயக்கத்தை, முநி - கடந்து நில்லென்பதாம்.

காமவெகுளி மயக்கங்களாம், மூன்றினுள் காமியமே மிக்கக் கொடியதாதலின் அவற்றை முநிந்து ஜயித்தலே மக்களுக்கழகாம், ஆதலின் மோகத்தை முனியென்று வற்புறுத்தியுள்ளாள்.

98. வல்லமெய் பேசேல்

வல்ல - மிக்க சாமர்த்தியமுடைய, மெய் - தேகி யென்று, பேசேல் - பலருமறியக் கூறாதே யென்பதாம்.

அதாவது, மாமிக்கோர் மாமி உண்டென்பதுணராது எமக்கு மேற்பட்ட வல்லமெய்ப்புருஷன் இல்லையென்று கூறுவானாயின் அவனுக்கு மேற்பட்ட வல்லமெய்யன் தோன்றி அழித்துவிடுவான் ஆதலின் எத்தகைய வல்லமெய் யோனாயினுந் தனது வலதை பலரறியக் கூறாதிருப்பதே சிறப்பைத் தருமென்று விளக்கியுள்ளாள்.

அறப்பளீசுரசதகம்

தனக்குவெகு புத்தியுண்டாயினும் வேறொருவர் தன்புத்தி கேட்கவேண்டும்
தானதிக சூரனே யாயினுங் கூடவே தள சேகரங்கள் வேண்டும்
கனக்கின்ற வித்துவானாயினுந் தன்னினுங் கற்றோரை நத்தவேண்டும்
காசினியை யொருகுடையி லாண்டாலும் வாசலிற் கருத்துள்ள மந்திரிவேண்டும்
தொனிக்கின்ற சங்சீத சாமர்த்தயனாயினும் சுதிகூட்ட
வொருவன்வேண்டும்
சுடர்விளக்காயினும் நன்றாய் விளங்கிடத் தூண்டு கோ லொன்று வேண்டும்