பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 539


ஈதன்றி மதுரையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட புத்தசங்கங்கள் இருந்தனவென்று சிலாசாசனங்களாலும், செப்பேடுகளாலும் கண்டறிந்த (ஆர்ச்சலாஜிக்கல் சர்வேயர்கள்) தெளிவாக வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

அவற்றினுள் முதற்சங்கம் இருந்ததென்றாயினும், நடுச்சங்கம் இருந்த தென்றாயினும், கடைச்சங்கம் இருந்ததென்றாயினும் ஓர் குறிப்புங்கிடையாது.

அச்சங்கங்கள் இன்ன மதத்தினரைச் சார்ந்ததென்று திடம்படக்கூற யாதோர் ஆதரவுங் கிடையாது. அவ்வகையாகவே சிலத் தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக ஒப்புக்கொள்ளினும் அஃது முதற் சங்கம், இரண்டாஞ் சங்கம், மூன்றாஞ் சங்கமென்று வழங்குமேயன்றி முதற்சங்கம், நடுச்சங்கம், கடைச் சங்கமென வழங்குமோ.

அதை விளக்கச் சென்னையில் ஓர் கலாசாலையை எடுத்துக் கொள்ளுவோம். ஆதியிற் சிலர்கூடி வாசித்தக் கலாசாலை முதற் கலாசாலை என்றும், இரண்டாவது சிலர்க்கூடி வாசித்த கலாசாலைக்கு இரண்டாங் கலாசாலை என்றும், மூன்றாவது சிலர்க்கூடி வாசித்த கலாசாலைக்கு மூன்றாங் கலாசாலை என்றுங் கூறுவரேயன்றி முதற்கலாசாலை, நடுக்கலாசாலை, கடைக்கலாசாலை என்று கூறுவரோ.

அங்ஙனங் கூறுதற்கு மூன்று சங்கங்களும் அக்காலத்தில் இல்லாமல் ஒவ்வோர் சங்கங்கள் இருந்த காலங்களையும் வெவ்வேறென வரையறுத்துக் கூறியிருக்கின்றார்களே. அத்தகையாய் வறையறுத்தக் காலங்களிற் தோன்றிய சங்கங்களை முதற்சங்கம், நடுச்சங்கம், கடைச்சங்கமென முடிக்கவுந் தகுமோ. கடைச்சங்கமென்று முடிவு பெற்று பின்னும் நான்காஞ் சங்கமென்னும் நாமந் தோன்றுமோ ஒருக்காலுந் தோன்றா.

இவைகள் யாவும் பொய்க்குருக்கள் தோன்றி பொய்மதங்களையும், பொய்ச்சாதிகளையும், உண்டு செய்து அவைகளை மெய்ப்படுத்துமாறு மூன்று சங்கங்கள் இருந்ததென்று வகுத்தும் அச்சங்கம் தற்காலம் உண்டாவென்று கேட்போருக்கு உத்தாரமளிக்க வழியின்றி முதல், நடு, கடை என செல்காலத்தில் நிறுத்திக்கொண்டார்கள் தமிழ் பாஷையினை ஈன்று வளர்த்தவர்களும், சத்திய தன்மத்தைப் பரவச்செய்தவர்களும், சமணமுனிவர்களாதலின் அவர்களால் கொண்டாடி வந்த புத்த, தன்ம, சங்கமென்னும் முத்திர மணிகளை முச்சங்கங் களென மாற்றிவிட்டார்கள். அதாவது, ஏககாலத்தில் முதலாகத் தோன்றியவர் புத்தர், நடுவாகத்தோன்றியது தன்மம், கடையாகத் தோன்றியது சங்கம். இவற்றையே முத நடு கடைச்சங்கமென வழங்கிவந்தார்கள். மற்றும் முறையே என்றுமழியா பதுமநிதி என்றும், தன்மநிதி என்றும், சங்கநிதி என்றும் கொண்டாடி வந்தார்கள்.

இத்தகைய மெய்க்குருக்களின் போதனைகளையும், செயல்களையும், மாறுபடுத்தி மதக்கடை வைத்து சீவிக்க முயன்ற பொய்க்குருக்கள் தங்களது முதற்சங்கம் நாலாயிரத்தி ஐந்நூறு வருடம் இருந்ததென்றும், கடைச்சங்கம் இரண்டாயிர வருடம் இருந்ததென்றும், நடுச்சங்கம் மூவாயிரத்தைந்நூறு வருடம் இருந்ததென்றும் பத்தாயிர வருட கணக்கை பரக்க எழுதிவைத்திருக்கின்றார்கள்.

நூறுவருட கணக்கை நுட்பமாக எடுத்து வரையறுத்துக்கூற வகையற்றவர்கள் பத்தாயிர வருட கணக்கை எந்த அரசாங்க பதிவில் பதிந்துவைத்திருந் தனரோ விளங்கவில்லை.

தங்கள் சங்கங்களின் கணக்கை பத்தாயிர வருடமெனப் பதிந்து வைத்துள்ளவர்கள் எந்த யுகமுதல் எதுவரையிருந்ததென்னுங் காலவரையை ஏட்டில் எழுதாதிருந்து விட்டார்கள் போலும்.

எவ்வகை கணக்குகளையும் யுகக்கணக்குகளாம் இருட்டரையில் விட்டு மயக்குகின்றவர்களாதலின் தங்கள் சங்கக் கணக்குகளை பத்தாயிர வருடமென வகுத்துள்ளவர்கள் தமிழ்பாஷையும், தமிழிலக்கங்களும் அசோகவரசன் காலத்தில் மதுரையிற் பிரபலப்பட்டதா அன்று அசோகவரசன் காலங்களுக்கு முன்பு பிரபலப்பட்டதா என்பதை சிலாசாசனங்களினாலும், செப்பேடுகளி