பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 505

உதவிபுரியும் உத்தமனாதலின் இல்லறத்தில் நல்லறத்தோனை மிக்க மதித்துக் கூறியுள்ளாள்.

திரிக்குறள்

இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு / நல்லாற்றி னின்ற துணை.

அறநெறிச்சாரம்

மடப்பதூஉமக்கட் பெறுவதூஉம் பெண்பான்
முடிப்பதூஉமெல்லாருஞ்செய்வர் படைத்ததனால்
இட்டுண்டில்வாழ்க்கை புரிந்துதா னல்லறத்தே
நிற்பரேல் பெண்டீ ரென்பர்

நாயனாதிகாரர் காப்பியம்

தலைவனுந் தலைவி யென்பார் தங்களிற் பக்கமன்பு
நிலைமன மொருமெயோடு நிணிலந்தன்னில் வாழ்தல்
பலனவனென்னில் வானிற் பரமனு மருள்போரின்ப
நலனு நீ டூழிகாலம் நன்கொடு வாழ்குவாரே.

சங்கத்துபராதம்

எப்பணியா லின்புருவர் காதலர் காதலரை / யப்பணியா லப்பொழுதே யன்புறுத்தி யொப்
மனங்குழையும்வண்ண மகிழ்விப்பதன்றே / கனங்குழையார் தங்கள் கடன்.

4. ஈயார் தேட்டைத் தீயார்கொள்வர்

ஈயார் - மற்றவர்க்குக்கொடா லோபியரின் தேட்டை - சுகப்பொருளை, தீயோர் - வஞ்சகர், கள்ளர், பொய்யர்களாகிக்கொறூரச்சிந்தையை யுடையவர்கள், கொள்வர் - அபகரித்துக் கொள்ளுவார்கள் என்பதாம்.

நாலடி நானூறு

உடா அது முண்ணாதுந்த முடம்புசெற்றுங் / கெடா அத நல்லறமுஞ்செய்யார் -
கெடா அது
வைத்தீட்டி னாரிழப்பர் வான்றோய் மலைநாட / வுய்த்தீட்டுந் தேனீக்கரி.

5. உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு

உண்டி - உண்ணும் புசிப்பை, சுருங்குதல் - மிதாகாரத்தில் நிறுத்தல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - சிறப்பாகும்.

அதாவது, பெண்கள் தங்களது புசிப்பை அதிகமுமில்லாது கொஞ்சமுமல்லாது புசிப்பார்களாயின் தன் கணவனையும், பந்துக்களையும் வரும் விருந்தினரையும் அன்புடன் போஷிப்பார்கள். அங்ஙனமின்றி பெருந்திண்டியை விரும்புவரேல் தன்கணவரையும் பந்துக்களையும் விருந்தினரையும் ஓம்பார்களென்பது திண்ணமாதலின் உண்டிற் சுருக்கி வாழ்தலே இல்வாழும் பெண்ணுக்குக் இனியதென்று கூறியுள்ளாள்.

நீதிநெறிவிளக்கம்

கற்பின் மகளிர் நலம்விற் றுணவுகொளா / பொற்றொடி நல்லார் நனிநல்லர்- மற்றுத்தங்
கேள்வர்க்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர் / யாவர்க்குங் கேடு சூழார்.

அறநெறிச்சாரம்

கொண்டான் குறிப்பொழுகல் கூறி நாணுடை / கண்டது கண்டு விழையாமெய்- விண்டு
வெறுப்பென செய்யாமெய் வெஃகாமெய் நீக்கி / யுறுப்போடு ணர்வுடையாள் பெண்.

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

ஊருடன் - ஓர் கிராமத்துட் சேர்ந்து வாழும் எல்லோருடனும், பகைக்கின் - விரோதித்துக்கொள்ளில், வேருடன் - தனது புத்திர மித்திர சந்ததியோர்களுடன், கெடும் - சீரழிவார்க ளென்பதாம்.

ஆதலால் ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கவேண்டுமென்றும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமென்றும் எண்ணம் உடையவர்களாய் ஓரிடஞ் சேர்ந்து வாழ்தற்கு ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எண்ணத்தை விடுத்து விரோத சிந்தையைப் பெருக்கிக்கொள்ளுவதாயின் அக்குடி வாழ்க்கையில் தான் கெடுவதுமன்றி தனது குடும்பசம்பந்தமுள்ள யாவருங்