பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 511


அதாவது அவனவன் உள்ளத்திற் பதிந்துள்ள மண்பொருளினழகும், பொன்பொருளினழகும் பெண்பொருளினழகுங் தோன்றி தோன்றி கெடுவது சுவாபமாகும்.

கல்வியென்னும் மெய்ப்பொருளோ, கற்றவளவினின்று கலை நூல் உசாவுவனேல், அதன் பலனும், அதனழகும் அதனொளியும் இவனது உருவங்காணாது அழிந்த விடத்தும் பிரகாசிக்கு மென்பதாம்.

மூவர் தமிழ் - நாலடி நானூறு

குஞ்சியழகுங் கொடுத்தானைக் கோட்டழகும் / மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவுநிலையாமெய் / கல்வி யழகே யழகு.

அறநெறிச்சாரம்

எப்பிறப்பாயினு மேமாப்பொருவற்கு / மக்கட் பிறப்பிற் பிறிதில - அப்பிறப்பில்
கற்றலுங் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண் / நிற்றலுங் கூடப்பெரின்.

23. கொற்றவனறித லுற்றுடலுதவி

கொற்றவன் - வல்லவன், அறிதல் - தன்னையறிந்தடங்கற்கு, உதவி ஆதாரமானது, உடல் - தேகமேயாம்.

அதாவது வல்லமெயுற்றோனெனத் தோன்றியும், தன்னை ஆராய்ந் தடங்காது வல்லபத்தை விழலுக்கிரைத்த நீர்போல் விட்டுவிடுவானாயின் தேகம் தளர்ந்து பாலுண் கடைவாய் படிந்து நோக்குங் குறைந்துவருங்கால் பற்பல பிணிகளாலும், துன்புற்று துக்கத்தைப்பெருக்கிக்கொள்ளுவான். ஆதலின் தேகசக்தி மிக்கவன் ஒவ்வொருவனும் தன்னையறியுஞ் சாதனத்து உழைப்பனேல் தேகமெடுத்த பலனை அடைவானென்பது கருத்து.

அறநெறிச்சாரம்

நீக்கரு நோய்மூப்பு தலைப்பிறிவு நல்குரவு / சாக்காடென்றைந்து களிருழக்கப் - போக்கரிய
துன்பத்துட்டுன்ப முழப்பர் துறந்தெய்தும் / இன்பத் தியல்பறியா தார்.

மூவர்தமிழ் - நாலடி நானூறு

நிலையாமெய் நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணி
தலையாயார் தங்கருமஞ்செய்யார் - தொலைவில்லா
சித்துமுடலுஞ் செய்யநிலையென்னும்
பித்தரிற் பேதையாரில்.

இச்செய்யுளில் பாடபேதங்கள்:

1831 வருஷம் ம-அ-அ-ஸ்ரீ தாண்டவராய முதலியாரவர்களால் அச்சிட்டுள்ள நாலடி நானூறில், "சத்தமும் சோதிடமு மென்றாங்கிவை பிதற்றும்" என்றும் ம-அ-அ-ஸ்ரீ வேலூர்மார்க்கலிங்க பண்டாரமவர்கள் ஏட்டுப்பிரிதியிலும், ம-அ-அ-ஸ்ரீ மயிலை குப்புலிங்கனாயனாரவர்கள் ஏட்டுப்பிரிதியிலும்,

"சித்துமுடலுஞ் செய்யநிலையென்னும்"

என்னும் பாடபேதங்களைக் கண்ணுற்ற போது இருவரேட்டுப் பிரிதிகளிலுள்ளச் செய்யுள் சிதையினும் பொருள் பொருந்தியுள்ளது கண்டு உடற்கூற்றையே வெளியிட்டுள்ளோம்.

சத்தமுஞ் சோதிடமுமென்னு மொழி முற்சீருக்குப் பொருந்தாதாதலினும், சோதியின் இடங்கண்டு கூறுவோரை பித்தரென்று கூறியுள்ளதும் பிழையேயாம்.

எங்ஙனமென்பீரேல் தற்காலமுள்ள பிரிட்டிஷ் ஆட்சியில் (அஸ்ட் மர்) என்னும் வானசாஸ்திரிகள் சோதிகளாகும் நட்சத்திரங்களுள்ள இடங்கண்டு இன்னசோதி, இனிய இடம் போமாயின் காற்றடிக்கும் மழைபெய்யுமென்று கூறுதலும், சாக்கையர்கள் குணிப்பில் இன்னசோதி இன்னின்னவிடங்களில் மாறுபடுமாயின் சூரிய கிருஹணம், சந்திரகிருஹணம் உண்டாமென்னுங் குறிப்பும், அநுபவத்திலும், காட்சியிலுமிருக்குங்கால் சோதியின் இடமறிந்து பலாபலன் கூறுவோரை பித்தரென்றும், பேதையரென்றுங் கூறியுள்ளது பிழையென்று துணிந்து கூறியுள்ளோம்.

24. கோட்செவிக் குறளை காற்றுட நெருப்பு

கோட்செவி - எக்காலுங் குற்றமாகிய சொற்களையே கேட்க விரும்பும் சுரோத்திரமுடையவன், குறளை - விருப்பமானது, காற்றுட நெருப்பு - மனைகள்