பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தமிழையே திராவிடமென்றும் வழங்கிவருவது அநுபவக் காட்சியாயிருக்க நாலு பாஷைக்குமே திரமிடம், திரமிடம் என்னும் பெயருண்டெனக் கூறுவாராயின் பூர்வ பதிநெட்டுபாஷைக்கு எப்பெயர் கூறுவரோ அறியேம். மகட பாஷையை ஆதாரமாகக்கொண்டு தோன்றியது ஒன்று சகடபாஷையும் ஒன்று திராவிடபாஷையுமேயாம். புத்தசங்கங்கள் தோரும் வட்டமிட்டிருந்த படியால் சகடபாஷையென்றும், நஞ்செழுத் தமைந்துள்ள படியால் தீராவிடபாஷை, திராவிடபாஷையென்றும் வழங்கிவந்தார்கள். இதன்றி செய்யுட்களில் அரம்வைத்துப் பாடிவிட்டான், நஞ்சுவைத்துப் பாடிவிட்டானென்னும் மொழிகளுக்கியல் அட்சரங்களிலும் நஞ்செழுத்துக்கள் சிலதும், அமுதெழுத்துக்கள் சிலதும் உண்டென்பதை நாளது வரையிற் காணலாம். நஞ் செழுத்தின் செயலைக்கொண்டு திராவிடமென்றும், அமுதெழுத்தின் செயலைக்கொண்டு தமிழென்றும் வழங்கிவந்தார்கள். இவ்விரு பெயருக்குங் காரணமுண்டு. இதனந்தரார்த்தம் அறியா பராயர்கள் அதனையும் வீணே மாறுபடுத்தி தமிழினது இனிதையும், திராவிடத்தினது வலிதையுங் கெடுத்தே வைத்திருக்கின்றார்கள். இவற்றை நாளுக்கு நாள் உணர்ந்துவரும் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் கலாசாலைகளில் வாசிக்கும் சிறுவர்களுக்கு மதப்படிப்பைக் கற்பிக்காமல் நீதியின்படிப்பைக் கற்பிப்பதாயின் பூர்வதமிழ் நூற்கள் யாவுந்தானே வெளிவரும். அவ்வகை வெளிவந்து சிறுவர்கள் வாசிப்பார்களாயின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்து தங்களே சுகச்சீர் பெறுவார்கள்.

5:39, மார்ச் 6, 1912

20. திராவிடமும் திராவிடரும்

வினா: ஐயா, எமதாபீசிலுள்ள ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்குங்கால் திராவிடர்களென்பது தமிழருக்குரியப் பெயரல்லவென்றும், அஃது கன்னடர், மராஷ்டகர், ஆந்திரர்க்குரியப் பொதுப்பெயரென்றும், திரமிடமென்பது திராவிடமென வழங்குகிறார்களென்றுங் கூறினார். அதற்கு ஏதேனும் விதியுண் டோவென வினாவினேன். அதற்கென்னவிதி யென்றார். திராவிடமென்னு மொழிக்கு மூலம் எவையென்றேன். அதற்கு மூலமென்ன வென்றார். அஃது காரியமொழியா, காரணமொழியா என்றேன். அதோர் காரணமொழியே யாகுமென்றார். யாது காரணமென்றேன், ஏதோர் உத்திரமுங் கூறாமல் மௌனத்திருந்துவிட்டார். எமக்குமது விளங்காமல் திகைத்திருக்கின்றேன்.

கோ. பார்த்தசாரதி. திரிசுரபுரம்,

விடை: வடமொழி தென்மொழியென்னும் இருவகுப்பில் தென்மொழி யாம் திராவிடம், தமிழ் என்னும் இருமொழிகளும் ஒருபாஷைக்குரிய பெயர்களேயாம். அம்மொழிகள் தோன்றியவற்றிற்கு மூலகாரணங்கள் யாதெனில், அவ்வட்சரங்களுள் நஞ்செழுத்தாம் விடவட்சரங்களும், அமுதெழுத்தாம் இனியவட்சரங்களுள்ளது கண்டு நஞ்செழுத்தால் தீராவிட மென்றும், அமுதெழுத்தால் தமிழென்றும் இருபெயர்களுண்டாயிற்று.

இஃது யாப்பிலக்கணங்கற்ற பெரியோர்களுக்கே நன்குவிளங்குமன்றி ஏனையோர் கெவணும் விளங்காவாம். திராவிட மென்னுந் தமிழை எடுத்தாளும்போதே வாசகநடைமிகவின்றி செய்யுள்நடையே பெருகியபடியால் எடுக்குஞ் செய்யுள் இனிதுமுடியுமாறு மொழி முதலாய் அந்தெழுத்துள் அமுது பொருந்தி மங்கலமிசையும் உளவறிந்து தாங்களும் பாடியுள்ளதன்றி ஏனையோரும் அப்பத்துப் பொருத்தங்களை இசைந்து பாடும் வழிகளையும் வரைந்துள்ளார்கள். அவைகளமைக்கவேண்டிய விதி: "மங்கலப் பொருத்தமே கங்கைமலரிலங், கார்புயல் பொன்மணி கடல்சொல் கரிபரி, சீர்புகழெழுத்தலர் திங்கடினகரன், றேர்வய லமுதந் திருவுலகாரண, நீர்பிறவருமுதனிலைச் சொல்லியல்பே" என்னும் மொழிமுதற்கொண்டு அவற்றுள் பத்து பொருத்தங்கள் அமையப் பாடவேண்டுமென்பது விதி.