பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 553

இம்மூவரும் திராவிட குலத்தைச்சார்ந்த பௌத்தர்கள் என்றே தெரிந்துக் கொள்ளுவீராக அவலோகீசனென்றும், அவலோகிதரென்றும் பெயர் பெற்ற புத்தபிரான்பால் அகஸ்தியர் தமிழ்கற்று தென்னாடெங்கும் சங்கங்களை ஸ்தாபித்து சத்தியதன்மத்தைப் பரவச்செய்தார் என்பதற்கு பூர்வ இலக்கண நூலாம் விரசோழியமும் ஞானநூலாம் பதஞ்சலி ஞானமுமே போதுஞ் சான்றாம்.

4:30, சனவரி 4, 1911

19. தேசபாஷையை சிறுவர்களுக்கு ஏன் கற்பிப்பதில்லை

தேசபாஷையாம்

திராவிடம் ஒன்றை எடுத்துக்கொள்ளுவோம் இப் பாஷையானது இந்துதேசம் எங்ஙணும் பரவியிருந்தகாலத்தில் பூமியினது குணாகுணங்களை ஐந்துபாகமாகப் பிரித்து அவற்றின் விளைவுகளையும், அதனா லுண்டாம் பயன்களையும், அந்தந்த பூமிகளை ஆளும் அரசர்களையும், அவரவர்கள் பெயர்களையும், அந்தந்த பூமியில் வாழுங் குடிகளின் செயல்களையும், திராவிடபாஷையில் தெள்ளற விளக்கி அனந்த நூற்களை வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

அத்தகைய நூற்களை தற்கால சிறுவர்களுக்குத் கற்பித்துவருவதாயின் வித்தை புத்தி ஈகை சன்மார்க்கம் இவைகள் பெருகுவதுடன் குரு விசுவாசம், மாதுரு பிதுரு விசுவாசம், இராஜவிசுவாச முதலியவைகள் நிலைத்து தாங்கள் சுகச்சீர் பெருகுவதுடன் தங்களை அடுத்தோரையும் சுகச்சீர் பெறச் செய்விப்பார்கள். அத்தகைய நூற்களை சிறுவர்கள்கையில் எடுக்கவே கூடாமற் செய்துவிட்டபடியால் சிறுவர்கள் ஆங்கிலபாஷையை அனந்தமாக கற்றிருப் பினும் சுயபாஷையினதுச் செயலும் அதன் பயனுங் குறைந்துபோயிற்று. அத்தகைய நூற்களை ஆங்கில வித்வான்களுக்கு விளக்கி கலாசாலைகளில் கற்பிப்பதாயின் தற்காலம் நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதி வித்தியாசங்களும், மதக்கடை வியாபாரங்களும் இராஜாங்கத்தோருக்கு விளங்குவதுடன் சிறுவர்களும் விவேகவிருத்திபெற்று சாதித்தலைவர்களையும் சமயதலைவர் களையும் மதியாமற் போய்விடுவார்கள். பூர்வ பௌத்ததன்மத்தின் சிறப்புகளும் விளங்கிப்போமென்னுங் கருத்தினால் நூதன சாதித்தலைவர்களும், நூதன சமயத்தலைவர்களும் பூர்வ திராவிட நூற்களை கலாசாலைகளிற் பரவ விடாமலே செய்துவிட்டார்கள்.

தற்காலம் அச்சிட்டு வெளிவந்திருக்கும் திராவிடநூற்களும் ஆங்கிலேய ஆராய்ச்சிப் புருஷரால் வெளிவந்துள்ளதேயன்றி வேறன்று. பூர்வநூற்களின் ஆக்கியோன்கள் பெயர்கள் யாவும் விகுதியாகவிருக்குமேயன்றி பகுதியாக இருக்கமாட்டாது.

நத்தத்தனார், சாத்தனார், கீரனார், சோழனாரென்னுந் தொடர்மொழிகள் அற்றிருக்குமேயன்றி நத்தவையங்கார், சாத்தநாயுடு, கீரமுதலியார், சோழ செட்டியார் என்னுந் தொடர்மொழிகள் யாதொன்றுங் கிடையாது. அத்தகைய நூற்களையும் ஆக்கியோன் பெயர்களையும் காணக்கூடிய சிறுவர்களும் இராஜாங்கத்தோரும் பூர்வத்திலில்லாத் தொடர்மொழிகள் இப்போது தோன்றியுள்ளதால் இஃது நூதனசாதித்தொடர் மொழிகளென்றே தெரிந்துக்கொள்ளுவார்களென்னும் பீதியால் பூர்வ திராவிட நூற்கள் யாவையும் கலாசாலைகளிற் கொண்டுவரக்கூடாதென்னும் முயற்சியில் இருக்கின்றார்கள். ஆதலின் தேசபாஷயை தேசசிறுவர்களுக்கு விளக்காமலும் அதன் பயனை உணராமலும் போய்விடுகின்றார்கள்.

திராவிடமென்றால் நான்குபாஷைக்குரியப் பொதுப்பெயரென அவற்றை மாறுபடுத்திவிட்டார்கள். காரணம் : அதனந்தரார்த்தம் அறியாமலேயாம். மகட பாஷையாம் பாலிபாஷையை மூலமாகக்கெண்டு புத்தபிரானால் சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாம் தமிழையும் அக்கை தங்கையர்போலேற்படுத்தி இந்திய தேயமெங்கும் பரவச்செய்துவந்ததினால் வடதேசம் எங்கணுந் தமிழையே திராவிடமென்றும், இலங்காதீவம் எங்கணுந்