பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பெயரை புத்தசங்க சமணமுநிவர்களே அவருக்களித்துள்ளதினாலும், சமணமுநிவருள் சித்திபெற்ற சித்தர்களே அவரை பகவன் என்று சிந்தித்துள்ள படியாலும் நாயனார் திரிக்குறள் காப்பில் கடவுளாக சிந்தித்துள்ள பகவனென்னு மொழி புத்தபிரானைக்குறித்த மொழியேயாம்.

பின்கலை நிகண்டு

பகவனே யீசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
நீரினிற் பூவில் வானில் நினைந்துழி யொதுங்குகின்ற
சாரண ரெண்மராவர் சமணரிற் சித்திபெற்றோர்.

இத்தகைய சமணரிற் சித்திபெற்ற சித்தர்களும் தங்களது சற்குருவை எவ்வகையால் சிந்தித்துள்ளார்களென்னில்,

இடைகாட்டுசித்தர்

ஆதிபகவனையே பசுவே அன்பி நினைப்பாயேல்
சோதிபரகதிதான் பசுவே சொந்தமதாகாதோ.

இத்தகைய ஆதாரங்களே நாயனார்க் கூறியுள்ள “அகர முதல வெழுத்தெல்லாமாதி, பகவன் முதற்றே யுல” கென சிந்தித்திருக்கின்றார்.

அதன் கருத்தோவெனில் அகரமாகிய எழுத்து சகல எழுத்துக்களுக்கும் ஆதியாயிருந்து மக்களின் அறிவை விளக்குவதுபோல் உலகத்தில் தோன்றிய மநுகுலத்தில் மூவாமுதல்வனெனத் தோன்றி உலகெங்குமுள்ள மக்கள் யாவருக்கும் ஞானச்சுடர் விளக்கேற்றி சீர்திருத்தம் பெறச் செய்ததுமன்றி முத்திபேற்றிற்கும் முதல் வழிகாட்டியாக விளங்கியதுகண்டு புத்தபிரானையே ஆதி பகவனென சிந்தித்திருக்கின்றார்.

ஒளவை என்னும் அம்பிகாதேவியோ எனின் ஓரரசபுத்திரியாயிருந்தும் தாய்மாமன்கையால் கழுத்தில் பொட்டுக்கட்டிக்கொண்டு பிக்குணிகள் வாழும் இஸ்திரீகள் சங்கத்திற் சேர்ந்து புத்தபிரானாம் அருகனது ஞானசாதன உருவம்போல் ஓர் விக்கிரகஞ்செய்து தனது முடியில் தரித்துக்கொண்டு ஞானசாதனம் முதிர்ந்தபின்னர் வேம்புமரமென்னும் பூகமரத்தடியில் வீற்று உலகமக்களுக்கு அறநெறி விளக்கி அரசர்கள் முதல் குடிகள் வரை அறச்செல்வி என்றும், அம்மையென்றும் பௌத்தர்கள் கொண்டாடப்பெற்றவள் நமது ஞானத்தாய் என்னும் ஒளவையேயாகும்.

பின்கலை நிகண்டு

மரகதவல்லிபூக மரநிழ லுற்றவஞ்சி
பரமசுந்தரியியக்கி பகவதி யம்மையெங்க
ளருகனை முடிதரித்தா ளம்பிகை யறத்தின் செல்வி
தருமதேவதை பேரம்பா லிகையென்றுஞ் சாற்றலாமே.

சூளாமணி

கொவ்வையந் துவரிதழ்க் கோலவாயவட்
கிவ்வகை யணியென கூறியீண்டுநும்
அவ்வைதன் கோயில்புக் கடிசிலுண்கென
மவ்வலங் குழலியை மன்னனேவினான்.

இத்தகைய புத்தசங்கத்தைச்சார்ந்த சமணமுநிவர்களும், பௌத்த உபாசகர்களும் அரசமரத்தடியில் வீற்று ஞானோதயம்பெற்ற சித்தார்த்த சக்கிரவர்த்தியை உலகநாதனென்றும், அறவாழியானென்றும், புத்தரென்றும், அருகனென்றும், செல்வனென்றும், ஐயனாரென்றும், தருமதேவன் என்றும், பகவன் என்றும், வாலறிவனென்றுங் கொண்டாடியதுபோல்;

புத்தரது போதனையையும், அவருருவத்தையும் சிரசிற்றாங்கி வேப்பமரத்தடியில் வீற்று ஞானோதயம் பெற்ற அம்பிகாதேவியை உலகநாயகியென்றும், உலகமாதாவென்றும், அறச்செல்வி என்றும், ஔவை என்றும், அருகி என்றும், அம்மை என்றும், தருமதேவதை என்றும், வாலி என்றும், பகவதி என்றுங் கொண்டாடி வந்தார்கள்.

இத்தகைய சரித்திர ஆதாரங்களையும், பெயர்களின் ஆதாரங்களையும், அநுபவ ஆதாரங்களையும் கொண்டே அகஸ்தியர், நாயனார், அவ்வை