பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நூலாசிரியரை நிந்திப்பது அழகாமோ. உள்ளதை ஒளியாது விளக்கி மக்களைச் சீர்பெறச்செய்வது மதியூகிகளின் கடனாதலின், நாயனார் தான் இயற்றியுள்ள காமத்துப்பாலில் புருஷருக்குள்ள செயலையும், இஸ்திரீகளுக்குள்ள செயலையும் தெள்ளற விளக்கியிருக்கின்றார்.

அவர் விளக்கியச் செயலுக்கும், அநுபவத்திற்கும் ஏதேனும் மாறுதலுண்டோ, இல்லையே. இத்தகைய மாறுதலற்ற மதியூகிகட்போதத்தைக்கண்டு அகமகிழாது திகைப்பது வீணேயாகும். உலகத்தின் மனுகுலத்தோற்ற சருவ ஆடம்பரங்களும் காமியத்தையே பீடமாக வகுத்துள்ளதை அறியாது அதை சிறப்பித்தது தவரென்று கூறுதல் உள்ளுக்குக் காமியசிறப்பை ஒளித்து வெளிக்குத் தூற்றுவதொக்கும். நாயனார் அங்ஙனம் ஒளியாது மக்களின் சருவசெயல்களையும் அளந்து கூறியவிடத்து காமத்துப்பாலையும் தெள்ளற விளக்கி விட்டார் காரணம், இன்பத்தையும் துன்பத்தையும் விளக்கும் ஓர் போதனா நிலையாகும்.

அதற்குப் பகரமாய் கிறிஸ்துவானவர் தனது மாணாக்கரையும் மற்ற மக்களையும் நோக்கி மனிதன் ஓர் இஸ்திரீயை நோக்கிப்பார்த்தபோதே அவளையவன் சேர்ந்ததொக்குமென போதித்திருக்கின்றார். காமியநிலையைக் கருத்தறிந்து கூறியுள்ளபடியால் அவர் அங்ஙனம் கூறலாகாது என்னலாமோ. போதனைப் புதைப்பொருள் பலவாறு நிற்கும். அவைகளை உணர்ந்தே சங்கித்தல் வேண்டும். உணராச் சங்கிப்பு பலன்தராவாம்.

4:18, அக்டோபர் 12, 1910

14. கவிராயர் சிறப்பு

இந்திரதேசத்தில் தமிழ்பாஷையை வளர்த்த அரசர்கள் தமிழ் வித்துவான்களையும் மிக்க சிறப்புடன் வளர்த்துவந்தார்கள். அச்சிறப்பினால் ஒவ்வொரு வித்துவபுருஷர்களும் இலக்கிய இலக்கணங்களை நன்குணர்ந் திருந்ததுமின்றி எழுத்துக்களில் நஞ்செழுத்து அமுதெழுத் திவைகளையும் அறிந்து பாடும் வல்லவர்களாகவு மிருந்தார்கள். அத்தகைய வல்லபத்தால் ஆசுகவி, மதுரகவி, சித்திர கவி, விஸ்தார கவியெனும் நான்கு கவிகளையுங் குற்றமறப் பாடுவோரை கவிராயரென்றழைத்துவந்தார்கள். அதாவது, கவிக்கு அரசனென்பதேயாம். கவிக்கரசரானோரை தேசவரசர்கள் மதித்து சமாசன ஈய்ந்து வித்துவவிருதுகளும், வேண பரிசும், மானியங்களும் அளித்து பாதுகாத்து வந்தார்கள். அதனால் அனந்த வித்துவான்கள் பெருகியதுமன்றி வித்தியா விருத்தியால் விவேகவிருத்திப்பெற்று சாதுசங்கங்களைச் சேர்ந்து சமணநிலையுற்று உலோகோபகாரமாய்க் கலைநூற்களை இயற்றி சகல மக்களுக்கும் போதித்து நீதிநெறி ஒழுக்கங்களை நிலைக்கச்செய்துவந்தார்கள்.

தமிழ் இலக்கிய இலக்கணங்களை வகுத்துரைத்தவர்களும் சமண முநிவர்களே. தமிழ்க் கவிகளாகும் கோவைபாடுங் குறிவைத்தவர்களும் சமண முநிவர்களே. அகவற்பாடும் அளவை வகுத்துவைத்தவர்களும் சமண முநிவர்களே, வெண்பா, விருத்தப்பா பாடும் விதிகூறிவைத்தவர்களும் சமண முநிவர்களேயாகும். தற்காலமோ அத்தகைய சமணமுநிவர்கள் வாழுஞ்சங்கங் களையே பாழ்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கு மெய்க்குருக்களாக விளங்கிவந்த யதார்த்தபிராமணர்களும் இல்லாமற் போய்விட்டார்கள். இவைகள் யாவற்றிற்கும் பீடாதாரமாகும் தமிழரசர்களும் இல்லாமல் ஒழிந்தார்கள்.

தற்காலமுள்ளத் தமிழ்மண மாறாதுத் தென்னிந்தியாவில் வீசச்செய்து வரும் மன்னர்கள் இருவர்களேயாவர். அவர்கள் யாரென்பீரேல், கனந்தங்கிய இராயபாதூர் பெ.மா.மதுரை பெருமானவர்களும், கனந்தங்கிய பாண்டித்துரை தேவரவர்களுமேயாம்.

அவர்கள் இருவருமோ வித்துவான்கள் வளரும் உயர்பிச்சை அளித்து வருகின்றார்களன்றி அவர்கள் கற்றதினளவே நற்றாடொழுதுக் கடைத்தேறும் சாதுசங்கங்களை நாட்டினார்களில்லை. இத்தமிழ் வளர்க்கும் தாதாக்கள்