பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 521

பலன்களுண்டாவதுபோல் காலையில் பாலை அருந்துவதும், பலகாரங்களுடன் சேர்ப்பதும், இதயகோசம் வலுபெரும். மத்தியானந் தயிர் மோர் சேர்த்தல் பித்தசாந்தி யுண்டாம். மாலையில் வெந்நீரருந்தல் ஆயாசமும் நரம்புகளின் சோர்வு நீங்கும்.

இத்தியாதி பதார்த்த குணா குணங்களையும் ஞானத்தாய் நன்குணர்ந்தவ ளாதலின் பசுவின் பால் மிக்கவிருக்கினுங் காலமறிந் துண்ணவேண்டுமென்று கூறியுள்ளாள்.

61. பிறன்மனை புகாமெ யறமெனத் தகும்

பிறன் - அன்னியனுடைய, மனை - மனைவியை யிச்சித்து, புகா - அவனில்லம் நுழையாத, மெய் - தேகமே, அறம் - சத்திய தருமத்தை பெற்றது, எனத்தகும் - என்று கூறத்தகும் யென்பதாம்.

அன்னியனுடைய மனைவியை இச்சித்து அவளில்லம் புகாத தேகமே அறச்சுக தேகமென்று கூறியுள்ளாள்.

மூவர்தமிழ் - நாலடி நானூறு

அறம்புகழ் கேண்மெய் பெருமெ யிந்நான்கும் / பிறன்றார நச்சுவார் சேரா - பிறன்றார
நச்சுவார் சேரும் பகைபழிபாவ மென் / ரச்சத்தோடி ந்நாற் பொருள்.

62. பீரம் பேணிற் பாரந் தாங்கும்

பீரம் - வீரம், பேணில் - கொள்ளில், பாரம் - பெருஞ்சுமையை, தாங்கும் - சுமக்கக்கூடும் என்பதாம்.

யாதொன்றுக்கும் அச்சமின்றி வீரமுற்றுள்ள புருஷன் தனக்கு அதிகபாரமுற்ற சுமையே ஆயினும் வீரத்தன்மெயால் அதனை எளிதிலேந்திச் செல்வானென்பது துணிபு. மனோதிடமும், தைரியமுமுள்ள புருஷன் எடுத்தகாரியத்தை எளிதில் முடிப்பானென்பது கருத்து.

63. புலையுங் கொலையுங் களவுந்தவிர்

புலையும் - மாமிஷ யிச்சையையும், கொலையும் - சீவ யிம்ஸையையும், களவும் - அன்னியர் பொருளை யபகரித்தலையும், தவிர் - அகற்றுமென்பதாம்.

நாவுக்குரிய உருசியின் அவா மிகுதியால் மாமிஷ இச்சை உண்டாயின் கொலையாம் சீவயிம்சைக்கு அஞ்சான். சீவர்கள் கிடையாவிடின் அவற்றை விலைக்குக் கொள்ளுதற்கு அன்னியர் பொருளை களவுசெய்ய அஞ்சான். அக்களவின் அவாவால் தன்மெயொத்த மக்களையும் வதைக்க அஞ்சான். ஆதலின் ஞானத்தாய் புலையின் இச்சை முதலாவது அகற்றவேண்டுமென்று கூறியுள்ளாள்.

அருங்கலைச்செப்பு

ஊனுண் டுடலை யுறக்க விருப்போன் / தானுண் டலைவான் தவிர்.
புலையுண்ணு மாசை பிறவூ னருந்தல் / கொலையுண்ணற் கஞ்சாக் குறி.
புலைவெறுத்தோனென்னும் புன்மெயின்சான்று / கொலையகற்றாற் காட்டிவிடும்.
ஊன் தின்னேனென்னு முறுதி யுரைப்பார்க்கு / தான் கொலையுண் சீவன் கரி.
சீவனுயிரை சிதைக்கே னெனக் காணல் / ஆவல்புலா லிச்சை போம்.

பரப்பொருளை வவ்வி புலாலுண் டுகித்தோன் / றிரக்கொலைக்குத்தாரன் றெளி.
தேவர்கட் கென்பான் றீயிற்சுட்டுண்பான் / பாவிக்குமாமோ பரம்.
ஊனாசைக்கொண்டு வுயிர்சுட்டுத் தின்பான் / றானூனைத் தின்பான் றலை.
வேள்விதீ யென்பான் வேறுயிர் சுட்டுண்பான் / மாள்வான்கொல் மற்றுயிராலென்.
புலாலாசையற்று புண்ணியத்தி னின்றோன் / நிலா மதிய நீள்விசும்புளான்.

64. பூரியோர்க்கில்லை சீரியவொழுக்கம்

பூரியோர்க்கு - நீச்சமிகுத்த கீழ்மக்களுக்கு, சீரிய - சீர்பெறவேண்டிய, ஒழுக்கம் - நன்மார்க்கம், இல்லை கிடையாயென்பதாம்.

அதாவது, பொய், வஞ்சினம், சூது, பொறாமெய், குடிகெடுப்பு நிறைந்த கீழ்மக்களுக்கு மெய்ப்பேசுதல், சகலரிடத்தும் அன்புபாராட்டல், நெஞ்சங் களங்கமற்றிருத்தல், சகலர் சுகத்தையுங்கண்டு ஆனந்தித்தல், தங்களைப்போல்