பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 509

மும்மெய்யிற் செய்த தீவினையின் பயனை இம்மெய்யில் அனுபவிக்கும் சுகத்தையும், அசுகத்தையும் உய்த்துணர்வோமாயின் மறுமெய்யில் அதிக துக்கத்திற்கு ஆளாகாது சுகம்பெறுஞ்செயலை அடைவான்வேண்டி இம்மெய்யில் அவ்வியம் பேசலாகாதென்று கூறியுள்ளாள்.

அறநெறிச்சாரம்

முற்பிறப்பிற் றான்செய்த புண்ணியத்திநல்லதோர்
இற்புறத்தின்புறா நின்றவ - ரிப்பிறப்போ
யின்னுங் கருதுமே வேதங்கடிந்தறத்தை
முன்னு முயன்றொழுகற் பாற்று.

13. அஃமுங்காசுஞ் சிக்கென் றகற்று

அஃமும் - தேகத்தா லுண்டாகுங் குற்றங்களையும், காசும் - மனத்திலெழுஉங் களங்கங்களையும், சிக்கென - பாசபந்தக் கயிற்றின் வலையென், அகற்று - கண்டு நீக்கி விடுமென்பதாம்

காஸுயென்னும் பாலிமொழிக்கு களிம்பு ஆசாபாசமென்னும் பொருளைக் குறித்திருக்கின்றார்கள்.

அருங்கலைச் செப்பு

ஆசாபாசத்தோ டஃக விருளகற்றி / பேசாதான் பெற்ற பலன்.

14. கற்பெனப்படுவது சொற்றிரும்பாமெய்

கற்பு யெனப்படுவது - பெண்களுக்குக் கற்பென்று கூறப்படுவது, சொல் - கணவன் வாக்குக்கும், மாமனார் மாமியார் வாக்குக்கும், திரும்பாமெய் - கோணாமல் நடக்குந்தேகத்தைப் பெற்றவள் என்பதாம்.

அதாவது இல்லாளென்னும் மனைவாழ்க்கைக்குடையவள் கணவனையே தெய்வமாக பாவித்து அவனது வாக்கைக் கடவாமலும், மாமன் மாமியார் வாக்கை மீறாமலும் நடக்குந் தேகத்தை உடையாளை கற்புடைய மகளீரென்று கூறப்படும்.

அறநெறிச்சாரம்

வழிபா டுடையாளாய் வாழ்க்கைநடா அய் / முனியாது சொல்லிற்றுச் செய்தாங் - கெதிருரையா
தேத்திபணியுமே லில்லாளையாண்மகன் / போற்றிப்புனையும் பரிந்து.

பாரதம்

தன்கணவனைக்கடவு ளென்றுபலதன்மெய் / மென்முறைதிருத்திவழிபாடுக நிரைப்பேன்
இன்பொடு மவர்க்கினிய நாடியவைதேடி / யன்பொடு சமைத்திடுவ னல்குவனடுத்தே.
புருடனுண்டபின் றானுணல் பூவைமாற் / குரியவனவனாழ் துயிலுற்றபின்
அருசினிற்றுயின் றாங்கவன் முன்விழித் / தருடலைக்கொளல் கற்புடையாரரோ.

15. காவரானே பாவையர்க்கழகு

காவரானே - பெண் விவேகியாயினும் அவளை விவேகமுடன் கார்க்குங் காவலாளன் இருப்பானாயின், பாவையர்க்கு - பதுமெயாம் அழகுநிறைந்த பெண்களுக்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம்.

நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு இன்னான்கும் அமைந்த பெண்ணுருக் கொண்டவளாயினும் அவளுக்கோர் நற்காவலனில்லாவிடின் பெண்மெய்க்கு எவ்விதத்துங் கேடுண்டாமென்று உணர்ந்த ஞானத்தாய் காவல்தானே பாவையர்க் கழகென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

16. கிட்டாதாயின் வெட்டென மற

கிட்டாதாயின் - நீவிர் இச்சிக்கும் பொருள் கிடைக்காவிடின், வெட்டென - துண்டிக்கும் பொருளைப்போல் அவ்விச்சையை, - மற அகற்றிவிடுமென்பதாம்.

மக்கள் நாடும் சிற்றின்ப பொருள் கிட்டா தாயினுந்துக்கம் ஓர்கால் கிட்டுமாயின் அப்பொருளைக் கார்ப்பாற்றுதலினுந் துக்கம், அப்பொருள் கை தவரினுந்துக்கம். ஆதலின் ஒருபொருள் மீது மிக்க அவாப்பற்றி நிற்கலாகாதென்பது கருத்து.