உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

512 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தீப்பட்டெறியுங்கால் காற்றுஞ் சேர்ந்துக்கொள்ளுமாயின் உள்ள மனைகளும் எரிந்து பாழாவதுபோல் தான் கெடுவதுடன் தன் சுற்றமுங் கெடுமென்பதாம்.

குடும்பத்தோர் குற்றங்களையாயினும், நேயர்கள் குற்றங்களையாயினும் தங்கள் செவியாரக் கேட்க விருப்பமுடையவன் மனமானது எப்போதும் கோபமென்னுந் தணலில் எரிந்திருக்குங்கால் மேலுமேலுங் கோட்சொல் நுழையில் காற்றுடன் சேர்ந்த நெருப்பைப்போல் உள்ள கோபாக்கினி மீறி தன்னையுந் தன் குடும்பத்தையுந், தன்நேயரையும் அழிக்குமென்று உணர்ந்த ஞானத்தாய் குற்றத்தைக் கேழ்க்கும் விருப்பமிகுத்தோன் காற்றுடன்சேர்ந்த நெருப்புக்கொப்பாய் தன்னைத்தானே தகித்துக்கொள்ளுவானென்பது கருத்து.

அறநெறிச்சாரம்

தன்னிற் பிறிதில்லை தெய்வநெறி நிற்பில் / ஒன்றானுந்தானெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானுந் தானேதான்றன்னை / சிறைவனாய்ச் செய்வானுந்தான்.

25. கௌவைசொல்லி னெவ்வருக்கும் பகை

கௌவைசொல் - எதிரிக்கு மற்றொருவன் கூறிய வார்த்தையைச் சொல்லுதலும், மற்றவன் கூறிய வார்த்தையை எதிரிக்குச் சொல்லுதலும், எவருக்கும்பகை - ஒருவருக்கொருவரை விரோதிக்கச்செய்து பாழ்படுத்து வதுடன் அத்தகையக் குட்டுணிசெயலால் சகலருக்கும் விரோதியாவான் என்பதாம்.

உடும்புக்குள்ள இரட்டை நாவைப்போல் இருவருக்கும் நேயனைப் போலிருந்து கெளைவப்போல் அவர் சொல்லை இவருக்கும், இவர் சொல்லை அவருக்குஞ் சொல்லி கலகத்தை உண்டு செய்வோன் இருவருக்கும் விரோதியா வதுடன் இவன் இருநாக்கன், கௌவை சொல்லன் என்றுணர்ந்தோர் யாவரும் இவனைக் கண்டவுடன் பயந்து யாதொரு சொற்களையும் பேசாமல் துரத்தி விடுவார்கள். ஆதலின் ஒருவர் சொல்லை மற்றவனுக்குச் சொல்லுங் கௌவை சொல் எக்காலும் பேசலாகாதென்பது கருத்து.

26. சந்ததிக்கழகு வந்தி செய்யாமெய்

சந்ததி - புத்திர பாக்கிய விருத்திக்கு, அழகு - சிறப்பு யாதெனில், மெய் - தனது தேகத்தை, வந்திசெய்யா - அறுவகை கற்பதோஷத்திற் குள்ளாகாது கார்க்கவேண்டிய தென்பதாம்.

அதாவது இஸ்திரீகளை மலட க்கிப் புத்திர பாக்கியத்தைக் கெடுப்பது அறுவகைக் கருப்பை தோஷங்களேயாதலின் சந்ததியின் அழகைக்கோறும் பெண்கள் யாவரும் கருப்பை தோஷமுண்டாகாது காக்கவேண்டுமென்பது கருத்து.

27. சான்றோரென்கையீன்றோட்கழகு

சான்றோர் - நற்குணங்கள் யாவும் நிறைந்த ருபி, என்கை - என்று கூறப்படுவானாயின், ஈன்றாள் - பெற்றத்தாயார்க்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம்.

தானீன்ற புத்திரன் நல்வாய்மெய், நல்லூக்கம், நற்கடைபிடி என்னும் சாந்தரூபியாய் சகலராலுங் கொண்டாடப்படுகின்றா னென்று பல்லோரும் புகழக் கேழ்ப்பதே பெற்றவளுக்குப் பேரழகென்று கூறியுள்ளாள்.

திரிக்குறள்

ஈன்றப்பொழுதிற் பெரிதுவக்குந்தன் மகனை / சான்றோனெனக் கேட்டத்தாய்.

அறநெறிச்சாரம்

எள்ளிப்பிறருரைக்கு மின்னாச்சொல் தன்னெஞ்சில் கொள்ளிவைத்தாற்போல் கொடி தெனினு மெள்ள
அறிவென்னு நீரா லவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டாந் தவம்.

28. சிவத்தைப்பேணிற் றவத்திற்கழகு

சிவத்தை - உனக்குள்ள அன்பை, பேணில் - பெருக்க முயலில், தவத்திற்கு - சுகசாதனத்திற்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம்.